Gold Rate Chennai: சற்றே அடங்கியது தங்கம் விலை - சவரன் ரூ.56,760-க்கு விற்பனை
கடந்த 9 நாட்களாக தினசரி உயர்வுடன் புதிய உச்சங்களைக் கண்டுவந்த ஆபரணத் தங்கத்தின் விலை சற்றே குறைந்திருப்பது, நகை வாங்க விழைவோருக்கு கொஞ்சம் ஆறுதல் தகவலாக உள்ளது.
கடந்த 9 நாட்களாக தினசரி உயர்வுடன் புதிய உச்சங்களைக் கண்டுவந்த ஆபரணத் தங்கத்தின் விலை சற்றே குறைந்திருப்பது, நகை வாங்க விழைவோருக்கு கொஞ்சம் ஆறுதல் தகவலாக உள்ளது.
சென்னையில் நேற்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.40 உயர்ந்து ரூ.7,100 ஆகவும், சவரன் விலை ரூ.320 உயர்ந்து ரூ.56,800 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.43 உயர்ந்து ரூ.7,745 ஆகவும், சவரன் விலை ரூ.344 உயர்ந்து ரூ.61,960 ஆகவும் இருந்தது. இந்நிலையில், கிட்டத்தட்ட 9 நாட்களுக்குப் பிறகு, தங்கம் விலை இன்று சற்றே குறைந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் - சனிக்கிழமை (28.9.2024):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.5 குறைந்து ரூ.7,095 ஆகவும், சவரன் விலை ரூ.40 குறைந்து ரூ.56,760 ஆகவும் இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.5 குறைந்து ரூ.7,740 ஆகவும், சவரன் விலை ரூ.40 குறைந்து ரூ.61,920 ஆகவும் இருக்கிறது.
வெள்ளி விலை:
சென்னையில் சனிக்கிழமை (28.9.2024) 1 கிராம் வெள்ளி விலை ஒரு ரூபாய் குறைந்து ரூ.101 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1000 குறைந்து ரூ.1,01,000 ஆகவும் விற்பனையாகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அண்மையில், அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தது. இதனால், தங்கம் மீதான முதலீடு அதிகரிக்கத் தொடங்கியது. உலக அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதுடன், இந்தியாவில் இது பண்டிகை காலம் என்பதால் ஆபரணத் தங்கம் விலை உயரத் தொடங்கியுள்ளது. இந்தப் போக்கு இப்படியே நீடிக்கும் பட்சத்தில், இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.7,500 வரையும், ஒரு சவரன் ரூ.60,000 எனும் அளவுக்கும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக வர்த்தகர்கள் கருதுகின்றனர்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,095 (ரூ.5 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.56,760 (ரூ.40 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,740 (ரூ.5 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.61,920 (ரூ.40 குறைவு)
தங்கம் விலை @ மும்பை

Edited by Induja Raghunathan