Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

மத்திய பட்ஜெட் 2024: வருமான வரியில் சின்ன மாற்றம் - பட்ஜெட்டில் என்னென்ன புதிய அறிவிப்புகள்?

புதிய வருமான வரி விதிப்பு முறையில் மாற்றத்தை அறிவித்துள்ளது மத்திய அரசு. எனினும் தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சரவம்பில் மாற்றமில்லை என்று மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் 2024: வருமான வரியில் சின்ன மாற்றம் - பட்ஜெட்டில் என்னென்ன புதிய அறிவிப்புகள்?

Tuesday July 23, 2024 , 4 min Read

புதிய வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, செல்போன் உதிரிபாகங்கள் விலை குறைப்பு, தங்கம், வெள்ளியின் இறக்குமதி வரி குறைப்பு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2024 அறிவிப்பில் வெளியிட்டுள்ளார்.

நடப்பு 2024-25 நிதியாண்டின் முழுபட்ஜெட் ஜுலை 23 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மோடி 3.0 ஆட்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 7வது முறையாக மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்தார். காலை 11 மணியளவில் பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கிய அவர், பாஜக அரசின் மீதான நம்பிக்கையால் மக்கள் மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடியை ஆட்சியில் அமர்த்தியுள்ளதற்கு நன்றி தெரிவித்தார்.

சர்வதேச பொருளாதாரத்தில் நிச்சயமற்ற நிலைமை உள்ளது. இருப்பினும், இந்தியா வளர்ச்சி பிரகாசமாகவே உள்ளது. நாட்டில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது. பெண்கள், ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் நலன் என்பதே இந்த பட்ஜெட்டின் 4 முக்கிய இலக்குகள் என்றார்.

budget 2024

யாருக்கு விலக்கு?

பட்ஜெட்டில் சம்பளதாரர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் வருமான வரி விலக்கு அறிவிப்பையும் நிதியமைச்சர் அறிவித்தார். தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சரவம்பில் மாற்றமில்லை. ஆண்டு வருமானம் 3 லட்ச ரூபாய் வரை இருந்தால் வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. அந்த நடைமுறையில் மாற்றமில்லை.

புதிய வரி முறையை பின்பற்றுவோருக்கு, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை பெறுபவர்களுக்கு வரி இல்லை.

  • ரூ.3 - 7 லட்சம் வரையிலான வருமானத்துக்கு - 5% வரி,
  • ரூ. 7 முதல் -10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 10% வரி,
  • ரூ.10 முதல் -12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 15% வரி,
  • ரூ.12 முதல் - 15 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20%,
  • ரூ.15 லட்சத்துக்கும் அதிகமான வருமானத்துக்கு 30% வரி விதிக்கப்படும் என வரி விகிதங்கள் மாற்றப்பட்டுள்ளது.
budget 2024

மத்திய பட்ஜெட் 2024-25 மற்ற முக்கிய அம்சங்கள்:

