Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

156 வகை வாசனை மெழுகுவர்த்திகள்; ரூ.18 கோடி விற்றுமுதல் - இது இந்திய ப்ராண்ட் வெற்றி அடைந்த கதை!

156 வகை வாசனை மெழுகுவர்த்திகளை கொண்டுள்ள டாரா கேண்டில்ஸ், இந்திய சந்தையில் தனக்கான இடத்தை பெற்றுள்ளதோடு, சர்வதேச விரிவாக்கத்திற்கும் திட்டமிட்டுள்ளது.

156 வகை வாசனை மெழுகுவர்த்திகள்; ரூ.18 கோடி விற்றுமுதல் - இது இந்திய ப்ராண்ட் வெற்றி அடைந்த கதை!

Monday January 23, 2023 , 4 min Read

லாவண்டர், ரோஸ்மேரி, ஏலக்காய், மசாலா சாய் ஆகிய வாசனைகளில் கூட மெழுகுவர்த்திகள் இருக்கிறது. தற்போது இவை பயன்பாட்டில் இருந்து, உள் அலங்காரத்தில் அத்தியாவசிய அங்கமாகிவிட்டது.

வாசனை மெழுகுவர்த்தி சந்தை 2032 இறுதியில் 5.4 பில்லியன் டாலர் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா உலக அளவில் மெழுகுவர்த்தி ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் நாடுகளில் ஒன்றாக திகழ்ந்தாலும், கோவிட்-19 காலத்தில் உள்ளூரிலும் மெழுகுவர்த்திக்கான தேவை அதிகரித்துள்ளது.

பயனாளிகள், அரோமாதெரபியின் அங்கமாகவும், விழாக்கால பரிசாகவும் மெழுகுவர்த்தையை நோக்குகின்றனர். இந்தப் போக்கை பயன்படுத்திக்கொண்டு, மும்பையைச் சேர்ந்த டாரா கேண்டில்ஸ், ஐடிசி ஓட்டல்கள் உள்ளிட்ட 5 நட்சத்திர ஓட்டல்களை தனது வாடிக்கையாளர்களாகக் கொள்ளும் வகையில் வளர்ந்துள்ளது. இந்நிறுவனம் 156 வகை வாசனை மெழுகுவர்த்திகளை உற்பத்தி செய்கிறது.

மெழுகு

எஸ்.எம்.பி ஸ்டோரிக்கு அளித்த நேர்காணலில், டாரா கேண்டிஸ் நிறுவனர் உமேஷ் சிங், இந்தியாவின் வாசனை மெழுகுவர்த்தி சந்தையின் வளர்ச்சி மற்றும் மெழுகுவர்த்திய தயாரிப்பில் தனது 20 ஆண்டுகால அனுபவம் பற்றி பேசுகிறார்.

மெழுகுவர்த்தி பிராண்ட்

கடந்த 20 ஆண்டுகளாக உமேஷ் வெற்றிகரமான வர்த்தகத்தை நடத்தி வந்தாலும், ஒரு பிராண்டை உருவாக்கும் பயணம் எளிதாக அமையவில்லை. அவரது குடும்பத்தில் வேலை பார்ப்பதற்கு பதிலாக தொழில்முனைவை தேர்வு செய்த முதல் நபரான உமேஷ், ஆர்கானிக் கெமிஸ்ட்ரியில் பட்டப்படிப்பை முடிதத்துமே தனது ஆர்வத்துக்கு பொருந்தக்கூடிய வர்த்தக ஐடியாவை தேடத்துவங்கினார்.

“நான் படைப்பூக்கம் மிக்கவன், 9 முதல் 5 மணி வரையான வேலை என்னை உற்சாகப்படுத்தவில்லை. படிப்பை முடித்த பிறகு, 2001ல் சொந்தத் தொழில் துவங்கும் உத்தேசத்துடன் கையால் காகிதம் செய்யும் கலை தொடர்பாக டிப்ளமோ படித்தேன். எனினும், சந்தையை புரிந்து கொள்ள முடியவில்லை மற்றும் வர்த்தகத்தை தொடர்வது சவாலாக அமைந்து தோல்வி உண்டானது,” என்கிறார் உமேஷ்.

