மைக்ரோசாப்ட் விண்டோஸின் தலைவரான ஐஐடி மெட்ராஸ் பட்டதாரி - யார் இந்த பவன் டவுலூரி?
ஐஐடி மெட்ராஸின் முன்னாள் மாணவரான பவன் டவுலூரி மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்ஃபோஸின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐஐடி மெட்ராஸின் முன்னாள் மாணவரான பவன் டவுலூரி மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்ஃபோஸின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்பு துறையை வழிநடத்திய பனோஸ் பனாய், அமேசானில் பணியில் சேருவதற்காக கடந்த ஆண்டு ராஜினாமா செய்தார். இதனையடுத்து, மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்ஃபேஸ் குழுக்களை தனித்தனி தலைமையின் கீழ் பிரிக்கப்பட்டன. தற்போது டவுலூரி, விண்டோஸ் மற்றும் சர்ஃபேஸ் இரண்டிற்கும் ஒரே தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
இந்தியாவின் ஐஐடி, ஐஐஎம் போன்ற முன்னணி பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் உலகின் முன்னணி நிறுவனங்கள் பலவற்றிலும் கோடிகளில் சம்பளம் பெற்று வருகின்றனர். இதுதொடர்பான செய்திகள் அடிக்கடி வெளியாகி வரும் நிலையில், ஐஐடி மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஒருவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் உயர் பதவியில் அமர்ந்துள்ளது இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
யார் இந்த பவன் டவுலூரி?
ஐஐடி மெட்ரால் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்ற பவன் டவுலூரி, 1999ல் அமெரிக்காவில் மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்ற கையோடு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேர்ந்து சுமார் 23 வருடமாக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்னதாக சர்பேஸ் குழுவை கண்காணித்து வந்த பவன் டவுலூரி தற்போது Microsoft Windows and Surface பிரிவின் தலைவராக உயர்ந்துள்ளார்.
ஏற்கனவே மைக்ரோசாஃப்ட் விண்டோஸை கவனித்து வந்த மைக்கேல் பரக்கின் என்பவருக்கு புதிய பதவிகள் கொடுக்கப்பட்டதை அடுத்து, பவன் டவுலூரிக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எக்ஸ்பீரியன்ஸ் அண்ட் டிவைசஸ் பிரிவைச்சேர்ந்த ராஜேஷ் ஜா மைக்ரோசாப்ட் AI அமைப்பை நிறுவியதைத் தொடர்ந்து Windows மற்றும் Web Experiences (WWE) குழுவில் உள்ள நிறுவன மாற்றங்கள் குறித்து குழுவிடம் தெரிவித்தார்.
பவன் டவுலூரி தலைமையில் AI சகாப்தத்திற்கான சிஸ்டம், எக்ஸ்பீரியன்ஸ் மற்றும் டிவைஸ் பிரிவை முழுமையாக மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டே, விண்டோஸ் எக்ஸ்பீரியன்ஸ் மற்றும் டிவைஸ் குழு ஒன்றாக இணைக்கப்பட்டதாக அறிவித்துள்ளார்.