நகைத் துறையில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்; பிரத்யேக பணித்தேடல் தளம்!
நகை நிறுவனங்களில் நிலவும் பணியிலமர்த்துவதிலுள்ள சிக்கல்கள் மற்றும் வேலைக்கு சேருவதிலுள்ள சாவல்களுக்கு தீர்வுகண்டுள்ள மின்ட்லி நிறுவனத்தின் இணையதளத்தில் குவிந்துள்ளன எக்கசக்க வேலை வாய்ப்புகள். பிறகென்ன... ரெஸ்யூமை அப்லோடு செய்து வேலையை உட்கார்ந்த இடத்திலிருந்தே தேடுங்கள்...
மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பை குறிக்கிறது. உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரத்தினங்கள் மற்றும் ஆபரணத் துறையானது மிகப்பெரிய அளவில் பங்களிப்புச் செய்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில், ஆபரணத் துறையானது மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 7% என்ற அளவிலும் ஏற்றுமதியில் 12% என்ற அளவிலும் பங்களிப்புச் செய்கின்றது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிப்பதோடு, வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுப்பதிலும் இத்துறை முக்கியப் பங்காற்றுகிறது. இந்தியாவில் மட்டும் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஆபரணத்துறையில் பணியாற்றுகின்றனர்.

ஆனால், நகை நிறுவனங்களைப் பொறுத்தவரை, அவர்களது நிறுவனங்களுக்கு நம்பகமான மற்றும் தகுதியான நபர்களை பணியமர்த்துவது என்பது மிகக்கடினமான செயலாகவே உள்ளது. பணியமர்த்துவதில் நிலவும் சிக்கலையும், அதிகரித்துவரும் வேலை வாய்ப்பற்ற சூழலையும் புரிந்து கொண்ட 'mintly' 'மின்ட்லி' நிறுவனம் அதற்கான தீர்வாக அமைந்துள்ளது.
வேலை தேடுபவர்கள் மற்றும் பணியமர்த்தும் நிறுவனங்கள் இரண்டையும் இணைக்கச் செய்யும் பாலமாக செயல்படும் மின்ட்லி இணையதளம், நகைக்கடை சார்ந்த வேலையினை கண்டறிவதற்கான மிக்சிறந்த வேலை தேடல் தளமாக விளங்குகிறது.
நகை நிறுவனங்களுக்கு மின்ட்லி எப்படி உதவுகின்றது?
2015ம் ஆண்டு ஹெச்.ஆர்.க்யூபால் தொடங்கப்பட்ட மின்ட்லி இணையதளமானது வேலைக்கான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டவர்களுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது. இது நகைத் தொழில் வல்லுநர்கள் விரைவாக வேலைகளைத் தேடவும், மறுபுறம் நிறுவனங்களில் பணியமர்த்தும் மேலாளர் பொருத்தமான நபர்களைக் கண்டுபிடித்து ஆட்சேர்ப்பு செய்யவும் உதவுகின்றது.
பிற வேலைவாய்ப்பு தளங்களைப் போலின்றி, நகைத் தொழில் சமூகத்திற்காக பிரத்யேகமாக செயல்படும் தளமாகவுள்ளது mintly.
நிர்வகிக்கப்பட்ட வேலைவாய்ப்பு குழுமம் மற்றும் கட்டணம் பெற்று பணியமர்த்தல் சேவைகள் வழங்கல்கள் மூலம், நகை நிறுவனங்களுக்கு அவர்களின் தெரிவுநிலையை மேம்படுத்தவும், தகுதிவாய்ந்த மற்றும் நம்பகமான விண்ணப்பதாரர்களை எந்தவொரு நேரத்திலும் கண்டுபிடித்து பணியமர்த்துவதில் அவர்களின் நேரத்தையும் முயற்சிகளையும் மிச்சப்படுத்தவும் மின்ட்லி உதவுகின்றது.
இந்நிறுவனமானது திறமையானவர்களைத் தேர்ந்தெடுத்து நிறுவனங்களில் பணியமர்த்துவதுடன், அவர்களுடன் இணைந்து அடுத்த கட்டத்தை நோக்கி வளர்ந்து வருகின்றது.
காலப்போக்கில், பின்னணி சரிபார்ப்பு சேவை, 24/7 மனிதவள ஆதரவு சேவைகள், பல்வேறு அளவிலான நிறுவனங்களுக்கான விற்பனை மேலாண்மை கருவி ஆகியவற்றின் தேவையையும் மின்ட்லி புரிந்துகொண்டு அதற்கேற்ப செயலாற்றுகின்றது.
நிறுவனங்களின் தேவைகளை கவனமாக மதிப்பீடு செய்த பின்னர், வணிகத்திற்கான தீர்வுகளை உருவாக்கி, நிறுவனங்களுக்கு உதவும் வகையிலான சேவைகளையும், தயாரிப்புகளையும் வழங்கி வருகின்றது.

வேலையிழந்து, தொழில் முடங்கி கிடந்த கொரோனா தொற்று காலத்திலும், சில்லறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் எஃப்எம்சிஜி தொழில்களுக்கு பொருத்தமான திறமைகொண்ட நபர்களை பணியமர்த்தி இரு பக்கத்தினருக்கும் பக்கபலமாகயிருந்தது.
நகைத் துறையில் பெரும் பங்கு வகிக்கும் பீமா ஜுவல்லர்ஸ், மலபார் கோல்ட் அன்ட் டயமண்ட்ஸ், பி சி சந்திரா ஜூவல்லரி, எஸ்.கே.டி.எம் மற்றும் இன்னும் பல கடைகளுடன் இணைந்து செயல்படும் மின்ட்லியின் இணையதளத்தில் வரிசை கட்டியிருக்கின்றன வேலைகள் மற்றும் பணியிடங்கள் குறித்த தகவல்கள்.
இது தற்போது இந்தியா, அமெரிக்காவின் மத்திய கிழக்கு மற்றும் மத்திய மேற்கு மாநிலங்களான இந்தியானா, ஓஹையோ, மிச்சிகன், விஸ்கான்சின், இல்லினாய்ஸ் ஆகிய பகுதிகளில் அதன் சேவையை வழங்கி வருகின்றது.
அடுத்த மூன்று மாதங்களில் 100 நகைநிறுவனங்களுடன் டை-அப் செய்வதுடன், 50,000 நகைத் தொழில் வல்லுநர்களுக்கு அவர்களின் கனவு வேலையினை பெற்று கொடுப்பதை இலக்காக கொண்டுள்ளது மின்ட்லி.
இணையதள முகவரி : Mintly