'தொழில்முனைவோர் ஈகோ இல்லாமல் செயல்பட வேண்டும்' - தைரோகேர் வேலுமணி அனுபவ பகிர்வு!
தொழில்முனைவில் முன்னேற தன்முனைப்பு தடையாக இருக்கும் என்றும், தொழில்முனைவோர் ஈகோ இல்லாமல் இருக்க வேண்டும், என்று தைரோகேர் நிறுவனர் வேலுமணி தன் அனுபவ பாடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
தொழில்முனைவில் முன்னேற தன்முனைப்பு தடையாக இருக்கும் என்றும், தொழில்முனைவோர் தன்முனைப்பு இல்லாமல் இருக்க வேண்டும், என்றும் தைரோகேர் நிறுவனர் வேலுமணி தன் அனுபவ பாடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
7,000 கோடி மதிப்புள்ள மருத்துவ பரிசோதனை நிறுவனமான தைரோகேர்
வெற்றிக்கதைக்கு சொந்தக்காரரான டாக்டர்.வேலுமணி ஊக்கம் தரும் தொழில்முனைவோராக விளங்கி வருகிறார். தைரோகேர் நிறுவனம் கையகப்படுத்தப்பட்ட பிறகு, டாக்டர்.வேலுமணி இளம் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், அண்மையில் வேலுமணி, எக்ஸ் தளத்தில் தனது அனுபவ பாடம் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார்.
"எந்த ஒரு வர்த்தகத்தை துவக்குவதாக இருந்தாலும், தன்முனைப்பு இருக்கக் கூடாது என பொருள் தரும் வகையான ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்து கொண்டுள்ளவர், வர்த்தகம் என்றில்லை, தொழில் வாழ்க்கை, திருமணம் எதுவாக இருந்தாலும், ஈகோ இருந்தால் அது மகிழ்ச்சியை குறைத்து, வலியை அதிகரிக்கும்," எனத் தெரிவித்துள்ளார்.
ஈகோ அதிகமாக இருந்தால் உறவுகள் பலவீனமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
வேலுமணியின் இந்த கருத்திற்கு இணையவாசிகளும் பரவலாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஈகோ என்றால், 'நல்லதை வெளியே அனுப்புவது' என ஒருவர் ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளார். இன்னொருவர் 'உறவுகளில், சுயமரியாதை மற்றும் ஈகோ என்றால் என்ன?', என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதே போல மற்றொரு பதிவில், நிறுவன பணியிட சூழலில் ஏற்பட்டு வரும் மாற்றம் தொடர்பாக பகிர்ந்துள்ளார்.
அறுபது ஆண்டுகளுக்கு முன், தான் பணியாற்றத்துவங்கிய போது, கேன்டீன் வசதி இல்லை என குறிப்பிட்டுள்ளவர், அதன் பிறகு, 80-களிலும் கேன்டீன்கள் இல்லை, 90-களில் 2 மணி நேரம் திறந்திருக்கும், புத்தாயிரமாண்டு வாக்கில் 4 மணி நேரம் திறந்திருக்கும் என வரிசையாக பகிர்ந்துள்ளவர், கடந்த வாரம் அலுவலகம் ஒன்றுக்கு சென்றிருந்த போது, 24 மணி நேர கேன்டீனை கண்டதாக தெரிவித்துள்ளார்.
Edited by Induja Raghunathan