Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: சீறிப் பாய்ந்த தங்கம் விலை - ஒரே நாளில் ரூ.840 உயர்வு!

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 அதிகரித்து, ரூ.67,000-ஐ நோக்கிய புதிய உச்சத்துக்கு சீறிப் பாய்ந்துள்ளது நகை வாங்க விழைவோருக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Gold Rate Chennai: சீறிப் பாய்ந்த தங்கம் விலை - ஒரே நாளில் ரூ.840 உயர்வு!

Friday March 28, 2025 , 2 min Read

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 அதிகரித்து, ரூ.67,000-ஐ நோக்கிய புதிய உச்சத்துக்கு சீறிப் பாய்ந்துள்ளது நகை வாங்க விழைவோருக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெட் வேகத்திலான இந்த விலை உயர்வு தொடரக் கூடும் என அஞ்சப்படுகிறது.

சென்னையில் வியாழக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.40 உயர்ந்து ரூ.8,235 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.320 உயர்ந்து ரூ.65,880 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.44 அதிகரித்து ரூ.8,984 ஆகவும், சவரன் விலை ரூ.352 உயர்ந்து ரூ.71,872 ஆகவும் இருந்தது. தற்போது ஒரே நாளில் விண்ணை முட்டும் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது.

தங்கம் விலை நிலவரம் - வெள்ளிக்கிழமை (28.3.2025):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.105 உயர்ந்து ரூ.8,340 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.840 உயர்ந்து ரூ.66,720 ஆகவும் இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.114 அதிகரித்து ரூ.9,098 ஆகவும், சவரன் விலை ரூ.912 உயர்ந்து ரூ.72,784 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (28.3.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.3 உயர்ந்து ரூ.114 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.3,000 உயர்ந்து ரூ.1,14,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

காரணம் என்ன?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தடுமாற்றத்துடன் காணப்படுகிறது. அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு நடவடிக்கைகளால் சர்வதேச அளவில் வர்த்தக தடுமாற்றங்கள் நிலவுகின்றன.

gold rate chennai

குறிப்பாக, வாகன இறக்குமதி மீதான அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அரசின் வரி விதிப்பு நடவடிக்கைகள் இப்போது பங்குச் சந்தைகளில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. இதனால், மீண்டும் பாதுகாப்பு கருதி தங்கத்தின் மீது முதலீடு செய்வதில் முதலீட்டாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து ஆபரணத் தங்கம் புதிய உச்சங்களை நோக்கி விரைந்து பயணிக்கத் தொடங்கியிருக்கிறது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,340 (ரூ.105 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.66,720 (ரூ.840 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,098 (ரூ.114 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.72,784 (ரூ.912 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,340 (ரூ.105 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.66,720 (ரூ.840 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,098 (ரூ.114 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.72,784 (ரூ.912 உயர்வு)


Edited by Induja Raghunathan