Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Swiggy IPO: பங்கு உரிம வாய்ப்பு மூலம் கோடீஸ்வரர்கள் ஆகும் ஸ்விக்கி ஊழியர்கள்!

உணவு டெலிவரி சேவை நிறுவனமான ஸ்விக்கி, பொது பங்கு வெளியீடு, பட்டியல் தினத்தில் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு, அதன் 70 முன்னாள் மற்றும் தற்போதைய ஊழியர்கள் கோடீஸ்வரர்களாக்கி இருக்கிறது.

Swiggy IPO: பங்கு உரிம வாய்ப்பு மூலம் கோடீஸ்வரர்கள் ஆகும் ஸ்விக்கி ஊழியர்கள்!

Thursday November 14, 2024 , 2 min Read

உணவு டெலிவரி சேவை நிறுவனமான ஸ்விக்கி பொது பங்கு வெளியீடு, பட்டியல் தினத்தில் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு, அதன் 70 முன்னாள் மற்றும் தற்போதைய ஊழியர்களை லட்சாதிபதிகளாக்கி இருக்கிறது. 500க்கும் மேற்பட்ட ஊழியர்களை கோடீஸ்வரர்களாக்கி இருக்கிறது.

முன்னணி உணவு டெலிவரி சேவை நிறுவனங்களில் ஒன்றான ஸ்விக்கி, பொது பங்குகளை வெளியிட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தை இரண்டிலும் நிறுவனம் பங்குகளை பட்டியலிட்டுள்ளது.

ஸ்விக்கி பங்குகள் தேசிய பங்குச்சந்தையில் ரூ.420 எனும் விலையில் பட்டியலிடப்பட்டது. அதன் பொது பங்கு வெளியீடு விலையான ரூ.390 ஐ விட இது 7.7 சதவீத பிரிமியம் ஆகும். மும்பை பங்குச்சந்தையில் அதன் வெளியீட்டு விலையை விட 5.64 ஆதாயத்தில் ரூ412க்கு பட்டியலிடப்பட்டது.

ipo

வெளியீட்டை அடுத்து பங்குச்சந்தையில் நல்ல செயல்பாட்டை அடுத்து ஸ்விக்கி ஊழியர்கள், அதன் பங்கு உரிமை வாய்ப்பால் பலன் பெற உள்ளனர். ஸ்விக்கி ஊழியர்களில் பலர் கோடீஸ்வரர்கள் ஆகியுள்ளனர்.

ஊழியர்கள் பங்குகள்

நிறுவனங்கள் ஊழியர்களுக்கு பங்கு உரிம வாய்ப்பை இ.எஸ்.ஓ.பி (Esop) மூலம் வழங்குகின்றன. பொதுவாக இந்த பங்குகள் சந்தை விலையை விட குறைந்த விலையில் தள்ளுபடியில் வழங்கப்படுகின்றன. நிறுவனத்துடன் நீண்ட கால உறவு மற்றும் விசுவாசத்தை ஊக்குவிக்க இந்த வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

குறிப்பிட்ட காத்திருப்பு காலத்திற்கு பின், இந்த பங்கு உரிம வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். ஊழியர்களின் அனுபவம் மற்றும் பங்களிப்புக்கு ஏற்ப இது வழங்கப்படுகிறது.

ஸ்விக்கி நிறுவனம் பங்குச்சந்தை கட்டுப்பாடு அமைப்பு செபியிடம் தாக்கல் செய்த ஆவணத்தின் அடிப்படையில், வெளியே உள்ள அதன் ஊழியர் உரிம பங்குகள் 231 மில்லியன் ஆகும். இதன் மதிப்பு ரூ.9,046.65 கோடி.

இந்த பங்கு வாய்ப்பால் 500 ஸ்விக்கி ஊழியர்கள் கோடீஸ்வரர் அந்தஸ்து பெற உள்ளனர். மொத்தம் 5,000 ஊழியர்கள் இந்த வாய்ப்பை பெறலாம் என கருதப்படுகிறது. இதில் முன்னாள் ஊழியர்களும் அடக்கம். இதன்படி, ஒவ்வொருவரும், ஒரு மில்லியன் டாலர் அளவு பலன் பெறுவார்கள், இந்திய மதிப்பில் இது ரூ.8.5 கோடி.

மேலும், 500 ஊழியர்கள் குறைந்தபட்சம் ஒரு கோடி அளவிற்கு பலன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், முன்னணி ஊழியர்களில் 70 பேர் அதிக பலன் பெறுவார்கள்.

ஸ்விக்கியின் பங்கு வெளியீடு வெற்றி மற்றும் அதன் ஊழியர்களுக்கான செல்வ வலம் ஸ்டார்ட் அப் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைகிறது. ஸ்விக்கி இணை நிறுவனர்கள் ஸ்ரீஹர்ஷா மெஜட்டி, நந்தன் ரெட்டி மற்றும் பாணி கிஷன் மற்றும் முன்னணி அதிகாரிகள் சிலர் 200 மில்லியன் டாலர் அளவிலான பங்கு உரிம வாய்ப்பை பெற்றுள்ளதாக கருதப்படுகிறது.


Edited by Induja Raghunathan