Stock News: சென்செக்ஸ் தொடர் சரிவு; நிப்டி பேங்க் குறியீடு பின்னடைவு!
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 211 புள்ளிகள் குறைந்து 80,158 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 46 புள்ளிகள் குறைந்து 24,420.40 புள்ளிகளாகவும் உள்ளன.
இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் புதன்கிழமையான இன்று (30-10-2024) சரிவடைந்து வருகின்றன. சென்செக்ஸ் சுமார் 220 புள்ளிகள் பின்னடைவு கண்டது. தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 46 புள்ளிகள் சரிந்தது.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை10:20 மணி நிலவரப்படி, 211 புள்ளிகள் குறைந்து 80,158 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 46 புள்ளிகள் குறைந்து 24,420.40 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் குறியீடு இன்று கடும் சரிவு கண்டு 429 புள்ளிகள் குறைந்தது. தேசியப் பங்குச் சந்தையின் ஐடி குறியீடு 75 புள்ளிகளும் பிஎஸ்இ ஸ்மால் கேப் 679 புள்ளிகளும் உயர்ந்துள்ளன.
காரணம்:
அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீட்டை வாபஸ் பெற்று வருகின்றனர். குறுகிய காலத்தில் அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்களும் அதிகம் பங்குகளை விற்று வருவதால் கடுமையாகச் சரிந்து வருகிறது பங்குச் சந்தை. மேலும், முக்கிய நிறுவனங்களின் காலாண்டு லாபங்கள் திருப்திகரமாக இல்லாததும், நிப்டி பேங்க் குறியீட்டுப் பங்குகள் அதிகம் விற்கப்படுவதும் பங்குச் சந்தையை வீழ்ச்சிக்கு இட்டுச் சென்று வருகின்றன.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
அதானி எண்டர்பிரைசஸ்
மாருதி சுசூகி
பாரத் எலெக்ட்ரானிக்ஸ்
இறக்கம் கண்ட பங்குகள்:
சிப்ளா
டாரண்ட் பார்மா
ஹெச்.டி.எஃப்.சி. வங்கி
இந்திய ரூபாயின் மதிப்பு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்றும் ரூ.84.08 ஆக உள்ளது.