Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் பரிசளித்த ‘தடம்’ பெட்டகம் - உள்ளே என்னென்ன பொருட்கள் இருக்கு?

தமிழ்நாட்டின் பண்பாட்டை உலகளவில் கொண்டு செல்லும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் சந்திக்கும் விருந்தினர்களுக்கு தடம் பெட்டகத்தை பரிசாக அளித்து வருகிறார். அந்தப் பெட்டியில் தமிழகத்தின் பண்பாட்டை சொல்லும் வகையில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன எனத் தெரிந்து கொள்ளலாம்...

அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் பரிசளித்த ‘தடம்’ பெட்டகம் - உள்ளே என்னென்ன பொருட்கள் இருக்கு?

Monday September 02, 2024 , 2 min Read

2030ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்து, அதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முக்கிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சர்வதேச அளவில் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை கொண்டுவரும் முயற்சியில், தற்போது இதற்காக அமெரிக்காச் சென்றுள்ள அவர், உலக நாடுகளின் முன்னணி நிறுவனங்களை சந்தித்து வருகிறார்.

கடந்த 29-ம் தேதி நகரில் சான் பிரான்ஸிஸ்கோவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

thadam

அப்போது, தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக, அதில் கலந்து கொண்ட முதலீட்டாளர்களுக்கு 'தடம்' பெட்டகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நினைவுப் பரிசாக அளித்தார். இதனால் சமூகவலைதளப் பக்கங்களிலும் தடம் பெட்டகம் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது.

'தடம்' திட்டம்

இந்த தடம் என்பது தமிழ்நாட்டின் கைவினைக் கலைஞர்களால் உருவான கைவினைப் பொருள்களைக் கொண்டு, ‘ஸ்டார்ட்அப் தமிழ்நாடு’ என்ற திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது ஆகும்.

தமிழ்நாட்டின் வளமான பண்பாட்டை பாதுகாக்கும் வகையிலும், நமது பாரம்பரியமிக்க கைவினைப் பொருள்களுக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சியாகவும், சமகாலத்தில் அதன் முக்கியத்துவத்தை பறைசாற்றுவதற்காவும் இந்த ‘தடம்’ திட்டம் செயல்பட்டு வருகிறது.

பழங்கால கைவினைப் பொருள்களை சமகால தமிழர் பண்பாட்டுடன் இணைப்பதன் மூலம் அவற்றை உயிர்ப்புடன் வைத்திருப்பதே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம் ஆகும்.

இதோ, அந்த 'தடம்' பெட்டகத்துக்குள் என்னென்ன பொருட்கள் உள்ளன எனத் தெரிந்து கொள்ளலாம்...

* திருநெல்வேலியில் உருவாகும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழை நார்க் கூடை - நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் விளையும் தரமான வாழைநார்களைக் கொண்டு திருக்குறுங்குடி பகுதி பெண்கள் கலைத்திறனுடன் செய்யும் வாழை நார்க் கூடைகள் உலகத்தரம் வாய்ந்தவை.

* புலிகாட்டிலிருந்து பனை ஓலை ஸ்டாண்ட் - புலிகாட் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கவர்ச்சியான நகரம் ஆகும். இங்குள்ள பெண்கள் மென்மையான பனை ஓலைகளைக் கொண்டு பொருட்களைச் செய்யும் குடிசைத் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். நேர்த்தியான முறையில் தயாரிக்கப்படும் பொருட்கள் சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

thadam

* விழுப்புரத்தைச் சேர்ந்த டெரகோட்டா சிற்பங்கள் (குதிரை) - விழுப்புரத்தில் இருந்து தயாரிக்கப்படும் டெரகோட்டா குதிரை சிற்பங்கள் இந்த தடம் பெட்டியில் இடம்பெற்றுள்ளன.

 

* கும்பகோணத்திலிருந்து பித்தளை விளக்கு - கும்பகோணம் நகரத்தின் கைவினைக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பாரம்பரியமிக்க பித்தளை விளக்குகள் பெயர்பெற்றது. இந்த விளக்குகளும் தடம் பெட்டியில் உள்ளன.

thadam

* நீலகிரியிலிருந்து தோடா எம்பிராய்டரி சால் - நீலகிரி மாவட்டம் சுற்றுலாவிற்கு புகழ்பெற்றது மட்டுமின்றி பழங்குடியினர் அதிகம் வாழும் முக்கியமான மாவட்டமாகவும் திகழ்கிறது. அதிலும், தோடர் பழங்குடியின மக்கள் இங்கு மந்து எனப்படும் பகுதிகளில் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்த பழங்குடியின பெண்கள் கைவண்ணத்தில் உருவாகும் எம்பிராய்டரி பொருட்களை மக்கள் விரும்பி வாங்குகின்றனர்.

* பவானி ஜமுக்காளம் - ஈரோடு மாவட்டத்தின் ஒரு பகுதியான, பவானியில் தயாரிக்கப்படும் போர்வைகளையும், விரிப்புகளையும் குறிக்கின்றது. இது புவியியல் சார்ந்த குறியீடாக 2005-06 ஆண்டுகளில் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது.

பாரம்பரிய அடையாளம்

பவானியின் ஜமுக்காளத்தை உருவாக்கிய நெசவாளர்கள் முதல் கள்ளக்குறிச்சியின் டெரகோட்டா கைவினைக் கலைஞர்கள் மற்றும் நீலகிரியின் தோடா எம்பிராய்டரி கலைஞர்கள் வரை, சிறு சிறு சமூகங்கள் தமிழ்நாட்டின் பாரம்பரிய அடையாளத்தை இன்றும் உயிர்ப்புடன் வைத்துள்ளனர்.

இந்த தடம் திட்டம் மூலம் கைவினைக் கலைஞர்களை பன்னாட்டு சந்தைகளுடன் இணைத்து, தமிழ்நாட்டின் பண்பாட்டை உலகளவில் கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.