Stock News: ட்ரம்ப் வெற்றி எதிரொலி - பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 800+ புள்ளிகள் சரிவு!
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 737 புள்ளிகள் சரிந்து 79,640.36 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 244.20 புள்ளிகள் சரிந்து 24,239.85 புள்ளிகளாகவும் உள்ளன.
இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வியாழக்கிழமையான இன்று (7-11-2024) கடும் சரிவு கண்டுள்ளன. சென்செக்ஸ் சுமார் 800+புள்ளிகள் சரிந்தது. தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 244 புள்ளிகள் பின்னடைவு கண்டது.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை11:07 மணி நிலவரப்படி, 737 புள்ளிகள் சரிந்து 79,640.36 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 244.20 புள்ளிகள் சரிந்து 24,239.85 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் குறியீடு இன்று 311 புள்ளிகளும் தேசியப் பங்குச் சந்தையின் ஐடி குறியீடு 592 புள்ளிகளும் உயர்ந்தது. பிஎஸ்இ ஸ்மால் கேப் 39 புள்ளிககளும் பின்னடைவு கண்டுள்ளன.
காரணம்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதையடுத்து முதலீட்டாளர்கள் பெடரல் ரிசர்வின் வட்டி விகிதக் குறைப்பு, வரிக்குறைப்பு ஆகியவற்றை எதிர்நோக்கி முதலீடுகளை இறுக்கிப் பிடித்துள்ளனர். மேலும் டாலர் மதிப்பு அதிகரிக்க வாய்ப்பிருப்பதும் நிபுணர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளதால் பங்குச் சந்தைகள் சரிவு கண்டன.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ்
பிஎஸ்இ லிமிடெட்
டாடா ஸ்டீல்
டிக்சான் டெக்னாலஜி
எஸ்பிஐ
இறக்கம் கண்ட பங்குகள்:
ஹிண்டால்கோ
ஹெச்.டி.எஃப்.சி. வங்கி
டிசிஎஸ்
ரிலையன்ஸ்
டாடா மோட்டார்ஸ்
இந்திய ரூபாயின் மதிப்பு அனைத்து கால சரிவு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு சரிவடைந்து இன்று ரூ.84.29ஆக உள்ளது.