கைகளை அசைத்தே கோடிகளில் சம்பாதிக்கும் கேபி லாமே - ஒரு வீடியோவுக்கு ரூ.6 கோடி!
டிக்-டாக் பிரபலமான கேபி லேம், சோசியல் மீடியா மூலமாக இவர் சம்பாதித்த சொத்து மதிப்பு 10 மில்லியன் டாலர்களை அடைந்துள்ளதாக வெளியான தகவல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
டிக்-டாக் பிரபலமான கேபி லேம், சோசியல் மீடியா மூலமாக இவர் சம்பாதித்த சொத்து மதிப்பு 10 மில்லியன் டாலர்களை அடைந்துள்ளதாக வெளியான தகவல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
சோசியல் மீடியா என்பது வெறும் பொழுதுபோக்கு தளம் என்பதை மாற்றி பணம் காய்ச்சும் மரம் என டிக்-டாக் மாற்றியது. இதனையடுத்து, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என அனைத்து தளங்களிலும் ஒரு நிறுவனத்தின் விளம்பரம் அல்லது பிராண்ட் புரோமோஷனுக்காக சில ஆயிரங்கள் முதல் பல கோடிகள் வரை சோசியல் மீடியா பிரபலங்கள் சம்பாதித்து வருகின்றனர்.
உலக அளவில் டிக்-டாக்கில் 142.8 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்ட கேபி லாமே (Khaby Lame) என்ற இளைஞர், அதன் மூலமாக கோடிகளில் சம்பாதிக்கும் நபராகவும் உள்ளார்.
யார் இந்த கேபி லேம்:
வறுமை காரணமாக செனகல் நாட்டைச் சேர்ந்த கேபி லாமேன் குடும்பம், அவருக்கு ஒரு வயதாக இருக்கும் போது இத்தாலிக்கு குடிபெயர்ந்தது. 2001ம் ஆண்டு இத்தாலிக்கு குடிபெயர்ந்த போதும் கேபி லாமேன் குடும்பத்தால் வறுமையில் இருந்து மீள முடியவில்லை. இதனால் இளம் பருவத்திலேயே இவர், டுரின் நகரில் உள்ள ஒரு தொழிற்சாலை ஒன்றிற்கு இயந்திர ஆப்ரேட்டராக வேலைக்குச் சேர்ந்தார்.
கேபி லாமேன் ஊதியம் குடும்பத்திற்கான ஒத்துழைப்பு கொடுத்து வந்த நிலையில், 2020ம் ஆண்டு கோரதாண்டவம் ஆடிய கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக வேலையை இழந்தார்.
இந்நிலையில், தான் லாக்டவுனில் வீட்டில் இருக்கும் போது தான், கேபி டிக்-டாக்கில் நிறைய வீடியோக்களை பதிவிட ஆரம்பித்தார். லைப் ஹேக், ஸ்மார்ட் கேஜெட்களை கலாய்க்கும் விதமாக வீடியோக்களை வெளியிட்டு வந்த நக்கல் மன்னன் ஆன கேபி லெம், ஒரு வார்த்தை கூட பேசாமால் உடல் மொழியாலேயே சொல்வந்த விஷயங்களை பார்வையாளர்களுக்கு எளிதாக புரியவைத்தார். வீடியோக்களில் பேசாத கேபி லேம் பேட்டி ஒன்றில் கூறுகையில்,
“சிறுவயதிலிருந்தே மக்களை மகிழ்விப்பதும், சிரிக்க வைப்பதும் எனக்கு பிடித்தமான ஒன்று. உலகத்திற்கு முன் என் பேஷனை பகிர்ந்து கொள்ள மேடை வழங்கியதற்காக டிக்டாக்கிற்கு நான் நன்றி கூறுகிறேன். என்னை உற்சாகப்படுத்த அழகான டிக்டாக் குடும்பத்தினர் இருக்கின்றனர் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து என் கனவுகளை நோக்கி பணியாற்றுவேன்,” எனத் தெரிவித்திருந்தார்.
நடப்பு ஆண்டின் ஜூன் மாத நிலவரப்படி 142.8 மில்லியன் qபாலோயர்களைக் கொண்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் இவரை 149.5 மில்லியன் பேரும் பின் தொடருகின்றனர்.
கேபி லேம் வருமானம்:
உலக அளவில் பிரபலமான கேபி லேம், இன்ப்ளூயன்ஸ் மார்க்கெட் மூலமாக மட்டுமே ஆண்டுக்கு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகிறார். சமீபத்தில் பிரபல ஜெர்மானிய ஆடை, வாசனை திரவ நிறுவனமான ஹூகோ பாஸ் நிறுவனத்தின் மிலன் பேஷன் வீக் ஷோவில் ராம்ப் வாக் நடக்கவும், அந்த வீடியோவை தனது டிக்-டாக்கில் வெளியிடவும் கேபி லேம், $4,50,000 டாலர்கள் இந்திய மதிப்பில், ரூ.3.58 கோடிக்கு மேல் சம்பளம் பெற்றுள்ளார்.
கேபி லாமேன் மேலாளரான அலெஸாண்ட்ரோ ரிஜியோ கூறுகையில்,
“22 வயதான கேபி லேம், தனது TikTok புகழ் மற்றும் அடுத்தடுத்த ஒப்புதல் மூலமாக $10 மில்லியன் டாலர்களை சம்பாதிக்கும் பாதையில் இருக்கிறார்,” எனத் தெரிவித்துள்ளார்.
ஃபார்ச்சூன் மதிப்பாய்வு செய்த ஆவணங்கள் அடிப்படையில்,
கேபி லேம் ஒரு முக்கிய ஹாலிவுட் ஸ்டுடியோவில் ஒரு TikTok வீடியோவிற்கு $750,000 அதாவது இந்திய மதிப்பில் 6 கோடி ரூபாய் பெற்றுள்ளார். தற்போது இவர் இத்தாலியின் சிவாசோ பகுதியில் நீச்சல் குளம், டென்னிஸ் மைதானம் போன்ற வசதிகள் உள்ள 6 மில்லியன் டாலர் மதிப்புள்ள வீட்டில் வசித்து வருகிறார்.”
அடுத்ததாக திரையுலகில் கால் பதிக்க வேண்டும் என்ற கனவோட கேபி லேம் முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது. இப்போது அமெரிக்க கார்ட்டூன்கள் மற்றும் திரைப்படங்களைப் பார்த்து ஆங்கிலம் கற்று வருகிறார். நல்ல நடிகராக வர வேண்டும் என்றும், வில் ஸ்மித்துடன் ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்றும் லட்சியத்துடன் செயல்பட்டு வருகிறார்.
வெயிட்டராகவும், தொழிற்சாலை பணியாளராகவும் வெறும் ஆயிரம் டாலர்கள் மட்டுமே சம்பதித்து வந்த கேபி லேமை, சோசியல் மீடியா தற்போது மில்லியன் கணக்கான சொத்துக்களுக்கு அதிபராக்கியுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.