வர்த்தகக் கடன் பெறுவதற்கு முன் கவனிக்க வேண்டிய 5 அம்சங்கள் என்ன?
நிச்சயமில்லா வர்த்தக சூழலில், வர்த்தக கடனை நாடுவதற்கு முன், பல்வேறு அம்சங்களை கவனத்தில் கொள்வது அவசியம். அப்போது தான் கடன் வசதி வர்த்தக தேவை மற்றும் நிதி தகுதிக்கு ஏற்ப அமைந்திருப்பதை உறுதி செய்ய முடியும்.
நெருக்கடி ஏற்படும் போது, ரொக்க வரத்தை தக்க வைக்க வர்த்தகக் கடன் கைகொடுக்கிறது. இருப்பினும், சிறிய மற்றும் குறும் நிறுவனங்களைப்பொருத்தவரை, வாரா கடன் போன்ற அபாயங்களை தவிர்க்க கடன் பெறுவதற்கு சரியான திட்டமிடல் தேவை. ரிசர்வ் வங்கி தகவல்படி, வங்கிகளின் வாராகடன் 2023 மார்ச்சில் 5.7 லட்சம் கோடியாக இருந்தது.
நிச்சயமில்லா வர்த்தக சூழலில், வர்த்தகக் கடனை நாடுவதற்கு முன், பல்வேறு அம்சங்களை கவனத்தில் கொள்வது அவசியம். அப்போது தான் கடன் வசதி வர்த்தக தேவை மற்றும் நிதி தகுதிக்கு ஏற்ப அமைந்திருப்பதை உறுதி செய்ய முடியும்.

கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் வருமாறு:
நோக்கம்
கடனுக்கான நோக்கம் தெளிவாக இருக்க வேண்டும். வர்த்தகங்கள் தினசரி செயல்பாடுகளை நிர்வகித்து, ரொக்க வரத்தை மேம்படுத்த உதவும் செயல் மூலதனத்திற்கான கடன் அல்லது கருவிகள் வாங்குவதற்கு அல்லது விரிவாக்கத்திற்கான கடன் அல்லது பிற குறிப்பிட்ட தேவைக்கான கடன் என எதுவாக இருந்தாலும், தெளிவான திட்டம் இருப்பது, சரியான கடனை தேர்வு செய்ய உதவும்.
வலுவான பாலன்ஸ் ஷீட்
வர்த்தகங்களின் நிதி ஆரோக்கியம் மிகவும் முக்கியம் என்பதால், வர்த்தகக் கடன் பெறுவதற்கு முன், நிதி நிலையை ஆராய்ந்து கடன் தவணையை தவறாமல் செலுத்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
எஸ்.எம்.பி ஸ்டோரியிடம் பேசும் போது, வர்த்தக பயிற்சியாளரும், டஜுர்பா நிறுவனருமான சுரேஷ் மன்ஷர்மாணி, பொதுவாக வங்கிகள், சிறு மற்றும் நடுத்தர வங்கிகளுக்கு கடன் கொடுக்க தயங்குகின்றன என்கிறார்.
“இந்த வர்த்தகங்கள் வலுவான பாலன்ஸ் ஷீட் பெற்றிருப்பதில்லை என்பதால், கடன் வாராகடனாக மாறலாம் எனும் அச்சம் தான் காரணம். எனவே, நிதி ஆரோக்கியத்தை பராமரிப்பது, கிரெடிட் ஸ்கோரை பராமரிப்பது மிகவும் முக்கியம். கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருந்தால், குறைந்த வட்டி உள்ளிட்ட சிறந்த அம்சங்களுடன் கடன் கிடைக்கலாம்.”
