Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

ரூ.1,368 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கிய லாட்டரி அதிபர் - யார் இந்த மார்டின்?

தேர்தல் பத்திர விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், அது தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையம் இணையத்தில் பதிவேற்றியுள்ளது.

ரூ.1,368 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கிய லாட்டரி அதிபர் - யார் இந்த மார்டின்?

Friday March 15, 2024 , 3 min Read

தேர்தல் பத்திர விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், அது தொடர்பான விவரங்களை விவரங்களை தேர்தல் ஆணையம் இணையத்தில் பதிவேற்றியுள்ளது.

கோவையைச் சேர்ந்த லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் நிறுவனம் அதிகபட்சமாக 1,368 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து எஸ்பிஐ தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகள் அடங்கிய பிரமாண பத்திரத்தை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தது. இவ்விவரங்களை வெளியிடுவதற்கான அவகாசம் இன்றுடன் முடியவிருந்த நிலையில் அத்தகவல்கள் இணையதளத்தில் நேற்று பதிவேற்றம் செய்யப்பட்டன.

Electrol  Bond

முதலிடம் பிடித்த கோவை லாட்டரி நிறுவனம்:

’ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பிஆர்’, அதன் நிர்வாக இயக்குநரான லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டின், ஏப்ரல் 12, 2019 முதல் ஜனவரி 24, 2024 வரையிலான காலகட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு அதிக நன்கொடை அளித்துள்ளார். இது தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட தேர்தல் பத்திரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த காலகட்டத்தில் நிறுவனம் ஒட்டுமொத்தமாக ₹1,368 கோடியை தேர்தல் பத்திரங்களாக வழங்கியுள்ளது. தற்செயலாக, அமலாக்க இயக்குநரகம் மார்ச் 2022ல் நிறுவனம் மற்றும் பிற நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் ₹411 கோடியை இணைத்துள்ளது, பின்னர், அதற்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 இன் கீழ் செப்டம்பர் 09 அன்று கொல்கத்தா PMLA நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது.

யார் இந்த லாட்டரி மார்டின்?

சிக்கிம் மாநில அரசின் லாட்டரி சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து விற்று பணம் ஈட்டியதாக மார்ட்டின் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை அடிப்படையில், அமலாக்கத்துறை கடந்த 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், லாட்டரி தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டின் மற்றும் அவரது நிறுவனமான எம்/எஸ் ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் (பி) லிமிடெட் மற்றும் முன்பு மார்ட்டின் லாட்டரி ஏஜென்சிஸ் லிமிடெட் ஆகியவற்றுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டம் 2002 இன் கீழ் விசாரணையைத் தொடங்கியது.

மார்ட்டினும் அவரது கூட்டாளிகளும், லாட்டரி ஒழுங்குமுறைச் சட்டம், 1998 இன் விதிகளை மீறியதாகவும், சிக்கிம் அரசை ஏமாற்றி ஆதாயத்தைப் பெற குற்றவியல் சதியில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டப்பட்டது.

01.04.2009 முதல் 31.08.2010 காலக்கட்டத்தில் பரிசு வென்ற லாட்டரிகளுக்கான கோரிக்கையை உயர்த்தியதன் மூலம் ரூ. 910.3 கோடி அளவுக்கு சட்டவிரோதமாக லாபம் ஈட்டியதாக குற்றச்சாட்டப்பட்டது.
Electrol  Bond

இதையடுத்து, அமலாக்கத்துறை ஜூலை 2022ல் ரூ.250 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும், ஏப்ரலில் 409.92 கோடி சொத்துக்களையும் பறிமுதல் செய்தது.

இந்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்ட 5 நாட்களுக்குப் பிறகு, அதாவது, ஏப்ரல் 7 ஆம் தேதி, மார்டினின் பியூச்சர் கேமிங் நிறுவனமானது ரூ.100 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. மேலும், 2019-2024 காலகட்டத்தில், நிறுவனம் தனது முதல் தவணை தேர்தல் பத்திரங்களை அக்டோபர் 21, 2020 அன்று வாங்கியிருக்கிறது.

பிற நிறுவனங்கள் எவை?

22 நிறுவனங்கள் ரூ.100 கோடிக்கு மேல் நன்கொடை அளித்துள்ளன. ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட் (MEIL) ரூ.966 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியதன் மூலமாக பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. MEIL குழுமத்தின் வெஸ்டர்ன் UP பவர் டிரான்ஸ்மிஷன் கம்பெனி லிமிடெட் ரூ.220 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து,

  • Qwik சப்ளை செயின் பிரைவேட் லிமிடெட் ரூ.410 கோடி
  • ஹால்டியா எனர்ஜி லிமிடெட் - ரூ.377 கோடி,
  • வேதாந்தா லிமிடெட் ரூ.375.65 கோடி
  • எஸ்சல் மைனிங் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ரூ.224.45 கோடி பார்தி ஏர்டெல் லிமிடெட் ரூ. 198 கோடி
  • கெவென்டர் ஃபுட்பார்க் இன்ஃப்ரா லிமிடெட் ரூ.95 கோடி) எம்கேஜே குழும நிறுவனங்கள் ரூ.192 கோடி வழங்கியுள்ளன.

மொத்தத்தில், இந்தக் காலகட்டத்தில் ₹12,155 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் நன்கொடையாளர்களால் வாங்கப்பட்டுள்ளன. மேலும், அனைத்துக் கட்சிகளாலும் ரூ.12,769 கோடிக்கும் அதிகமாக பணமாக்கப்பட்டன.

எஸ்பிஐ இந்த தரவுகளை இரண்டு செட்களில் வழங்கியது. முதல் தொகுப்பில் ஒவ்வொரு தேர்தல் பத்திரம் வாங்கிய தேதி, பத்திரத்தை வாங்குபவரின் பெயர் மற்றும் வாங்கிய பத்திரத்தின் மதிப்பு ஆகியவை உள்ளன.