Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

அடுத்த மாபெரும் அலை பிராந்திய மொழி வர்த்தகம் நோக்கியே உள்ளது- ஷாஹில் கினி

அடுத்த மாபெரும் அலை பிராந்திய மொழி வர்த்தகம் நோக்கியே உள்ளது- ஷாஹில் கினி

Saturday October 31, 2015 , 2 min Read

"கோடிக்கணக்கான இந்திய நுகர்வோரிடம் நீங்கள் ஆங்கிலத்திலேயே வர்த்தகம் செய்து விடலாம் எனக் கனவு கண்டால் அது தவறாகத்தான் போய் முடியும் என்று ஒரு வெடிகுண்டைத் தூக்கி வீசினார்" அஸ்படா நிறுவன துணைத் தலைவர் ஷாஹில் கினி. பெங்களூருவில் வெள்ளியன்று நடந்த டெக்ஸ்பார்க் ஆறாவது அமர்வில் பேசிய அவர், அங்கு அமர்ந்திருந்த தொழில் முனைவோரின் நம்பிக்கையில் ஒரு அதிர்வை ஏற்படுத்தினார்.

ஷகில் கினி

ஷகில் கினி


இதைக் கேளுங்கள், இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்களின் எண்ணிக்கை 10லிருந்து 12 கோடி. இது இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் வெறும் 10 சதவீதம்தான். இதுவே ஆங்கிலம் நன்கு படிக்கத் தெரிந்தவர்கள் என்று பார்த்தால் அந்த எண்ணிக்கை 6 கோடியில் இருந்து 8 கோடி வரையில் இருக்கும். இந்தியாவில் 780 மொழிகள் பேசப்படுகின்றன. 86 விதமான எழுத்து வடிவங்கள் உள்ளன. இதில் 29 மொழிகள் குறைந்தது 10 லட்சம் பேர் பேசக் கூடியவை. 22 மொழிகள் இந்திய அரசியல் சாசனத்தின் படி அங்கீகரிக்கப்பட்ட அலுவலக மொழிகள்.

ஷாஹில், ஏழு இந்திய மொழிகள் பேசக் கூடியவர். கணக்கிடுதலை (computing) தாய்மொழியில் படிப்பது குறித்து பேசினார். தாய்மொழியில் கணக்கிடுதலைப் படிப்பதன் மூலம் தொழில் நுட்பத்தை கோடிக்கணக்கானவர்களுக்குக் கொண்டு சேர்ப்பது குறித்துப் பேசினார்.

கிழக்கிந்தியக் கம்பெனி நமக்கு என்ன செய்ததோ அதைத்தான் நாம் இப்போது நமது மொழிகளுக்குச் செய்து கொண்டிருக்கிறோம்


காலனி ஆதிக்கவாதிகள் நாய்களுக்கும் இந்தியர்களுக்கும் அனுமதி இல்லை என்று எப்படி அவமானப்படுத்தினார்களோ அதே போல ஆங்கிலம் பேசத் தெரியாத இந்திய மக்களை நாம் தவிர்க்கிறோம். இந்த நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அவர்கள்தான். ஆங்கிலம் பேசத் தெரியதாவர்களுக்கு அனுமதி இல்லை என்கிறோம் நாம்.

நாமெல்லாம் இப்படி இருப்பதை ஷாஹில் ஒரு பெரும் பிரச்சனையாகப் பார்க்கிறார். ஆங்கிலக் கணக்குகள் (English accounts) 56 சதவீதம் ஆன்லைன் உள்ளடக்கத்திற்கானது. ஆக ஆங்கிலம் தெரியாத மக்களுக்கான வாசலை திறக்க விடாமல் நமது டெவலப்பர்களைத் தடுப்பது எது?

தீர்ப்பதற்குக் கடினமான கணக்குகளுக்கு விடை காணுங்கள் என்று டெவலப்பர்களுக்கு சவால் விடும் ஷாஹில், உள்ளூர் மொழியில் மாற்றுவது என்பது வெறும் மொழிபெயர்ப்பு அல்ல என்கிறார். அது படைப்பு+ புரிந்து கொள்ளல்+ கண்டுபிடிப்பு. ரிவெரி (Reverie) அதைத்தான் செய்கிறது. ரிவெரி அஸ்படா குழும நிறுவனங்களில் ஒன்று. இந்த நிறுவனத்தில் போர்ட் மெம்பரில் ஒருவராகச் சேர்ந்திருக்கிறார் ஷாஹில்.

ஒருவர் தனது சொந்த மொழியிலேயே தேட வேண்டுமெனில், மொழி தொடர்பான எழுத்துரு, எழுத்து மொழிபெயர்ப்பு, சொந்த மற்றும் ட்ரான்ஸ்லிட்ரேட்டிவ் இன்புட், குறிப்பான மொழி பெயர்ப்பு என அனைத்தையும் ஒருங்கிணைத்து சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும்என்கிறார் ஷாஹில்.

உள்ளூர் இந்திய மொழிகளில் கணக்கீடு செய்வதில் தீர்வு காணப்படாத ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. அழகான எழுத்துருக்களை கொண்டு வருவது, எழுத்துப் பிழை மற்றும் இலக்கணப் பிழைகளைக் கண்டறிவது (ஆங்கிலத்தில் இந்த வசதிகள் உள்ளன) பேச்சை எழுத்தாக மாற்றுவது என்று நிறைய விஷயங்களில் தீர்வு காண வேண்டியிருக்கிறது. இந்தப் பட்டியல் தொடர்கிறது.

டெக்ஸ்பார்க் பார்வையாளர்கள்

டெக்ஸ்பார்க் பார்வையாளர்கள்

நாம் உள்ளூர் மொழியைப் பேசும் போது கூட இடையிடையே ஆங்கில வார்த்தைகளுக்குத் தாவுகிறோம் எனும் ஷகில், உள்ளூர் மொழி பேசுவோர் சந்தையை நம்பி வேலை செய்யும் எந்த ஒரு தேடு வழிமுறையாக(search algorithm) இருந்தாலும் இதை ஒரு நிரூபணமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார். தேடல் உண்மையில் பைபிளில் சொல்லப்படும் ஹோலி கிரைல் எனப்படும் புனிதக் கோப்பையைத் தேடுவது போலத்தான். உதாரணமாக ஹிந்தியை எடுத்துக் கொள்ளுங்கள். பிளே (play) எனும் ஆங்கில வார்த்தை ஹிந்தியில் மொழி பெயர்க்கும் போது, அது கேல் (விளையாட்டை விளையாடுவது), பஜாஓ (வாத்தியங்களை இசைப்பது) அல்லது நாட்டக் (நாடகம்) என்று பல வார்த்தைகளுக்கு இட்டுச் செல்லும். எந்திர மொழி பெயர்ப்புக்கு இதைப் பிரித்தறிய முடியுமா? தொழில் வளர்ச்சியில் அசுர வேகத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைக் கருத்தில் கொண்டால், இந்திய மொழிகளை நோக்கி பார்வையைச் செலுத்த வேண்டிய நேரம் இது. அடுத்த மிகப்பெரும் அலை அங்கிருந்துதான் வரவிருக்கிறது.

டெக்ஸ்பார்க் 2015ல் ஷகில்

டெக்ஸ்பார்க் 2015ல் ஷகில்