தொடர் வருவாய் கொண்ட நிறுவனங்களின் வளர்ச்சி மூலதனம் முன்னதாக பெற வழி செய்யும் வர்த்தக மேடையான ரெகர் கிளப் நிறுவனர் ஏகலைவ குப்தா, சரியான நேரத்தில் கடன் பெறும் வசதி ஒரு வர்த்தகத்தை உருவாக்கலாம் அல்லது பாதிக்கலாம், என்கிறார். விரைவாக கடன் பெறுவது, மூலதன வல்லுனர்களின் ஆலோசனை, திரும்பி செலுத்த ஏற்ற காலம் ஆகியவை ஈட்டுறுதி வர்த்தகக் கடன் பெற முக்கியம்.
ஆவணங்கள்
எந்த தொழிலாக இருந்தாலும் வர்த்தகக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது சரியான ஆவணங்கள் முக்கியம். சிறு தொழில் உரிமையாளர்கள் என்ற முறையில் அனைத்து தேவையான ஆவணங்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். தேவை எனில் ஈட்டுறுதியும் கொண்டிருக்க வேண்டும். சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஈட்டுறுதி கடன் பொதுவாக பரிந்துரைக்கப்படுவதில்லை என்றாலும், இந்த வகை கடன் பெற தீர்மானித்தால், கவனமாக இருக்க வேண்டும்.
ஈட்டுறுதி கடன்
ஈட்டுறுதி கடன் எனும் போது கடன் பெறுபவர் அடமானமாக சொத்து அல்லது கடனுக்கான உத்திரவாதம் அளிக்க வேண்டும். ஈட்டுறுதி இல்லாத கடன் எனில் இத்தகைய அடமானம் தேவை இல்லை. இந்த கடன் குறுகிய காலத்திலானது. பல்வேறு நிதிநுட்ப நிறுவனங்கள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் நுண்கடன் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால், சிறு வர்த்தகங்கள் ஈட்டுறுதி இல்லாத கடன் பெறுவது மேலும் அணுகக் கூடியதாகி இருக்கிறது.
இந்திய எம்.எஸ்.எம்.இ களுக்கான இந்திய வர்த்தக சபை தலைவர் முகேஷ் மோகன் குப்தா, ஈட்டுறுதி இல்லாத கடன் பொதுவாக குறுகிய காலம் கொண்டவை, 2 -3 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவானவை, என்கிறார். இந்த வகை கடன் குறிப்பிட்ட நிறுவனங்கள் தேவைக்கு ஏற்ப அமைந்திருக்கலாம் என்றாலும், வர்த்தக விரிவாக்கத்திற்கு சிறிய நிறுவனங்களுக்கு மூலதனம் தேவைப்படும் போது தான் சவால் உண்டாகிறது. குறுகிய காலத்தில், குறிப்பாக அதிக வட்டி விகிதத்தில் கடனை திரும்பி செலுத்துவது கடினமாக அமையலாம்.
வட்டி விகிதம்
வர்த்தகக் கடனுக்கான வட்டி விகிதம், ஸ்டேட் வங்கி, பஞ்சாப் தேசிய வங்கி போன்ற பொதுத்துறை வங்கிகளின் வட்டி விகிதம் ஆண்டுக்கு 9 முதல் 13 சதவீதமாக அமைகிறது. அதே நேரத்தில் எச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கி போன்ற தனியார் வங்கிகள் 10 முதல் 25 சதவீதம் வரை வட்டி விதிக்கலாம். நிதி நுட்ப நிறுவனங்கள் எனில் இது 36 சதவீதம் வரை இருக்கலாம்.’
சிறு மற்றும் நடுத்தர வர்த்தக உரிமையாளர்கள் கடன் பெறும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாற்று வழியாக நிறுவனங்கள், முத்ரா யோஜனா போன்ற அரசின் கடன் திட்டங்களை முயன்று பார்க்கலாம்.
ஆங்கிலத்தில்: பலக் அகர்வால் | தமிழில்: பலக் அகர்வால்

MSME 45 நாட்கள் கடன் கெடு - மத்திய அரசிடம் ஓராண்டு விலக்கு கோரும் அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு!
Edited by Induja Raghunathan