Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

யூடியூப்பில் பணம் சம்பாதிக்க உதவும் 7 சிறந்த வழிகள்!

பில்லியனுக்கும் மேல் மாதாந்திர பயனாளிகள் கொண்ட யூடியூப் 50 சதவீத இணைய போக்குவரத்திற்கு காரணமாக இருக்கிறது. உள்ளட்டக்க உருவாக்குனர்கள் இந்த மேடை மூலம் பணம் சம்பாதிக்கும் வழிகள் என்ன?

யூடியூப்பில் பணம் சம்பாதிக்க உதவும் 7 சிறந்த வழிகள்!

Saturday September 03, 2022 , 4 min Read

யூடியூப் மூலம் பணம் சம்பாதிப்பதற்கு பலரும் அறிந்த வழி விளம்பரம் தான் என்றாலும் மேலும் பல வழிகளும் இருக்கின்றன.

பில்லியனுக்கும் மேல் மாதாந்திர பயனாளிகள் கொண்ட யூடியூப் 50 சதவீத இணைய போக்குவரத்திற்கு காரணமாக இருக்கிறது. ஒவ்வொரு நிமிடமும் 500 மணிநேர அளவிலான வீடியோ பதிவேற்றப்படுகிறது. ஆனால், இந்த மேடை மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?

Image : shutterstock

யூடியூப் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?

1. யூடியூப் பார்ட்னர் திட்டம்

யூடியூப் பயனாளிகள், இந்த இணையதளம் வாயிலாக பிரத்யேக வசதிகளை யூடியூப் பார்ட்னர் திட்டம் மூலம் அணுகலாம். இந்தத் திட்டத்தில் இணைவது மூலம் எளிதாக சம்பாதிக்கலாம் என்றாலும், இது மட்டும் வழி அல்ல. ஆட்சென்ஸ் கணக்கை (Ad Sense) அமைத்து, பார்வையாளர்களை ஈர்ப்பதே இதற்கு போதுமானது.

வீடியோ விளம்பரங்கள் தவிர யூடியூப் பார்ட்னர்கள் வேறு பல விதங்களிலும் வருவாய் பெறலாம். யூடியூப் பிரிமியம் கட்டணம், சூப்பர் சாட், சானல் உறுப்பினர் சேவை மற்றும் பிராடக்ட் ஷெல்ப் போன்ற வழிகள் மூலம் பயனாளிகளிடம் இருந்து வருவாய் பெறலாம்.

இதற்கான வழிகாட்டுதல் இதோ:

ஸ்டெப் 1 : யூடியூப் சேனல் துவக்கவும். தனித்துவமான சேனலுக்கான அனைத்து அம்சங்களையும் பயன்படுத்திக்கொள்ளவும்.  

ஸ்ட்பெ 2: யூடியூப் பார்ட்னர் திட்டத்திற்கு தகுதி பெறும் வகையில் உங்கள் சேனலை உயர்த்திக் கொள்ளவும். 12 மாத காலத்தில் 1,000 உறுப்பினர்கள் மற்றும் 4,000 பார்வை நேரம் இதற்குத் தேவை.

ஸ்டெப் 3: யூடியூப் ஆட்சென்ஸ் வழிகாட்டியை பின்பற்றி ஆட்சென்ஸ் கணக்கு அமைக்கவும்.

ஸ்டெப் 4: பணமாக்கும் அம்சங்களை கவனிக்கவும். ஒவ்வொரு சேனலுக்கும் தகுதிகள் வேறுபடும். பயனாளி 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.

மற்ற அம்சங்கள் வருமாறு:

விளம்பர வருவாய்: விளம்பரங்களை ஈர்க்க, வர்த்தக நட்பிலான உள்ளடக்கத்தை அளிக்கவும். சர்ச்சை அதிகம் இல்லை என்றால் வீடியோ ஏற்றதாக இருக்கும். விளம்பரதாரர்களும் தயக்கம் இல்லாமல் வருவார்கள். அதிக விளம்பர பணம் கிடைக்கும்.

பிரிமியம் வருவாய்: யூடியூப் பிரிமியம் உறுப்பினர் உங்கள் உள்ளடக்கத்தை பார்த்தால், அதில் ஒரு பங்கு கிடைக்கும்.

சேனல் உறுப்பினர் கட்டணம்: 30,000 உறுப்பினர்களுக்கு மேல் இருந்தால், சேனல் கட்டணம் பெறலாம். அதாவது, உறுப்பினர்கள் விரும்பினால் கட்டணம் செலுத்தலாம்.

பொருட்கள் விற்பனை:  10,000 உறுப்பினர்கள் இருந்தால், யூடியூப் ஸ்டோர் மூலம் விற்பனை செய்யலாம்.  

சூப்பர் சாட்: லைவ் ஸ்ட்ரிம்களின் போது பார்வையாளர்கள் உங்களுக்கு பணம் அளிக்கலாம். எனினும் இந்த வசதி உங்கள் நாட்டில் அளிக்கப்பட வேண்டும்.

ஆய்வுகள்: பார்ட்னராகும் சேனல்கள் அதிக தரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என யூடியூப் எதிர்பார்க்கிறது. யூடியூப் விதிகள், பார்ட்னர் திட்ட விதிகள் மற்றும் காப்புரிமைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

2. விற்பனை

ஒரு உருவாக்குனர் என்பதோடு, தொழில்முனைவோர் மனநிலை வேண்டும். முதலில் வர்த்தகராக இருந்தால், நிச்சயம் விற்பனை செய்வதற்கான பொருளும் இருக்கும். அதற்கேற்ப உத்திகளை செயல்படுத்த வேண்டும். பாடகர் கான்யே டி-ஷர்ட்டும் விற்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

விற்பனைக்கான உத்திகள் சில:

பொருள் வடிவமைப்பு: நீங்கள் விற்கும் பொருள் பார்வையாளர்களுடனான் உங்கள் உறவை பிரதிபலிக்க வேண்டும். அதாவது தனித்து நிற்க வேண்டும்.

