Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

வந்தாச்சு 'Chennai Bus’ ஆப் - இனி பஸ் வரும் நேரம், ரூட் எல்லாமே போனிலே பார்க்கலாம்!

சென்னையில் நகரப்பேருந்துகள் எந்த இடத்தில் இருக்கிறது. அடுத்து எங்கு வர உள்ளது. எத்தனை மணிக்கு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேரும் போன்ற தகவல்களை இனி சுலபமாக அறிந்துகொள்ள புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வந்தாச்சு 'Chennai Bus’ ஆப் - இனி பஸ் வரும் நேரம், ரூட் எல்லாமே போனிலே பார்க்கலாம்!

Wednesday May 04, 2022 , 2 min Read

சென்னையில் நகரப்பேருந்துகள் எந்த இடத்தில் இருக்கிறது. அடுத்து எங்கு வர உள்ளது. எத்தனை மணிக்கு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேரும் போன்ற தகவல்களை இனி சுலபமாக அறிந்துகொள்ள புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் நேரம், வந்து கொண்டு இருக்கும் இடம் ஆகியவற்றை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ’Chennai Bus’ என்ற புதிய செயலியை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார்.

chennai bus

இதுகுறித்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறுகையில்,

“சென்னையில் 3454 மாநகரகப் பேருந்து ஓடுகிறது. எல்லா பேருந்திலும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் சென்னை பேருந்துகள் இயக்கத்தை சென்னை பஸ் செயலி மூலம் தெரிந்து கொள்ளும் வகையில் புதிய செயலி அறிமுகம் செய்யபட்டுள்ளது. பேருந்து எந்த நேரம் வரும் என்பது குறித்து இனி இந்த செயலி மூலம் அறிந்து கொள்ள முடியும்,” என்றார்.

சென்னையின் போக்குவரத்துக் கழகமான MTC தினந்தோறும் சராசரியாக 3,200க்கும் அதிகமான மேற்பட்ட பேருந்துகளை இயங்குகிறது. அதில் சராசரியாக தினமும் 25 லட்சம் பேர் பயணிக்கின்றனர். சென்னை பஸ் ஆப் சேவையை மக்கள் பெறுவதற்காக நகரம் முழுவதும் இயங்கக் கூடிய 3,454 பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் MTC-யின் 6,026 பேருந்து நிறுத்தங்களையும், 602 வழித்தடங்களையும் கண்டறிய முடியும்.

முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் இந்த வசதி பொருத்தப்பட்டு பொதுமக்களுக்கு வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதே போல பஸ்களில் குற்றங்கள் நடப்பதை தடுக்க கேமரா மற்றும் அவசர அழைப்பு பொத்தான் போன்ற வசதிகளும் அளிக்கப்பட உள்ளன.

கொரோனா காலத்திற்குப் பிறகு அரசுப் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதனால் அரசுப் பேருந்துகளில் செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரு சில இடங்களில் பள்ளி மாணவர்கள் பேருந்தின் படியில் பயணிக்கும் நிலையை கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
mtc

புதிய பேருந்துகள் வாங்கும் போது தானியங்கி கதவுடன் வாங்க திட்டமிட்டு உள்ளோம். கிராமப்புரங்களிலும் இவ்வகை பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கபடும்.

”பெண்களுக்கான இலவச பேருந்துகள் சில இடங்களில் நிறுத்துவதில்லை என்ற புகார் குறித்து பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்,” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னைக்கு புதுசா வரும் மக்கள், சென்னைக்குள்ள சுத்த வழி தெரியாமல் நிற்குறவங்க என எல்லாரும் இனி கவலையில்லாமல் ஸ்மார்ட் போனில் சென்னை பஸ் செயலியை டவுன்லோடு செய்து வழித்தடம், நேரம் போன்ற தகவல்களை அறிந்துகொள்ளலாம்.