Stock News: சென்செக்ஸ் 900+ புள்ளிகள் உயர்வு- அனைத்துக் குறியீடுகளும் ‘க்ரீன்’
இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் திங்கட்கிழமையான இன்று (28-10-2024) நல்ல ஏற்றம் கண்டு வருகின்றன.
இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் திங்கட்கிழமையான இன்று (28-10-2024) நல்ல ஏற்றம் கண்டு வருகின்றன. சென்செக்ஸ் தொடக்கத்தில் சுமார் 900+புள்ளிகள் உயர்ந்தது. தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 245 புள்ளிகள் உயர்வு கண்டது.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை10:44 மணி நிலவரப்படி 906 புள்ளிகள் உயர்ந்து 80,307.84 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 245.55 புள்ளிகள் உயர்ந்து 24,426.55 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் குறியீடு இன்று 722 புள்ளிகளும் தேசியப் பங்குச் சந்தையின் ஐடி குறியீடு 230 புள்ளிகளும் பிஎஸ்இ ஸ்மால் கேப் 321 புள்ளிகளும் உயர்ந்துள்ளது.
காரணம்:
இன்று பங்குச் சந்தை பேங்க் குறியீடுகளினால் உயர்ந்தாலும் சந்தை முதலீட்டு உணர்வு எச்சரிக்கையுடனேயே உள்ளது. அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீட்டை வாபஸ் பெற்று வருகின்றனர். குறுகிய காலத்தில் அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்களும் அதிகம் பங்குகளை விற்று வருவதால் கடுமையாகச் சரிந்து வந்தப் பங்குச் சந்தை இன்று உள்நாட்டு முதலீடுகள் அதிகரிப்பினால் உயர்ந்துள்ளது. பங்கு விலை உயரும் போது விற்று விடு என்னும் அணுகுமுறையும் இருந்து வருகிறது, இதனால் பங்குச் சந்தையில் மேல்/கீழ் போக்குகள் உச்சமாக உள்ளன.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
ஸ்ரீராம் பைனான்ஸ்
ஐசிஐசிஐ வங்கி
இண்டால்கோ
எஸ்பிஐ
எம் அண்ட் எம்
இறக்கம் கண்ட பங்குகள்:
கோல் இந்தியா
ஓ.என்.ஜி.சி.
சன் பார்மா
எல் அண்ட் டி
அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ்
இந்திய ரூபாயின் மதிப்பு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்றும் ரூ.84.00 ஆக உள்ளது.