குறிப்பு: விற்பனைக்கான பொதுவான ஐடியாக்கள் உள்ளன. குறிப்பிட்ட மைல்கல் நிகழ்வுகள் தொடர்பான பரபரப்பை உண்டாக்கி தொடர்புடைய பொருளை விற்கவும்.

சொந்த பொருள்: பொருட்களை விற்பனை செய்ய அவற்றை தருவிக்க வேண்டும். ஒரு சில விற்பனையாளர்கள் பொருட்களை அனுப்பி வைக்கலாம். மற்றவர்கள் கையிருப்பு நிர்வாகம், ஷிப்பிங், திரும்பி அனுப்புதல் முதலியவற்றை கவனித்துக்கொள்வார்கள்.

முகப்புத்தோற்றம்: விற்பனையை நிர்வகிக்க வேறு இணையதளம் தேவை. இதற்கென யூடியூப் அனுமதிக்கும் இணையதளங்கள் பட்டியலை பார்க்கவும்.

யூடியூப் பார்ட்னர் விற்பனை: பார்ட்னர்கள் யூடியூப் ஷெல்ப் வசதி மூலமும் விற்பனை செய்யலாம். இதற்கான தகுதி குறிப்புகளை அறியவும்.

உங்கள் வீடியோவில் விளம்பரம்: புதுமையான உத்திகளை யோசிக்கவும். வீடியோவில் பொருட்கள் தோன்ற செய்யுங்கள். ஆடையில் பொருட்களை தோன்றச்செய்யலாம். இணையதள இணைப்பு மற்றும் பொருட்கள் பற்றிய குறிப்பை தெரிவிக்கவும்.

குறிப்பு: அடிக்கடி நன்றி தெரிவிக்கவும். இதன் மூலம் உங்கள் பொருள் எந்த அளவு விரும்பபடுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

யூடியூப்

3. பிரிமியம் தொகை

செல்வாக்காளர்கள் இன்ஸ்டாகிராமில் மட்டும் தான் என்றில்லை. #sponcon அணுகுமுறையை பின்பற்றுவதன் மூலம், லாபத்தில் யூடியூப்பிற்கு பங்களிப்பதில் இருந்து விலக்கு பெறலாம். பிராண்ட்கள் நேரடியாக பணம் செலுத்தும். இதை யூடியூபர்கள் அதிகம் நாடுவது நல்லது.

பிராண்ட் பார்ட்னரை கண்டறிந்து வெளிப்படையாக செயல்படவும். ஆர்வம் உள்ள பார்வையாளர்களைக் கொண்டிருந்தால் பிராண்ட்களை ஈர்க்கலாம். உள்ளடக்கமும் இலக்கு சந்தைக்கு ஏற்றதாக இருக்கும்.

4. துணை பார்ட்னர்

உங்கள் யூடியூப் பார்வையாளர்கள் பரப்பு பெரியதாக இல்லாவிட்டாலும், தீவிரமானவர்களை கொண்டிருந்தால் நிறுவனங்கள் துணை மார்க்கெட்டிங் மூலம் விளம்பரம் செய்ய முன்வரும்.

இத்தகைய யூடியூபர்கள் தங்கள் பார்வையாளர்களை குறிப்பிட்ட இணையதளத்திற்கு விஜயம் செய்ய ஊக்குவிப்பார்கள். இந்த ஒப்பந்தம் மூலம் வரும் விற்பனையில் ஒரு பங்கு கிடைக்கும்.

5. ரசிகர்கள் தரும் பணம்

அனைத்து விதமான வருவாய் வழிகளும் இதில் ஒருங்கிணைகிறது. பார்வையாளர்கள் பணம் செலுத்துவதன் மூலம் தங்கள் அபிமானத்தை காண்பிக்க வழி செய்யவும்.

6. கூட்ட நிதி

ஆன்லைன் நன்கொடை கோரிக்கைகள் அதிகரிக்கின்றன. கூட்ட நிதி மூலம் யூடியூபர்கள் பணம் ஈட்டலாம். தனிப்பட்ட திட்டம் அல்லது சேனல் தொடர்பான திட்டத்திற்கான நிதி திரட்டலாம். யூடியூப் அங்கீகரிக்கும் கூட்ட நிதி தளங்கள் உள்ளன.

7. ஊடக உரிமம்

பல ஊடகங்கள், தங்கள் பார்வையாளர்களுக்கு அளிப்பதற்கான பிரபல வீடியோக்களை எதிர்பார்க்கின்றன. இதற்காக கட்டணம் செலுத்தவும் தயாராக உள்ளன. எனவே, உரிமம் அளிப்பதன் மூலம் உங்கள் உள்ளடக்கம் வாயிலாக பணம் பெறலாம்.

முக்கிய குறிப்புகள்: யூடியூப்பில் பிரபலமாவதை தீர்மானிக்கும் பல அம்சங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாதவை. யூடியூப் அல்கோரிதம் மற்றும் பார்வையாளர்கள் முன்னுரிமை இதில் அடங்கும். எவ்வளவு பிரபலமான சேனல் என்றாலும் அல்லது எவ்வளவும் பணம் ஈட்டும் சேனலாக இருந்தாலும் இது பொருந்தும்.

ஆனால், விதிகளை பின்பற்றி, தகுதியை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டாம். இந்த வழிகள் உங்களுக்கு நல்ல பலன் அளிக்கும்.

ஆங்கிலத்தில்: யுவர்ஸ்டோரி குழு | தமிழில்: சைபர் சிம்மன்