  • கல்வி, வேலைவாய்ப்பு, திறன் வளர்ச்சிக்கு நடப்பு பட்ஜெட்டில் 1.48 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • 4 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி அளிக்கப்படும்.
  • 80 கோடி மக்கள் பயன் பெறும் 'கரீப் அன்னயோஜனா திட்டம்' அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு.
  • வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயிகளை ஈடுபடுத்த திட்டம்.
  • கிசான் கடன் அட்டை 5 மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்படும்.
  • புதிதாக பணியில் சேரும் 30 லட்சம் இளைஞர்களுக்கு ஒரு மாத ஊதியம் ஊக்கத்தொகையாக அவர்களின் வைப்புத் தொகையில் வைக்கப்படும்.
  • பணியில் உள்ள பெண்களுக்கு விடுதிகள் அமைக்கப்படும்.
  • வேளாண் துறையை டிஜிட்டல்மயமாக்க கவனம் செலுத்தப்படும்.
  • கடுகு, நிலக்கடலை, சூரியகாந்தி உள்ளிட்ட எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டம்.
  • உள்நாட்டு உயர் கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பு பயில மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் கல்விக்கடன் வழங்கப்படும்.
  • ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • பீகார் மாநிலத்தில் ரூ.26,000 கோடி செலவில் 4 புதிய எக்ஸ்பிரஸ்வே சாலைகள் அமைக்கப்படும். மருத்துவ உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.
  • ரூ.3 லட்சம் கோடியில் பெண்கள், சிறுமிகளுக்கு நலத்திட்டங்கள்.
  • முத்ரா கடன் வரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்பு. முன்பு ரூ.10 லட்சம் வரம்பாக இருந்தபோது கடன் பெற்று, அதை உரிய முறையில் திருப்பிச் செலுத்தியவர்கள் புதிய வரம்பின் கீழ் பயன் பெறலாம்.
  • நகரங்கள், கிராமப்புறங்களில் மேலும் 3 கோடி வீடுகள் அமைக்கப்படும்.
  • கிராமப்புற வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.2.66 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
  • 3 வகையான புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
  • நாட்டின் 500 முன்னணி நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு பணி அனுபவம் பெறும் வகையில் இன்டர்ன்ஷிப் பயிற்சி அளிக்கப்படும்.
  • இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ் ஒருமுறை உதவியாக இளைஞர்களுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படும்.
  • நாடு முழுவதும் 20 தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.
  • தொழில் நிறுவனங்களுக்கு புதிய தீர்ப்பாயம் உருவாக்கப்படும். இதன் மூலம் நிலுவையில் உள்ள ஏராளமான வழக்குகள் முடிவுக்கு வரும்.
  • 30 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள் தொகை கொண்ட 14 பெருநகரங்களில் பொதுப் போக்குவரத்து சார்ந்த வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • அடுத்த 5 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களில் அரசு சார்பில் 100 சாலையோர உணவு மையங்கள் உருவாக்கப்படும்.
  • பிரதமரின் சூர்யா கர் முஃப்த் பிஜிலி யோஜனா (PM Surya Ghar Muft Bijli ) திட்டத்தின் கீழ், 1 கோடி வீடுகளுக்கு சோலார் பேனல் மூலம் சூரிய மின் வசதி ஏற்படுத்தித் தரப்படும்.
  • குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் மின்னணு வர்த்தக ஏற்றுமதி மையங்கள் ஏற்படுத்தப்படும்.
  • அசாம் மாநிலத்தில் வெள்ள மேலாண்மை, நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு.
  • பிரதமரின் கிராம சாலை திட்டம் 4-ன் கீழ் எல்லா காலநிலையையும் தாக்குப்பிடிக்கும் வகையில் 25,000 கிராமப் பகுதிகளில் சாலைகள் அமைக்கப்படும்.
  • விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.1,000 கோடி மூலதன நிதியாக வைக்கப்படும்.
  • நடப்பு நிதியாண்டில் நாட்டின் நிதிப்பற்றாக்குறை 4.9% ஆக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.
  • நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் ரூ.10 கோடியில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் 1 கோடி நகர்ப்புற ஏழை மக்கள் பயனடைவர்.
  • செல்போன் உதிரி பாகங்களின் இறக்குமதி வரி 15% குறைவதால் செல்போன், சார்ஜர்களின் விலை குறைகிறது.
  • தங்கம், வெள்ளி இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
  • பிளாட்டினத்துக்கான இறக்குமதி வரி 12 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.
  • பிளாஸ்டிக் பொருட்களுக்கான இறக்குமதி வரி உயர்த்தப்படுகிறது.
  • வருமான வரி செலுத்துவோரில் 3-ல் 2 மடங்கு பேர் புதிய நடைமுறைக்கு மாறியுள்ளனர்.
  • ஆன்லைன் வர்த்தகத்துக்கான டிடிஎஸ் பிடிப்பு குறைக்கப்படுகிறது.
  • டிடிஎஸ் தாக்கலில் நிகழும் தாமதம் இனி கிரிமினல் குற்றமாக கருதப்படாது.
  • அறக்கட்டளைகளுக்கு இரட்டை வரி முறை நீக்கப்பட்டு, ஒரே வரி முறையாக நடைமுறைப்படுத்தப்படும்.
  • முதலீட்டாளர்களுக்கான ‘ஏஞ்சல் டாக்ஸ்’ ரத்து செய்யப்படுகிறது.