ஏஐ திறன் நிறுவனம் Mad Street Den-ஐ கையகப்படுத்துகிறது சென்னை M2p fintech!
இந்த கையகப்படுத்தலை அடுத்து, எம்2பி பின்டெக், எம்.எஸ்.டி நிறுவனத்தின் ஏஐ திறன் மேடை Vue.ai –ஐ தனது வங்கித்துறை சார்ந்த தொழில்நுட்ப சேவைகளில் ஒருங்கிணைக்கும்.
செனையைச் சேர்ந்த வங்கித்துறை உள்கட்டமைப்பு நிறுவனம் எம்2பி பின்டெக், (M2P Fintech), 15 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகள் மற்றும் ரொக்க பரிவர்த்தனையில் ஏஐ ஸ்டார்ட் அப் 'மேட் ஸ்டிரீட் டென்' (MadStreetDen) நிறுவனத்தை கையகப்படுத்த உள்ளது.
இந்த கையகப்படுத்தலை தொடர்ந்து, எம்2பி பின்டெக் நிறுவனம், எம்.எஸ்.டி நிறுவனத்தின் ஏஐ திறன் கொண்ட மேடை Vue.ai – ஐ தனது வங்கி நுட்பம் சார்ந்த தொழில்நுட்ப சேவைகளில் ஒருங்கிணைக்கும் என்று மனிகண்ட்ரோல் செய்தி தெரிவிக்கிறது.
வங்கித்துறை, நிதி, லாஜிஸ்டிக்ஸ், ரீடெயில் உள்ளிட்ட துறைகளில், தரவுகளை, சேகரித்து, தூய்மையாக்கி, அலசி ஆராய்ந்து நிறுவனங்களுக்கு ஆற்றல் அளிக்கும் மேடையாக எம்.எஸ்.டியின் முதன்னை சேவையான ஏஐ சார்ந்த பொது பயன்பாடு மேடை Vue.ai, விளங்குகிறது.

எம்.எஸ்.டி நிறுவனம் இந்தியாவுக்கு வெளியே பதிவு செய்யப்பட்டதால் வழக்கமான கையகப்படுத்தலாக அல்லாமல், சொத்து வாங்குவது போல இந்த பரிவர்த்தனை நிகழும், என அந்த செய்தி தெரிவிக்கிறது. இதன் பொருள், வர்த்தக நிறுவனத்தை அல்லாமல், எம்.எஸ்.டி நிறுவனத்தின் அறிவுசார் சொத்துரிமை, தொடர்புகள் மற்றும் ஊழியர்களை எம்2பி பின்டெக் வாங்கும்.
10 முதல் 15 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்த பரிவர்த்தனையின் ஒரு பகுதி, ஊழியர் சம்பளம், வெளியே உள்ள பொறுப்புகள் உள்ளிட்ட செயல்முறை பொறுப்புகளுக்காக ஒதுக்கப்படும்.
2016ல் நிறுவப்பட்ட அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தலமையகம் கொண்ட, எம்.எஸ்.டி, பல்வேறு தொழில்களுக்கான வளர்த்தெடுக்க கூடிய ஏஐ தீர்வுகள் மூலம் நிறுவனங்கள் ஏஐ சார்ந்ததாக மாற வழி செய்கிறது.
இந்தியா மற்றும் ஜப்பானிலும் அலுவலகங்கள் கொண்டுள்ள இந்நிறுவனம், செக்கோயா கேபிட்டல் மற்றும் பால்கான் எட்ஜ் கேபிடல் உள்ளிட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து 30 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது.
2024 செப்டம்பரில், எம்2பி பின்டெக், டி சுற்று நிதியாக ரூ.850 கோடி திரட்டியது. ஹிலியோஸ் இன்வெஸ்ட்மண்ட் பாட்னர் தலமையிலான இந்த சுற்றில் நிறுவனம் ரூ.6,550 கோடி சந்தை மதிப்பீடு கொண்டதாக கருதப்பட்டது. ஏற்கனவே முதலீடு செய்த புளரிஷ் வென்சர்ஸ் நிறுவனமும் பங்கேற்றது.
முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பங்கு விற்பனை மூலம் திரட்டப்பட்ட இந்த நிதி, ஆப்பிரிக்காவில் செயல்பாடுகளை விரிவாக்கம் செய்யவும், ஏஐ மற்றும் மேம்பட்ட தரவுகள் திறன் சார்ந்து தொழில்நுட்ப ஸ்டேக்கை மேம்படுத்தவும் பயன்படுத்திக்கொள்ள இருப்பதாக இந்த சென்னை ஸ்டார்ட் அப் அப்போது தெரிவித்திருந்தது.
யுவர்ஸ்டோரி குழு
Edited by Induja Raghunathan