சொந்த வர்த்தகம் துவக்க நீங்கள் தயாரா எனக் கண்டறிவது எப்படி?
உங்கள் சொந்த வர்த்தகத்தை துவக்கி தொழில்முனைவு கனவை நினைவாக்க உதவும் பத்து அறிகுறிகளை கண்டறியும் வழிகள்.
உங்கள் சொந்த வர்த்தகத்தை துவக்குவது துணிச்சலான முடிவு. அறிமுகம் இல்லாத பரப்பிற்குள் நுழைவதற்கான பாய்ச்சல் இது. முதலாளியாக இருக்க வேண்டும் அல்லது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதோ, எது உங்கள் நோக்கமாக இருந்தாலும் தொழில்முனைவு என்பது உற்சாகமானதாகவும், அச்சமூட்டுவதாகவும் இருக்கலாம்.
ஆனால், நீங்கள் இதற்கு ஏற்றவர் என்பதை அறிவது எப்படி?
இந்த பயணத்திற்கு அருமையான ஐடியா மட்டும் போதாது, மன உறுதி, வளைந்து கொடுக்கும் தன்மை மற்றும் சரியான மனநிலை தேவை. தொழில்முனைவு பாய்ச்சலுக்கு நீங்கள் தயார் என உணர்த்தும் பத்து அறிகுறிகுகளை இந்த கட்டுரை விளம்க்குகிறது.
மாத சம்பளத்தை விட்டு விட்டு உங்கள் ஈடுபாட்டை பின் தொடரும் பயணத்திற்கு நீங்கள் தயாரா என அறிய படியுங்கள். நீங்கள் ஏற்கனவே தயாராகவும் இருக்கலாம்.
தொழில்முனைவு தயார் நிலையை உணர்த்தும் 10 அறிகுறிகள்:
1. உங்களிடம் தெளிவான பார்வை
வெற்றிகரமான வர்த்தகம், உங்களை உற்சாகமாக்கி, ஊக்குவிக்கும் பார்வையில் இருந்து துவங்குகிறது. ஒரு எண்ணத்தின் வாய்ப்பை, அது தீர்க்கக்கூடிய பிரச்சனைகளை, போட்டியாளர்களிடம் இருந்து தனித்து நிற்கும் விதத்தை உங்களால் பார்க்க முடிந்தால் நீங்கள் சரியான பாதையில் இருக்கிறீர்கள் என பொருள். வர்த்தக இலக்கிற்கான தெளிவான வரைபடம் கொண்டிருப்பது நீங்கள் தயார் என்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறி.
2. பிரச்சனைகளை தீர்ப்பதில் உங்களிடம் ஆர்வம்
ஈடுபாடு தான் தொழில்முனைவோர்களை சவால்களுக்கு தயராக்குகிறது. சந்தையில் உள்ள பிரச்சனைக்கு தீர்வு காண அல்லது ஒரு தேவையை நிறைவேற்றும் ஈடுபாடு உங்களிடம் இருந்தால், வெற்றிக்குத் தேவையான விடாமுயற்சியும் உங்களிடம் இருக்கும்.
3. சந்தை வாய்ப்பை நீங்கள் கண்டறிந்துள்ளீர்கள்
உங்கள் திறமைகள் மற்றும் ஆர்வங்களுடன் பொருந்தும் சந்தையில் உள்ள இடைவெளி முக்கிய பச்சைக்கொடியாகும். நிறைவேற்றப்படாத தேவைகளை பூர்த்தி செய்யும் போது தொழில்முனைவோர் சிறந்து விளங்குகின்றனர். உங்கள் வாடிக்கையாளர்கள் பற்றி ஆய்வு செய்து அவர்களின் பிரச்சனைகளை புரிந்து கொண்டிருந்தீர்கள் எனில், வர்த்தகத்தை துவக்க நீங்கள் தயாராகி விட்டீர்கள்.
4. உங்களிடம் பொருத்தமான திறன்கள்
தொழில்முனைவு பயணத்தில் அனுபவம் முக்கியம். வேலை, பகுதிநேர வேலை அல்லது படிப்பு மூலம் வர்த்தகத்திற்கு தேவையான அடிப்படைகளை அறிந்திருப்பது அவசியம். உங்கள் திறன்களில் நம்பிக்கை இருந்தால் தொடர்ந்து முன்னேறலாம்.
5. உங்களிடம் ஆதரவு அமைப்பு இருக்கும்.
வர்த்தகத்தை துவங்குவது சவாலாக அமையலாம். ஆனால், நல்ல ஆதரவு இருந்தால் சமாளித்துவிடலாம். வழிகாட்டிகள், நண்பர்கள், ஆலோசனை அல்லது ஆக்கப்பூர்வமான எதிர்வினை அளித்து உதவுவார்கள்.
6. நிதி நோக்கில் தயார் நிலை
நிதி தயார் நிலை முன் நிபந்தனை அல்ல என்றாலும், நடைமுறையை உணந்திருப்பது மற்றும் செலவுகளை ஈடு செய்வது முக்கியம். ஆரம்ப நிலையை சமாளிக்க தேவையான சேமிப்பு கைவசம் இருந்து, தெளிவான திட்டம் இருந்தால் போதும்,
7. உங்களிடம் இடர் வரவேற்பு தன்மை
தொழில்முனைவு இயல்பாகவே இடர்மிக்கது. ஆனால், உங்களால் இடர்களை சமாளிக்க முடியும் என்றால் பிரச்சனை இல்லை. இடர்களை எதிர்கொள்ளும் தன்மை வெற்றிகரமான வர்த்தர்களின் முக்கிய அம்சமாகும்.
8. உங்களிடம் சுய ஊக்கம்
சொந்த வர்த்தகம் நடத்துவதற்கு ஈடுபாடு தேவை. ஆரம்ப நிலையில் பலவேலைகளை செய்ய வேண்டியிருக்கும். உங்களிடம் சீரான ஒழுக்கம் இருந்தால் நேர நிர்வாகத்தை கையாண்டு தொடர்ந்து செயல்பட ஊக்கம் பெறலாம்.
9. உங்களிடம் கற்றல் பழக்கம்
தொழுல்முனைவோரிடம் எல்லாவற்றுக்கும் பதில் கிடையாது. கற்கும் ஆர்வம், இருந்தால் நிலைமைக்கு ஏற்ப கற்றுக்கொள்ளலாம். உங்களிடம் இந்த ஆர்வம் இருந்தால் நீங்களும் தயார் தான்.
10. உங்களால் தவிர்க்க முடியாது
இது தான் மிகவும் முக்கியமானது. தோல்வி பற்றிய கவலையை விட, வர்த்தகத்தை துவக்காமல் இருப்பதை உங்களால் நினைத்து கூட பார்க்க முடியாதது. உங்கள் வர்த்தக எண்ணம் பற்றியே யோசிப்பவராக இருந்தால், நீங்கள் தொழில்முனைவுக்கு தயார்.
சொந்த வர்த்தகம் துவங்குவது சவால்கள் மற்றும் பரிசுகள் நிறைந்தது. இதற்கு சரியான நேரம் என கிடையாது. நீங்கள் தயாராக உணர்ந்தால், தொழில்முனைவு பயணத்தில் இறங்கி கனவை நினைவாக்கலாம்.
ஆங்கிலத்தில்: சானியா அகமது கான்
Edited by Induja Raghunathan