Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

100 ஏர்பஸ் விமானங்களை வாங்கும் ஏர் இந்தியா!

100 கூடுதல் விமானங்களுக்கான ஆர்டருடன், ஏர் இந்தியா தற்போது மொத்தம் 344 புதிய ஏர்பஸ் விமானங்களை வாங்கியுள்ளது, இதுவரை, ஆறு ஏ350 விமானங்களைப் பெற்றுள்ளது.

100 ஏர்பஸ் விமானங்களை வாங்கும் ஏர் இந்தியா!

Tuesday December 10, 2024 , 2 min Read

டாடா குழுமம் நடத்தும் ஏர் இந்தியா A321 Neo உட்பட அகலமான பத்து ஏ350 விமானங்கள் மற்றும் குறுகிய ஏ320 ஃபேமிலி விமானங்களை கொள்முதல் செய்யவுள்ளது.

கடந்த ஆண்டு ஏர் இந்தியா ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனங்களுக்கு வழங்கிய 470 விமானங்களின் ஆர்டர்களுடன் இப்போது இந்த 100 புதிய விமானங்களுக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

100 கூடுதல் விமானங்களுக்கான ஆர்டருடன், ஏர் இந்தியா தற்போது மொத்தம் 344 புதிய விமானங்களை ஏர்பஸில் இருந்து வாங்கியுள்ளது, இதுவரை, 6 ஏ350 விமானங்களைப் பெற்றுள்ளது.

Air India

2023 ஆம் ஆண்டில் ஏர் இந்தியா போயிங் நிறுவனத்துடன் 220 அகல மற்றும் குறுகிய விமானங்களுக்கான ஆர்டர்களை வழங்கியது, அவற்றில் 185 விமானங்கள் இனிமேல்தான் வர வேண்டியுள்ளது.

போயிங் விமானங்கள் குறித்த நேரத்தில் டெலிவரி செய்யப்படாமல் இழுத்தடிக்கப்படுவதால் ஏர்பஸ் நிறுவனத்திடம் இந்த புதிய ஆர்டரை அளித்துள்ளது.

ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் கேம்ப்பெல் வில்சன் இது தொடர்பாகக் கூறும்போது,

கடந்த மாத இறுதியில், போயிங் நிறுவனத்தின் அமெரிக்க தொழிற்சாலையில் வேலை நிறுத்தம் காரணமாக தாமதம் ஏற்பட்டதாகக் கூறினார்.

இந்த ஆண்டு நடப்பு டிசம்பரில் ஒயிட் டெய்ல் விமானங்கள் ஐம்பதை வழங்குவதாக இருந்தது 2025ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு தாமதப்படுத்தப்பட்டுள்ளது.

டாடா சன்ஸ் மற்றும் ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் கூறுகையில்,

"இந்த கூடுதல் 100 ஏர்பஸ் விமானங்கள் ஏர் இந்தியாவை அதிக வளர்ச்சிப் பாதையில் நிலைநிறுத்த உதவும் என்றும், இந்தியாவை ஒவ்வொரு மூலையிலும் இணைக்கும் உலகத்தரம் வாய்ந்த விமான நிறுவனமாக ஏர் இந்தியாவை உருவாக்கும் பணிக்கு பங்களிக்கும்," என்றும் கூறினார்.

2024ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதியின்படி, நாட்டின் மிகப்பெரிய கேரியரான IndiGo 410 விமானங்களைக் கொண்டிருந்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 500 A320neo குடும்ப விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் IndiGo உலகின் மிகப்பெரிய விமான ஆர்டரை வழங்கியது குறிப்பிடத்தக்கது.