Stock News: மீண்ட பங்குச் சந்தையில் மீண்டும் தடுமாற்றம் - சரிவில் சென்செக்ஸ்...
இந்தியப் பங்குச் சந்தையில் வர்த்தகம் ஏற்றம் காணத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மீண்டும் வீழ்ச்சியை நோக்கி செல்லத் தொடங்கியது முதலீட்டாளர்களை கலகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியப் பங்குச் சந்தையில் வர்த்தகம் ஏற்றம் காணத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மீண்டும் வீழ்ச்சியை நோக்கி செல்லத் தொடங்கியது முதலீட்டாளர்களை கலகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மும்பை பங்குச்சந்தையில் இன்று (செப்.5) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 264.85 புள்ளிகள் ஏற்றம் கண்டு 82,617.49 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் 76.75 196.05 புள்ளிகள் உயர்ந்து 25,275.45 ஆக இருந்தது.
நேற்று கடும் வீழ்ச்சியை சந்தித்த இந்தியப் பங்குச் சந்தை வர்த்தகம் இன்று காலை பாசிட்டிவ் வைப் உடன் தொடங்கியதால் மகிழ்ச்சி அடைந்த முதலீட்டாளர்களின் உற்சாகம் சிறுதி நேரத்திலேயே கரைந்துவிட்டது. ஆம், மீண்டும் சரிவை சந்தித்து வருகிறது பங்கு வர்த்தகம்.
முற்பகல் 11.30 மணியளவில் சென்செக்ஸ் 100.53 சரிந்து 82,252.11 ஆக இருந்தது. அப்போது, நிஃப்டி 24.60 சரிந்து 25,174.10 ஆக இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை வர்த்தகம் புதன்கிழமை நிறைவடையும்போது சாதக, பாதகமின்றி தட்டையாகவே காணப்பட்டது. அதேபோல், தற்போது ஆசிய பங்குச் சந்தைகளான சியோல் மற்றும் ஷாங்காயில் எழுச்சியும், டோக்கியோ மற்றும் ஹாங்காங் பங்குச் சந்தைகளில் வீழ்ச்சியும் நிலவியது.
இவ்வாறாக, கலவையான சர்வதேச பங்கு வர்த்தகப் போக்கின் எதிரொலியால் இந்திய பங்குச் சந்தைகளும் தடுமாறி வருகிறது. அதேவேளையில், இந்திய பங்குச் சந்தைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சற்றே கூடுதல் ஆர்வம் காட்டி வருவது இன்றைய மீட்சிக்கு முக்கியக் காரணம்.
ஏற்றம் காணும் பங்குகள்:
அல்ட்ராடெக் சிமென்ட்
டாடா ஸ்டீல்
ஐடிசி
டைட்டன்
ஐசிஐசிஐ பேங்க்
ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
நெஸ்லே
பாரதி ஏர்டெல்
பஜாஜ் பின்சர்வ்
பஜாஜ் ஃபைனான்ஸ்
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா
இந்திய ரூபாய் மதிப்பு
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 பைசா உயர்ந்து டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.83.97 ஆக உள்ளது.
Edited by Induja Raghunathan