'நாம் AD-யில் (டீப்சீக்கிற்கு பிந்தைய யுகம்) இருக்கிறோம்' - ஸ்ரீதர் வேம்பு கருத்து!
Zoho Day25- யில் தலைமை உரை நிகழ்த்திய ஸ்ரீதர் வேம்பு, செயற்கை நுண்ணறிவு புதிய யுகத்தில் அடியெடுத்து வைத்திருப்பதாகவும், டீப்சீக்கிற்கு பிந்தைய யுகமாக- "After DeepSeek" (AD) இது அமைவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜோஹோவின் சி.இ.ஓ பொறுப்பில் இருந்து விலகி, முதன்மை விஞ்ஞானியாக பொறுப்பேற்ற பிறகு, பொதுவெளியில் நிகழ்த்திய முதல் உரையில் ஜோஹோ இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, செயற்கை நுண்ணறிவு புதிய யுகத்தில் அடியெடுத்து வைத்திருப்பதாகவும், டீப்சீக்கிற்கு பிந்தைய யுகமாக- "After DeepSeek" (AD) இது அமைவதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸில் நடைபெற்ற, நிறுவனத்தின் ஆண்டு சர்வதேச ரிசர்ச அனலிஸ்ட் மாநாடான ஜோஹோடே25-இல் தலைமை உரை நிகழ்த்திய ஸ்ரீதர் வேம்பு, முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வளர்ச்சியில் அடைப்படையான மாற்றம் ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். இதுவரையான வளர்ச்சி உள்கட்டமைப்பு வசதி சார்ந்த பெரும் முதலீடு மற்றும் பெரிய நிறுவனங்கள் சார்ந்ததாக இருந்தது, என குறிப்பிட்டார்.

மைக்ரோசாப்ட் சி.இ.ஓ. சத்ய நாதெல்லா, அண்மை பாட்காஸ்டிங் நிகழ்ச்சி ஒன்றில் ஓபன் ஏஐ நிறுவனத்தை தற்கால, கூகுள் அல்லது மைக்ரோசாப்ட் அல்லது மெட்டா என வர்ணித்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
“2025ம் ஆண்டு வித்தியாசமாக இருக்கும். பெரிய நிறுவனங்கள் ஏஐ நுட்பத்தை சொந்தம் கொண்டாடும், மற்றவர்கள் அவற்றை பின்பற்றி நடக்க வேண்டும் என கருதப்பட்டது. கடந்த ஆண்டு ஏஐ உள்கட்டமைப்பில் 250 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் மட்டும் 90 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் சத்ய நாதெல்லா, ஜிபியு செலவுகளை பாலன்ஸ் ஷீட்டில் பின்னுக்குத்தள்ள வேண்டியது பற்றி பேசினார். இவை எல்லாமே அடுத்த பெரிய விஷயம் தொடர்பான அனுமானத்தில் அதை தவறவிடாமல் வெற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் மேற்கொள்ளப்பட்டது,“ என்று ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார்.
“ஆனால் ஒரே வார இறுதியில் இந்த அனுமானங்கள் உடைத்து நொருக்கப்பட்டன. இதை பிக் கேபெக்ஸ் யுகம் என நான் சொல்வேன் - BC era (Big Capex). இப்போது டீப்சீக்கிற்கு பிந்தைய யுகம் துவங்கியுள்ளது, என அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவை பொருத்தவரை, ஏஐ வெற்றிகள், சிறிய மற்றும் அதிக கவனம் மிக்க ஆய்வுக்கூடங்களில் நிகழலாம், எனத் தெரிவித்தார். டீப்சீக் முறையில் இது அமையலாம் என்றவர், பெரிய அளவிலான முதலீடு தேவையில் இருந்து ஏற்பட்டுள்ள மாற்றம் இது என்றார்.
“சீனர்கள் (ஏஐ) பயிற்சியில் சில புதுமைகளை உருவாக்கியுள்ளனர். இது டீப்சீக்கில் இருந்து தெளிவாகிறது. ஒரு சிலர் இதில் மாறுபட்டாலும், 60 ஆய்வுக்கூடங்கள் இருக்கின்றன என்பது எல்லாருமே மேலும் பணம் எனும் அடிப்படையில் செயல்படவில்லை என்பதை உணர்த்துகிறது. இங்கு தான் இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும். இத்தகைய புதுமைகளை உருவாக்க நமக்கு பெரும் பணம் தேவையில்லை,” என்று குறிப்பிட்டார்.
ஜோஹோ அண்மையில் தனது சொந்த ஏஐ மேடை ஜியாவை, ஜியா ஏஜெண்ட், ஏஜெண்ட் ஸ்டூடியோ, ஏஜெண்ட் மார்கெட்பிளேஸ் வாயிலாக விரிவாக்கியது. இதன் மூலம் வர்த்தக நிறுவனங்கள் தங்கள் செயல்பாட்டிற்கு ஏற்ற தானியங்கி டிஜிட்டல் ஏஜெண்ட்களை உருவாக்கி பயன்படுத்தலாம்.
மேலும், இன்று முதல், ஜோஹோ மற்றும் அதன் மேனேஜ் இஞ்சின், குறிப்பிட்ட செயல்களுக்கு முன்னதாக உருவாக்கப்பட்ட ஜியா ஏஜெண்ட்களை முன்னோட்டமாக்கும் மற்றும் வரும் வாரங்களில் ஜோஹோவில் நூற்றுக்கும் மேற்பட்ட சேவைகளில் ஒருங்கிணைக்கப்படும்.
சாஸ் ஜாம்பவான் நிறுவனத்தை 1996ல் உருவாக்கிய ஸ்ரீதர் வேம்பு, கடந்த மாதம் சி.இ.ஓ பதவியில் இருந்து விலகி முதன்மை விஞ்ஞானியாக செயல்பட இருப்பதாக தெரிவித்தார்.
"இன்று புதிய அத்தியாயம் துவங்குகிறது. ஏஐ துறையில் அண்மைக்கால முக்கிய மேம்பாடுகள் உள்ளிட்ட நம்மை எதிர்நோக்கியுள்ள பல்வேறு சவால்கள் மற்றும் வாய்ப்புகளை கருத்தில் கொண்டு, ஆய்வு மற்றும் மேம்பாடு பணிகளிலும், என்னுடைய தனிப்பட்ட கிராமப்புற வளர்ச்சி நோக்கிலும் கவனம் செலுத்துவது ஏற்றதாக இருக்கும்," என முடிவெடுக்கப்பட்டுள்ளது என அவர் கூறியிருந்தார்.
ஆங்கிலத்தில்: புவனா காமத், தமிழில்: சைபர் சிம்மன்

உலகையே அதிரவைத்த 'DeepSeek' - ChatGPT-க்கு சவால் விடும் சீன ஏஐ செயலி உருவானது எப்படி?
Edited by Induja Raghunathan