Stock News: ஏற்றமும் இறக்குமாக பங்குச் சந்தைத் தொடக்கம் மீண்டது அதானிக் குழுமப் பங்குகள்!
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை நிலவரப்படி, மீண்டும் 20 புள்ளிகள் பின்னடைந்து 79,983.98 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 6 புள்ளிகள் குறைந்து 24,188.30 புள்ளிகளாகவும் உள்ளன.
இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் புதன்கிழமையான இன்று (27-11-2024) ஏற்றமு இறக்குமாகத் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் தொடக்கத்தில் சுமார் 150 புள்ளிகள் சரிந்தாலும் இப்போது சற்றே உயர்ந்தும் தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடும் தொடக்கத்தில் சரிந்து இப்போது சற்றே உயர்ந்தும் காணப்படுகின்றன.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:21 மணி நிலவரப்படி, மீண்டும் 20 புள்ளிகள் பின்னடைந்து 79,983.98 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 6 புள்ளிகள் குறைந்து 24,188.30 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் குறியீடு இன்று 93 புள்ளிகள் குறைய, நிப்டி ஐடி குறியீடு 91.40 புள்ளிகள் உயர்ந்துள்ளது. பிஎஸ்இ ஸ்மால் கேப் 343 புள்ளிகள் அதிகரித்தது. செக்டார்களில் கேப்பிடல் குட்ஸ், ஐடி, பவர் துறை பங்குகள் 0.5% முதல் 1% வரை அதிகரித்துள்ளன.
காரணம்:
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமை மஹாயுதி அபார வெற்றி கண்டதையடுத்து, சற்றே உயர்ந்த பங்குச் சந்தை இன்று முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்று வருவதால் லேசான பின்னடைவு கண்டு வருகின்றன. அமெரிக்கக் கட்டணக் கவலைகளால் பொதுவாகவே ஆசியப் பங்குச் சந்தைகள் கொஞ்சம் அழுத்தத்தைச் சந்தித்து வருகின்றன.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
அதானி எண்டெர்பிரைசஸ்
சீமென்ஸ்
அதானி போர்ட்ஸ்
எம் அண்ட் எம்
பாரத் எலெக்ட்ரானிக்ஸ்
இறக்கம் கண்ட பங்குகள்:
சிப்ளா
ரிலையன்ஸ்
ஐசிஐசிஐ பேங்க்
இன்போசிஸ்
ஆக்சிஸ் பேங்க்
இந்திய ரூபாயின் மதிப்பு அனைத்து கால சரிவு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்றே குறைந்து டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.84.33 ஆக உள்ளது.