Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Paris Olympics 2024: 'வயிற்றில் உள்ள என் குழந்தையும் நானும் சேர்ந்து வாள் வீசினோம்' - 7 மாத கர்ப்பிணி வீராங்கனையின் நெகிழ்ச்சிப் பதிவு!

“கர்ப்ப காலம் என்பது கடினமானதுதான். ஆனால் குடும்பத்தையும், கனவையும் ஒருசேர சுமப்பது அதைவிடவும் கடினமானது” என ஒலிம்பிக்கில் 7 மாத கர்ப்பிணியாக விளையாடிய அனுபவத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார் எகிப்து வாள்வீச்சு வீராங்கனை நடா ஹஃபீஸ்.

Paris Olympics 2024: 'வயிற்றில் உள்ள என் குழந்தையும் நானும் சேர்ந்து வாள் வீசினோம்' - 7 மாத கர்ப்பிணி  வீராங்கனையின் நெகிழ்ச்சிப் பதிவு!

Friday August 02, 2024 , 4 min Read

மூன்று முறை ஒலிம்பிக்கில் கலந்து கொண்டவரான எகிப்தைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை நடா ஹஃபீஸ், இம்முறை ஏழு மாத கர்ப்பிணியாக பாரீஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டது குறித்து நெகிழ்ச்சியான பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

ஒலிம்பிக்

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவாக கருதப்படுவது ஒலிம்பிக் போட்டி. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தப் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வெல்வதுதான் விளையாட்டு வீரர்களின் மிகப்பெரிய கனவுகளில் ஒன்று.

ஒவ்வொருமுறையும் வெவ்வேறு நாடுகளில் நடைபெறும் இந்தப் போட்டி, இந்த ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், கடந்தமாதம் 26ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்தப் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை நிரூபித்து வருகின்றனர். இந்தியா சார்பில், 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 13 பேரும் இடம்பிடித்துள்ளனர்.

nada

இந்தப் போட்டியில் கலந்து கொண்டுள்ள ஒவ்வொருவருக்கு பின்பும், அவர்கள் கடந்து வந்த கடினமானப் பாதை, போராட்டம், தடைகள், அதைத் தகர்த்த விடாமுயற்சி எனப் பல வெற்றிக்கதைகள் ஒளிந்து உள்ளன. போட்டிகளில் அவர்கள் பெறும் வெற்றித் தோல்வியைப் பொறுத்து அந்தக் கதைகள் சமூகவலைதளப் பக்கங்களில் பேசப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், வயிற்றில் ஏழு மாதக் குழந்தையோடு வாள்வீச்சுப் போட்டியில் கலந்து கொண்ட நடா ஹஃபீஸ் ((Nada Hafez) தான் தற்போது இணையத்தில் அதிகம் பேசப்படும் நபர்களில் ஒருவராக உள்ளார். ஒலிம்பிக் போட்டியில் அவர் தோல்வியுற்ற போதும், அவரது இன்ஸ்டா பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

போட்டியில் பங்கேற்கும்போதே அவர் கர்ப்பம் என்பதை வெளிப்படுத்தி மக்களின் கவனத்தை ஈர்க்காமல், தன்னால் முடிந்த அளவு போராடி தோல்வியைத் தழுவிய பிறகு அவர் வெளியிட்டுள்ள இந்த உருக்கமானப் பதிவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

யார் இந்த நடா ஹஃபீஸ்

எகிப்து நாட்டைச் சேர்ந்தவரான ஃபென்சர் நடா ஹஃபீஸ், மருத்துவத்தில் பட்டம் பெற்றவர். தற்போது 26 வயதாகும் இவர் முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையும் ஆவார். வாள்வீச்சுப் போட்டிகளில் கொண்ட ஆர்வம் காரணமாக, வாள்வீச்சு வீராங்கனையாகவும் வெற்றிகளைக் குவித்து வருகிறார்.

2014ல், எகிப்து நாட்டின் தேசிய சீனியர் பெண்கள் சேபர் ஃபென்சிங் அணியில் சேர்ந்த நடா ஹஃபீஸ், 2015ல், எகிப்திய மூத்த பெண்கள் சேபர் தேசிய குடியரசு போட்டியில் தனது முதல் வெற்றியைப் பெற்றார். 2018 ஆப்பிரிக்க மண்டல சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் மற்றும் 2014 மற்றும் 2019ல் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றவர் நடா. கூடுதலாக, அவர் பெல்ஜியம் போட்டியில் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.

அல்ஜீரியாவில் நடந்த ஆப்பிரிக்க மண்டலத் தகுதி மூலம் 2016 ரியோ ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்றார். 2021ல், அவர் மீண்டும் ஒலிம்பிக்கில் இடம்பெற்றார். தற்போது மூன்றாவது முறையாக இந்தமுறை ஒலிம்பிக்கில் அவர் கலந்து கொண்டுள்ளார். இதுவரை, தனிநபர் மற்றும் குழு வாள்வீச்சுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற மூன்று முறை ஒலிம்பியன் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் நடா.

