விண்வெளித் தொழில்நுட்பத் துறைக்கு மத்திய அரசு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல்!
2025-26 நிதியாண்டுக்கான மதிப்பிடப்பட்ட நிதி ரூ. 150 கோடி, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தலா ரூ.250 கோடியும், நிதியாண்டு 29-30ல் ரூ.100 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
IN-SPACe-இன் கீழ் விண்வெளித் தொழில்நுட்பத் துறைக்கு வென்ச்சர் கேப்பிடலாக ரூ.1000 கோடி நிதி அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக வெளியான செய்தி அறிக்கையில்,
“நிதிச் செயல்பாடுகளின் தொடக்கத்திலிருந்து ரூ.1000 கோடி வென்ச்சர் கேப்பிடல் 5 ஆண்டுகள் வரை திட்டமிடப்பட்டுள்ளது,” என்று கூறப்பட்டுள்ளது.
முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் நிதி தேவைகளின் அடிப்படையில், வென்ச்சர் கேப்பிடல் ஆண்டுக்கு ரூ.150-200 கோடி வரை நிதியை அளிக்கும்.
2024-25 மத்திய பட்ஜெட்டின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த இந்த நிதி, இந்தியாவின் விண்வெளி தொழில்நுட்பத் துறையை முன்னேற்றுவதையும், தேசிய முன்னுரிமைகளுடன் சீரமைப்பதையும், புதுமை மற்றும் பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
2025-26 நிதியாண்டுக்கான மதிப்பிடப்பட்ட நிதி ரூ.150 கோடி, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தலா ரூ.250 கோடியும், நிதியாண்டு 29-30ல் ரூ.100 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி சுமார் 40 ஸ்டார்ட்அப்'களை ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்றிய அரசின் கூற்றுப்படி,
"நிறுவனத்தின் நிலை, அதன் வளர்ச்சிப் பாதை மற்றும் தேசிய விண்வெளி திறன்களில் அதன் சாத்தியமான தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் முதலீட்டின் குறிக்கோளான வரம்பு ரூ.10-60 கோடியாக இருக்கும்."
சாத்தியமாகக்கூடிய பங்கு முதலீட்டு வரம்பில் வளர்ச்சி நிலையில் ரூ.10 கோடி முதல் ரூ.30 கோடி வரையிலும், வளர்ச்சியின் பிற்பகுதியில் ரூ.30 கோடி முதல் ரூ.60 கோடி வரையிலும் அடங்கும்.
ஸ்டார்ட்-அப்'களை ஆதரிப்பதன் மூலம் இந்திய விண்வெளித்துறையில் வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்த மத்திய அரசு முயற்சி செய்வதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, இந்த நிதி மூலம் நிறுவனங்கள் ஆய்வு மற்றும் மேம்பாட்டிற்குச் செலவிடுவதன் மூலம் பணியாளர்கள் தேவை அதிகரிக்கும் என்பதால் வேலை வாய்ப்பு உருவாகும் என்று மத்திய அரசு நம்புவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.