Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

10 ஆயிரம் முதலீடு; லட்சத்தில் லாபம் - பாரம்பரிய விவசாயத்திலிருந்து மாறி லாபம் ஈட்ம் விவசாயி!

குஜராத்தைச் சேர்ந்த மன்சுக் துதாத்ரா பாரம்பரிய விவசாயத்திலிருந்து மாறி சீத்தாப்பழ சாகுபடி செய்து லட்சங்களில் லாபம் ஈட்டி வருகிறார்.

10 ஆயிரம் முதலீடு; லட்சத்தில் லாபம் - பாரம்பரிய விவசாயத்திலிருந்து மாறி லாபம் ஈட்ம் விவசாயி!

Thursday May 26, 2022 , 2 min Read

மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொல்வார்கள். அது உண்மைதான். நம்மை சுற்றி எத்தனையோ மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அந்தந்த சூழலுக்கு ஏற்ப நாமும் நம்மை மாற்றிக்கொண்டால் முன்னேற்றம் எளிதாகும்.

குஜராத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பாரம்பரிய விவசாய நடைமுறைகளில் இருந்து மாறி தொழில்நுட்பத்தின் உதவியுடன் இன்று லாபம் ஈட்டி வருகிறார்.

குஜராத்தின் வீர்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மன்சுக் துதாத்ரா. இவர் இன்று சீத்தாப்பழ விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். வெங்காயம், நிலக்கடலை, தக்காளி போன்ற பாரம்பரிய பயிர்களையே இவரும் விளைவித்து வந்தார்.

1

மன்சுக் கடினமாக உழைத்தார். விவசாய வேலைகளில் அதிகம் முதலீடு செய்தார். ஆனால், எந்த லாபமும் இல்லை. மற்ற விவாயிகளுக்கும் இதே நிலைதான். என்றாலும் மன்சுக் மாறுபட்டவர். மற்றவர்களைப் போல் இவர் கவலைப்பட்டுக்கொண்டே இருக்கவில்லை. பிரச்சனைக்கான தீர்வை யோசித்தார். மாற்று விவசாயத்தில் ஈடுபடுவது பற்றி சிந்தித்தார். விளைவு சீத்தாப்பழ சாகுபடியில் ஈடுபட்டு லட்சத்தில் லாபம் ஈட்டி வருகிறார்.

சிறு முதலீட்டில் அதிக லாபம்

சீத்தாப்பழ சாகுபடி செய்யத் தீர்மானித்த மன்சுக் தனது சேமிப்பில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தார். புதிய தொழில்நுட்பங்களைப் புரிந்துகொண்டார். கடினமாக உழைத்தார்.

மூன்று முதல் நான்காண்டுகளில் உற்பத்தி அதிகரித்தது. இன்று இவரது நிலத்தில் வளரும் சீத்தாப்பழம் ஒவ்வொருன்றும் கிட்டத்தட்ட ஒரு கிலோ எடை கொண்டிருக்கிறது.

மன்சுக் சீத்தாப்பழம் சாகுபடி செய்து இந்தியாவில் விற்பனை செய்வதுடம் துபாய்க்கும் அனுப்பி வைக்கிறார்.

ஹைபிரிட் வகைகளுக்கான சந்தை தேவை

மன்சுக் ஆரம்பத்தில் நாட்டு ரக சீத்தாப்பழங்களை சாகுபடி செய்து வந்தார். பிறகு மற்ற வகைகள் குறித்து அவருக்குத் தெரிய வந்தது. ஹைபிரிட் வகை சீத்தாப்பழங்களுக்கு அதிக தேவை இருப்பதைப் புரிந்துகொண்டார். நாட்டு சீத்தாப்பழங்களில் 35 முதல் 40 விதைகள் இருக்கும் நிலையில் ஹைபிரிட் சீத்தாப்பழங்களில் 15 முதல் 20 விதைகள் மட்டுமே இருக்கும். இதுதான் தேவை அதிகரிக்கக் காரணம்.

1
”ஹைபிரிட் சீத்தாப்பழங்களை அதிகளவுல உற்பத்தி செய்ய முடியும். அதோட சுவையும் பிரமாதமாக இருக்கும். வருஷத்துக்கு 10 லட்ச ரூபாய் வரைக்கும் நாங்க லாபம் பார்க்கறோம். முறையா சந்தைப்படுத்தினதும் லாபம் இன்னும் அதிகரிச்சிருக்கு,” என்று நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டார் மன்சுக்கின் மகன் கேத்தன்.

மகன்கள் உதவி

மன்சுக்கிற்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அவர்கள் படிப்பை முடித்துவிட்டனர். வேலைக்கு செல்ல இருவரும் விரும்பவில்லை. அப்பாவின் விவசாய வேலைகளில் அவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

மார்க்கெட்டிங் வேலைகளை மகன்கள் கவனித்துக்கொள்ள மன்சுக் விவசாயத்தில் கவனம் செலுத்தி வருகிறார். 10 பீகா நிலத்தில் இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட 900 ஹைபிரிட் வகை சீத்தாப்பழங்கும் சில நாட்டு வகை சீத்தாப்பழங்களும் சாகுபடி செய்து வருகிறார்கள்.

இவர்களது தோட்டத்தில் தினமும் 35 முதல் 40 கிலோ சீத்தாப்பழங்கள் கிடைக்கின்றன. இவை சந்தையில் கிலோ 40 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

“ஹைபிரிட் வகைகள் விரைவில் கெட்டுப்போகாது. 10-15 நாட்கள் வரை கெடாமல் நன்றாக இருக்கும். இதனால் விவசாயிகளும் விற்பனையாளர்களும் பயனடைகிறார்கள்,” என்கிறார் மன்சுக்.

தமிழில்: ஸ்ரீவித்யா