2020-ல் 3,600க்கும் மேற்பட்ட பறவைகள், 2900 விலங்குகள் தீயணைப்புத் துறையால் மீட்கப்பட்டன!
தேசிய தலைநகரான டெல்லியில் தீயணைப்பு வீரர்கள் கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 3,600 க்கும் மேற்பட்ட பறவைகளை மீட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தினத்தன்று இதுபோன்ற வழக்குகள் அதிகபட்சமாக பதிவாகியுள்ளன. மக்கள் பாரம்பரியமாக காத்தாடிகளை பறக்கவிடுவது, மரங்களில் கயிறுகளை தொங்கவிடுவது, உள்ளிட்டவற்றால் பறவைகளுக்கு மரண பொறிகள் உருவாக்கப்படுகின்றன.
டெல்லி தீயணைப்பு சேவை (டி.எஃப்.எஸ்) பகிர்ந்த தரவுகளின்படி,
தேசிய தலைநகரான டெல்லியில் தீயணைப்பு வீரர்கள் கடந்த ஆண்டு 25,416 துயர அழைப்புகளுக்கு பதிலளித்துள்ளனர், அவற்றில் 3,691 போன் கால்கள் பறவைகள் மற்றும் 2,902 போன் கால்கள் விலங்குகளை மீட்பதற்காக அழைக்கப்பட்டுள்ளன.
அந்த தரவுகளின்படி அதிகபட்ச அழைப்புகள் நவம்பர் (2,652), அக்டோபர் (2,521) மற்றும் ஆகஸ்ட் (2,466) ஆகியவற்றில் பெறப்பட்டுள்ளன. இந்த அழைப்புகள் தீ, கட்டிடம் சரிவு, பறவை மற்றும் விலங்கு மீட்பு ஆகியவற்றுடன் தொடர்புடையவை.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் பறவைகள் மற்றும் விலங்குகளை மீட்பதற்கான உதவி கோரும் அதிக எண்ணிக்கையிலான அழைப்புகளை நாங்கள் பெற்றுள்ளோம். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 882 பறவைகளையும் 345 விலங்குகளையும் மீட்டுள்ளோம், என்று கார்க் கூறினார். மேலும்,
"இது பொதுவாக சுதந்திர நாளில் காணப்படும் போக்கு, பெரும்பாலான மக்கள் பறக்கும் காத்தாடிகளில் ஈடுபடுகிறார்கள். பல சந்தர்ப்பங்களில், இந்த பறவைகள் மின்சாரக் கம்பி அல்லது ஒரு மரத்தில் சிக்கித் தவிப்பதை நாங்கள் கவனித்திருக்கிறோம்," என்று அவர் கூறினார்.

தீயணைப்புத் துறையின்படி, அவர்கள் பெற்ற மீட்பு அழைப்புகள் பெரும்பாலானவை காகங்கள் போன்ற பறவைகளுக்கானவை. பெரும்பாலான புறாக்கள், கிளிகள் ஆகியவை காத்தாடி சரம் காரணமாக மின்சார கம்பிகள் அல்லது மரங்களில் சிக்கிக்கொண்டு தவிக்கின்றன.
குறுகிய பாதைகள், மூடிய இடங்கள், சில நேரங்களில் வீடுகளுக்குள் கூட, ஒரு குழி, கால்வாய் அல்லது வடிகால் ஆகியவற்றில் சிக்கித் தவிக்கும் பசுக்கள், கால்நடைகள், நாய்கள் அல்லது பூனைகளை மீட்பதற்கான தொடர்பான அழைப்புகளையும் அவர்கள் பெற்றிருக்கிறார்கள்.
செப்டம்பர் மற்றும் ஜூலை மாதங்களிலும் அதிக எண்ணிக்கையிலான மீட்பு நடவடிக்கைகள் காணப்பட்டன. செப்டம்பர் மாதத்தில் 458 பறவைகள் மற்றும் 248 விலங்குகளையும், ஜூலை மாதம் 335 பறவைகளையும் 258 விலங்குகளையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
தகவல்: பிடிஐ | தொகுப்பு: மலையரசு