கல்வியாளர்கள், டாக்டர்கள் கொண்ட குடும்பத்தைச்சேர்ந்தவர் என்பதால், உமேஷ் ஆசிரியராக வேண்டும் என அப்பா விரும்பினாலும், அவர் தன் ஈடுபாட்டில் தீவிரம் காட்டினார்.

“பிச்சை எடுப்பவருக்கு தேர்வுகள் இல்லை என்பதால், இப்போது நான் தொடர்ந்து முயற்சிக்க வேண்டியிருந்தது. அப்போது, பிரத்யேகமான பரிசு அளிக்கும் தொழில் பிரபலமாக இருந்ததால், என் படைப்பூக்கத்திற்கு பொருந்தும் எந்த தொழிலையும் செய்யத் தயாராக இருந்தேன். எனவே, பிறந்தநாள், திருமணம் போன்றவற்றுக்கான பரிசு ஆர்டர்களை எடுக்கத் துவங்கியது வர்த்தக பரிசு உலகை அறிமுகம் செய்தது,” என்கிறார்.

வர்த்தக பரிசு அளிப்பது 90-கள் இறுதியில் மேலும் பிரபலமானது. உமேஷுக்கு தொடர்புகள் கிடைத்து, அவரது படைப்பூக்கத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தாலும், வளர்ச்சி மந்தமாகவே இருந்தது.

எனினும், 2005ல் திருப்புமுனையாக, மும்பையில் உள்ள எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மாளிகைக்கு வாசனை மெழுகுவர்த்தை சப்ளை செய்யும் ஆர்டர் கிடைத்தது.

“மெழுகுவர்த்திகளை வாங்கி விற்பது எளிதான வழி என்றாலும், மெழுகுவர்த்தி செய்வதை அறிந்த என் மனைவியும் நானும் சொந்தமாக தயாரிக்கத் தீர்மானித்தோம்,” என்கிறார்.

உமேஷ் மற்றும் அவரது மனைவி ரிச்சா, முதல் ஆர்டரால் உற்சாகம் அடைந்து, 23 கி மெழுகில் 40 மெழுகுவர்த்திகள் செய்தனர். குறித்த நேரத்தில் டெலிவரி செய்தாலும் அவை மோசமான மெழுகுவர்த்திகள், என்கிறார் உமேஷ்.

“இந்த ஆர்டர் எப்போதும் எங்கள் மனதுக்கு நெருக்கமாக இருக்கும், ஏனெனில் இதை நிறைவேற்றும் போது, மெழுகுவர்த்தி தயாரிப்பில் நாங்கள் கற்றுக்கொண்ட பாடம் வேறு எங்கும் கற்றுக்கொண்டிருக்க முடியாது. மெல்ல, பல வகையான வாசனை மெழுகுவர்த்திகள், புகையில்லா மெழுகுவர்த்திகள் தயாரிக்கத் துவங்கினோம். என்னுடைய ஆர்கானிக் கெமிஸ்ட்ரி பின்னணி இங்கு உதவியது. 2005ல் முழுவீச்சிலான மெழுகுவர்த்தி தொழிலுக்குத் தயாரானோம்,” என்கிறார்.

நிறுவனத்திற்கு அடுத்த பெரிய ஆர்டர் JW Marriott மற்றும் தாஜ் ஓட்டல்களிடம் இருந்து கிடைத்தது.

“உங்களால் ஓட்டல் துறைக்கு விற்க முடியும் என்றால் வேறு எங்கும் விற்க முடியும்,” என்கிறார் உமேஷ்.

இன்று நாடெங்கிலும் 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிப்பதோடு, விநியோகக் கூட்டு மூலம் சர்வதேச அளவிலும் விரிவாக்கம் செய்து வருகிறது.

மெழுகு

இந்தியாவின் முன்னணி பிராண்ட் Ekam மற்றும் சர்வதேச பிராண்ட்கள் பாத் மற்றும் பாடிவொர்க்ஸ் போன்றவற்றின் போட்டிக்கு மத்தியில் டாரா கேண்டில்ஸ் தனித்து நிற்பது எப்படி எனக் கேட்ட போது, தயாரிப்பு வரிசையே தங்கள் தனித்தன்மை என்கிறார் உமேஷ்.

