Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: ஷாக் தந்த தங்கம் விலை - சவரனுக்கு ரூ.960 உயர்வு!

கடந்த சில நாட்களாக பெரிதாக மாற்றமின்றி இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை தற்போது நகை வாங்குவோருக்கு அதிர்ச்சியூட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது.

Gold Rate Chennai: ஷாக் தந்த தங்கம் விலை - சவரனுக்கு ரூ.960 உயர்வு!

Friday September 13, 2024 , 2 min Read

கடந்த சில நாட்களாக பெரிதாக மாற்றமின்றி இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை தற்போது நகை வாங்குவோருக்கு அதிர்ச்சியூட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது.

சென்னையில் நேற்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.10 குறைந்து ரூ.6,705 ஆகவும், சவரன் விலை ரூ.80 குறைந்து ரூ.53,640 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.10 குறைந்து ரூ.7,315 ஆகவும், சவரன் விலை ரூ.80 குறைந்து ரூ.58,520 ஆகவும் இருந்தது.

தற்போது, அதிரடியாக தங்கம் விலை உயர்ந்திருப்பது, நகை வாங்க விழைவோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை நிலவரம் - வெள்ளிக்கிழமை (13.9.2024):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.120 உயர்ந்து ரூ.6,825 ஆகவும், சவரன் விலை ரூ.960 உயர்ந்து ரூ.53,640 ஆகவும் இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.130 உயர்ந்து ரூ.7,445 ஆகவும், சவரன் விலை ரூ.1040 உயர்ந்து ரூ.59,560 ஆகவும் இருக்கிறது.

வெள்ளி விலை:

சென்னையில் வெள்ளிக்கிழமை (13-9-24) 1 கிராம் வெள்ளி விலை ரூ.3.50 உயர்ந்து ரூ.95 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.3,500 உயர்ந்து ரூ.91,500 ஆகவும் விற்பனையாகிறது.

gold

காரணம் என்ன?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. பங்குச் சந்தையில் ஏற்றமும் இறக்குமாக மாறி மாறி நிலையற்றத் தன்மை நிலவுவதால், தங்கம் மீது முதலீட்டாளர்கள் ஆர்வம் திரும்பியுள்ளதே இந்த விலை உயர்வுக்கு காரணம் என்கின்றனர் வர்த்தகர்கள்.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,825 (ரூ.120 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.54,600 (ரூ.960 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,445 (ரூ.130 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.59,560 (ரூ.1040 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

Edited by Induja Raghunathan