பாரீஸ் ஒலிம்பிக்

இம்முறை பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான தனிநபர் வாள்வீச்சு போட்டியில் பங்கேற்ற நடா ஹஃபீஸ், அமெரிக்காவின் எலிசபெத் டார்டகோவ்ஸ்கிக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தில் 15-13 என வெற்றி பெற்று அவருக்கு அதிர்ச்சியளித்தார். ஆனால், அடுத்தசுற்றில் (ஜூலை 29) தென்கொரியாவின் ஜியோன் ஹயோங்கிடம் தோல்வியைத் தழுவினார். என்றாலும், இந்தப் பிரிவில் அவர் 16வது இடத்தைப் பிடித்தார். இது, அவரது சிறந்த தரநிலை ஆகும்.

nada

இந்நிலையில் ஒலிம்பிக் தோல்விக்குப் பின் தனது இன்ஸ்டா பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் நடா ஹஃபீஸ். அந்தப் பதிவில், ‘தான் 7 மாத கர்ப்பம் என்றும், இந்த முறை போட்டியில் மூன்று பேர் விளையாடினோம் என்றும்’ தன் வயிற்றில் உள்ள குழந்தையை குட்டி ஒலிம்பியன்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்தப் பதிவில் அவர்,

“போட்டிக் களத்தில் இரண்டு பேர் இருப்பதாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், உண்மையில் இங்கிருப்பது மூன்று பேர். ஆம்... நான், என்னுடைய போட்டியாளர் மற்றும் இன்னும் உலகிற்கு வராத என்னுடைய குழந்தை."

கர்ப்பகாலம் ஒரு ரோலர்கோஸ்டர்

நானும் என் குழந்தையும் சேர்ந்து களத்தில் வாள் வீசினோம். இதற்காக இருவரும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நிறைய சவால்களை எதிர்கொண்டோம். கர்ப்பகாலம் ரோலர்கோஸ்டர் போல கடினமானது. ஆனால், குடும்பத்தையும், கனவையும் ஒருசேர சுமப்பது அதைவிடவும் கடினமானது. சாதிப்பதற்கு இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ளதான் வேண்டும். அது சுகமான வலிதான். அது மதிப்புக்குரியதுமாகும்.

"16வது சுற்றில் எனது இடத்தைத் தக்கவைத்தது என்னைப் பெருமைப்பட வைக்கிறது என்பதைச் சொல்வதற்காக இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளேன். எனது கணவர் இப்ராஹிம் மற்றும் எனது குடும்பத்தினரின் நம்பிக்கையைப் பகிர்ந்து கொண்டதில் நான் அதிர்ஷ்டசாலி. இந்த ஒலிம்பிக் வேறுபட்டது; நான் மூன்றுமுறை ஒலிம்பியன். ஆனால், இந்த முறை ஒரு குட்டி ஒலிம்பியனை சுமந்துகொண்டிருக்கிறேன்,” என இவ்வாறு நடா ஹஃபீஸ் தெரிவித்துள்ளார்.

வைரலான பதிவு

நடாவின் இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. எகிப்திய பெண்களின் வலிமை மற்றும் திறன்களை இந்தப் பதிவு வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக பலர் பாராட்டினாலும், வழக்கம்போல் இந்தப் பதிவிற்கு எதிராகவும் சிலர் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

nada

ஆனால், வாள் வித்தையில் மட்டுமல்ல.. தான் வார்த்தை வித்தையிலும் வித்தகி என்பதை வெளிப்படுத்தும் வகையில், அந்த எதிர்மறைக் கருத்துகளுக்கும் தக்க விளக்கம் கொடுத்துள்ளார் நடா. அதில் அவர்,

“எனது அன்பான தேசத்திற்கு, நான் என் கர்ப்பத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, எகிப்தியப் பெண்ணின் வலிமை மற்றும் விடாமுயற்சியின் மீது வெளிச்சம் போடுவதாக இருந்தது," என்றார்.

உலகத் தரவரிசையில் 7வது இடத்தில் இருக்கும் அமெரிக்க சாம்பியனுக்கு எதிராக வெற்றி பெற்றதன்மூலம், ஒரு எகிப்திய தடகள வீரர், மருத்துவர் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக பெண் என்ன செய்ய முடியும் என்பதற்கான தெளிவான வெற்றி நிரூபணம் ஆகியுள்ளது.

கர்ப்பமாக இருந்தபோது பங்கேற்ற ஒரே தடகள வீரர் நான் அல்ல; இன்னும் பல சர்வதேச சாம்பியன்கள் கர்ப்பத்துடன் விளையாடியிருக்கிறார்கள், அவர்களைத் தடுக்க எந்த மருத்துவக் கட்டுப்பாடுகளும் இல்லை, எனத் தெரிவித்துள்ளார்.