“இதுவரை 15,000 எஸ்கேயூக்களை (SKU) உருவாக்கியுள்ளோம். போட்டியாளர்களோடு ஒப்பிட்டால் இது 2 சதவீதம் கூட இல்லை. நாங்கள் சப்ளை செய்யும் ஓட்டல்களில் இருந்து இதுவரை நிராகரிக்கப்பட்டதே இல்லை. 10 ஆண்டுகளாக அவர்களுக்கு சப்ளை செய்து வருகிறோம். இதற்கு தரம் மட்டுமே காரணம்,” என்கிறார் உமேஷ்.

விருந்தோம்பல் துறைக்கு சப்ளை செய்வது தவிர, மருந்தகம் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறைகளிலும் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளார். பத்தாண்டுகளுகு மேலாக, இந்த துறைகளுக்கான வர்த்தகப் பரிசுகளை பிரத்யேகமாக தயார் செய்து வழங்கி வருவதாக கூறுபவர் குறிப்பிட்ட தினங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு ஏற்ப புதிய வடிவமைப்புகளை வழங்குவதாகவும் கூறுகிறார்.

நேரடி இணையதளத்தில் இந்த மெழுகுவர்த்திகள் ரூ.225 முதல் ரூ.425 என பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்திய தன்மை

கோரேக்வான் கிழக்கில் அமைந்துள்ள ஆலையில் டாடா கேண்டில்கள் தயார் செய்யப்படுகின்றன. வார்ப்புகள் சொந்தமாக தயாரிக்கப்பட்டு, வாசனை திரவியங்கள் இந்தியா முழுவதும் இருந்து தருவிக்கப்படுகின்றன.

கோவிட்-19 சூழலுக்கு நடுவே பல வர்த்தகங்கள் நேரடி இணைய விற்பனை வழியை முயன்றன. உமேஷும் இதே போல, 2021ல் D2C இணையதளத்தை துவக்கினார். நிறுவன தயாரிப்புகளின் இந்திய தன்மையே வெற்றிக்குக் காரணம் என்கிறார் உமேஷ்.

“எல்லா மெழுகுவர்த்திகளிலும் பெயர்கள் இந்தி எழுத்துகளுடன் துவங்குகிறது. எனது தயாரிப்பு மற்றும் என் நாட்டுடனான உணர்வுப் பூர்வமான பிணைப்பு இது. எங்கள் தயாரிப்பின் பிறப்பிடம் பற்றி வெளிப்படுத்த விரும்புகிறோம்,” என்கிறார்.

டாரா கேண்டிஸ்ல் விநியோகத்தை சிங்கப்பூரில் அமைக்க பேச்சு வார்த்தை நடத்திய போது, விநியோகிஸ்தர் கேரளா கி கலிமிர்ச் மற்றும் ’அருணாச்சல் கா பாரிஜாத்’ என பெயர் சூட்ட முற்பட்டத்தை உமேஷ் சுட்டிக்காட்டுகிறார்.

மெழுகு

சந்தை

அமெரிக்கா மற்றும் யூகே வாசனை மெழுகுவர்த்திகளுக்கான முதன்மை சந்தையாக விளங்குகின்றன. டாரா கேண்டில்ஸ் அடுத்த கட்டமாக, பிலிப்பைன்ஸ், கனடா, வட அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் விநியோக அமைப்பை ஏற்படுத்தி, நேரடி விற்பனையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

நேரடி விற்பனையில் கடந்த ஆண்டு வளர்ச்சி விகிதம் பற்றிய தகவலை உமேஷ் வெளியிட விரும்பவில்லை எனினும், ஆன்லைன் துறைக்கு புதிது என்பதால் அடுத்த ஆண்டு முடிவுகள் இடம்பெறும் என்கிறார்.

நிறுவனம் 85 ஊழியர்களைக் கொண்டிருப்பதோடு, 21- 22 நிதியாண்டில் ரூ.18 கோடி விற்றுமுதல் பெற்றுள்ளது.

ஆங்கிலத்தில்: பலக் அகர்வால் | தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan