Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

பெண்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் 5 தலித் பெண் எழுத்தாளர்கள்!

தலித் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க அளவு பங்களித்துள்ள சமகால 5 தலித் பெண் எழுத்தாளர்கள் பற்றிய தொகுப்பு இது.

பெண்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் 5 தலித் பெண் எழுத்தாளர்கள்!

Saturday May 21, 2022 , 2 min Read

2015-ம் ஆண்டு முதல் தலித் வரலாறு மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் கருப்பர் வரலாறு மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்கத்தில் தொடங்கப்பட்டதே ’தலித் வரலாறு மாதம்.’

இதன் மூலம் தலித் மக்களின் கலை, இலக்கியம், பண்பாடு போன்றவவை கொண்டாடப்படுகிறது.

1

கவிதை, சிறு கதைகள், சுயசரிதைகள் ஆகிய வடிவில் மராத்தி, இந்தி, கன்னடம், சிந்தி, தமிழ் என பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட தலித் இலக்கியத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சப்படுகிறது.

தலித் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க அளவு பங்களித்துள்ள சமகால 5 தலித் பெண் எழுத்தாளர்கள் பற்றிய தொகுப்பு இது.

பேபி காம்ப்ளே

பேபி காம்ப்ளே ’பேபிதாய்’ என அன்புடன் அழைக்கப்படுகிறார். இவர், 1929-ம் ஆண்டு மகர் சமூகத்தில் பிறந்தவர். முக்கிய தலித் தலைவர்களில் ஒருவரான இவர், அம்பேத்கரின் கோட்பாடுகள் மீது தீராத பற்று கொண்டு அவரது கொள்கைகளைப் பின்பற்றுபவர்.

இவரது சுயசரிதை Jina Amucha. இது மராத்தியில் இருந்து The Prison We Broke என்கிற பெயரில் ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. 20-ம் நூற்றாண்டின் சாதி அமைப்பு பற்றிய ஆழமான பார்வையை இந்நூல் முன்வைக்கிறது.

பாமா ஃபாஸ்டினா சூசைராஜ்

ஃபாஸ்டினா மேரி ஃபாத்திமா ராணி 1958ம் ஆண்டு ரோமன் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் பள்ளி ஆசிரியையாக பணியாற்றியவர். பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு பாடம் கற்றுக்கொடுத்தார். ஏழு ஆண்டுகள் கன்னியாஸ்திரியாக இருந்தார்.

2

பெண்களின் உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் குரல் கொடுக்கும் ஃபாஸ்டினா ’பாமா’ என்கிற புனைப்பெயரில் எழுதுகிறார். ’கருக்கு’ என்கிற இவரது நூல் பெரும் வரவேற்பைப் பெற்றது. சமூக கட்டமைப்புகளையும் ஒடுக்குமுறைகளையும் விமர்சித்திருக்கிறார்.

’சங்கதி’, ’குசும்புக்காரன்’ என பல சிறுகதைத் தொகுப்புகளையும் நாவல்களையும் எழுதியிருக்கிறார். இவரது படைப்புகள் தலித் பெண்களின் வாழ்க்கையை படம் பிடித்து காட்டுகின்றன.

ஊர்மிளா பவார்

ஊர்மிளா பவார் 1945-ம் ஆண்டு மகாராஷ்டிராவின் ரத்தினகிரி பகுதியில் பிறந்தார். இவரது அப்பா தீண்டத்தகாதவர்களுக்காக செயல்பட்டு வந்த பள்ளியின் ஆசிரியர். ஊர்மிளா மராத்திய இலக்கியத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார். மகாராஷ்டிர பொதுப் பணித் துறையில் வேலை செய்து பணி ஓய்வு பெற்றவர்.

1

சாதி, பாலினம் போன்றவை சார்ந்த பாகுபாடுகளை இவரது எழுத்துகள் பிரதிபலிக்கின்றன.

We Also Made History என்கிற நூலை அம்பேத்கரின் செயற்பாட்டாளர் மீனாட்சி மூன் உடன் இணைந்து எழுதியுள்ளார். ஆணாதிக்க மனோபாவத்தை தலித் பெண்களின் பார்வையில் இந்த நூல் பேசுகிறது.

’ஆய்தான்’ என்கிற பெயரில் இவர் எழுதிய சுயசரிதை The Weave of My Life: A Dalit Woman’s Memoirs என்கிற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

மீனா கந்தசாமி

மீனா கந்தசாமி 1984-ம் ஆண்டு பிறந்தவர். இவரது பெற்றோர் பேராசிரியர்கள்.

1

மீனா கந்தசாமி கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பெண்ணியவாதி என பன்முகத்தன்மை கொண்டவர். சமகால வாசகர்களைப் பெரிதும் கவர்ந்த மீனா கந்தசாமி, தலித் இலக்கியத்தை மிகச்சிறப்பாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். When I Hit You, Exquisite Cadavers ஆகியவை இவரது பிரபல நாவல்கள்.

குமுத் பாவ்டே

குமுத் பாவ்டே 1983-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் பிறந்தார். ருத் மனோரமா நிறுவிய ’தலித் பெண்கள் தேசிய கூட்டமைப்பின்’ (National Federation of Dalit Women) நிறுவன உறுப்பினர்களில் இவரும் ஒருவர். இந்த என்ஜிஓ தலித் பெண்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கிறது.

தலித் சமூகத்தினர் சமஸ்கிருதம் படிக்க அனுமதியில்லை. அந்தத் தடைகளைத் தகர்த்து குமுத் பாவ்டே சமஸ்கிருதம் படித்தார். அதுமட்டுமல்ல அமராவதியில் உள்ள சமஸ்கிருத அரசுக் கல்லூரியில் சமஸ்கிருத துறையின் தலைவராகவும் பணியாற்றினார். Antahsphot என்கிற இவரது சுயசரிதை தலித் பெண்கள் சுரண்டப்படுவதைப் பற்றி ஆழமாக பேசுகிறது.

ஆங்கில கட்டுரையாளர்: சோஷியல் ஸ்டோரி குழு | தமிழில்: ஸ்ரீவித்யா