மயானம் வரை சென்று மூதாட்டியை அடக்கம் செய்த பெண்கள் - தாராபுரத்தில் நெகிழ்ச்சி சம்பவம்!
இறந்தவர் உடலை ஆண்கள் தான் மயானத்திற்குத் தூக்கிச் செல்ல வேண்டும். இந்த விதிமுறையையும் வழக்கத்தையும் மாற்றும் விதமாக பெண்களே மூதாட்டியின் சடலத்தைப் பாடையில் வைத்து தாங்களே மயானம் வரை சுமந்து சென்று நல்லடக்கம் செய்தனர்.
இறந்த மூதாட்டி சடலத்தை மயானம் வரை சுமந்து சென்று பெண்களே நல்லடக்கம் செய்த சம்பவம் தாராபுரத்தில் நடந்துள்ளது.
தாராபுரம் வழக்கறிஞரான கிருஷ்ணகுமாரின் பெரியம்மா இந்திராணி, வயது 83. இவர் வயதானதன் காரணமாக காலமானார். இவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது அங்கு வந்த திராவிடர் கழகத்தைச் சேர்ந்த பெண்களும் அஞ்சலியும் இறுதி மரியாதையையும் செலுத்தினர். பெண்கள் மயானத்திற்கு வரக்கூடாது என்பதுதான் சாஸ்திர சம்பிரதாயங்கள் வைத்துள்ள விதிமுறையாகும்.
இறந்தவர் உடலை ஆண்கள் தான் மயானத்திற்குத் தூக்கிச் செல்ல வேண்டும். இந்த விதிமுறையையும் வழக்கத்தையும் மாற்றும் விதமாக பெண்களே மூதாட்டியின் சடலத்தைப் பாடையில் வைத்து தாங்களே மயானம் வரை சுமந்து சென்று நல்லடக்கம் செய்தனர்.
இந்தச் சம்பவம் தாராபுரத்தின் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.