Stock News: பங்குச் சந்தையில் எழுச்சி - கிரீன் லைட்டில் பல நிறுவன பங்குகள்!
இந்திய பங்குச் சந்தைகளில் நிலவும் எழுச்சி காரணமாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளன. பெரும்பாலான நிறுவனப் பங்குகளும் பச்சை விளக்குகளுடன் ஏறுமுகம் கண்டுள்ளன.
இந்திய பங்குச் சந்தைகளில் நிலவும் எழுச்சி காரணமாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளன. பெரும்பாலான நிறுவனப் பங்குகளும் பச்சை விளக்குகளுடன் ஏறுமுகம் கண்டுள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (டிச.27) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 311.48 புள்ளிகள் உயர்ந்து 78,783.96 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 98.1 புள்ளிகள் உயர்ந்து 23,848.30 ஆக இருந்தது.
வர்த்தகம் தொடங்கும்போது பங்குச் சந்தை ஏறுமுகமாக இருந்தது, முதலீட்டாளர்கள் மத்தியில் உத்வேகத்தைக் கூட்டியது. இந்தப் போக்கு நீடித்து வருவதும் கவனிக்கத்தக்கது.
இன்று முற்பகல் 11 மணியளவில் சென்செக்ஸ் 446.89 புள்ளிகள் (0.57%) உயர்ந்து 78,919.37 ஆகவும், நிஃப்டி 178.30 புள்ளிகள் (0.75%) உயர்ந்து 23,928.50 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தையில் பெரிதாக மாற்றமின்றி வர்த்தகம் நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் ஷாங்காய், ஹாங்காங் மற்றும் டோக்கியோ பங்குச் சந்தைகளில் ஏற்றம் நிலவுகிறது. சியோல் பங்குச் சந்தை மட்டும் சரிவை சந்தித்துள்ளது. சர்வதேசப் போக்குடன், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் காட்டி வரும் ஆர்வத்தின் காரணமாக இந்திய பங்குச் சந்தையில் சாதக நிலை காணப்படுகிறது.
ஏற்றம் காணும் பங்குகள்:
இண்டஸ்இன்ட் பேங்க்
மாருதி சுசுகி
எம் அண்ட் எம்
விப்ரோ
டாடா மோட்டார்ஸ்
பாரதி ஏர்டெல்
பஜாஜ் ஃபின்சர்வ்
கோடக் மஹிந்திரா பேங்க்
ஏசியன் பெயின்ட்ஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ஹெச்சிஎ டெக்னாலஜிஸ்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
டிசிஎஸ்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.85.26 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan