Stock News: பங்குச் சந்தை சற்றே உயர்வு; சென்செக்ஸ், நிப்டி தள்ளாட்டம்- HCL, டெக் பங்குகள் பின்னடைவு!
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை நிலவரப்படி, 81,513.54 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு சுமார் 24,624.90 புள்ளிகளாகவும் உள்ளன.
இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் புதன் கிழமையான இன்று (11-12-2024) சற்றே உயர்வுத் தொடக்கம் கண்டுள்ளன. சென்செக்ஸ் தொடக்க நிலவரங்களின் படி, வெறும் 15 புள்ளிகளும் தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு வெறும் 16 புள்ளிகளும் மட்டுமே உயர்ந்துள்ளன.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:05 மணி நிலவரப்படி, 81,513.54 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு சுமார் 24,624.90 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் குறியீடு இன்று 154 புள்ளிகள் சரிய நிப்டி ஐடி குறியீடு 37 புள்ளிகள் பின்னடைவு கண்டது. பிஎஸ்இ ஸ்மால் கேப் 143 புள்ளிகள் அதிகரித்தது. மிட்கேப் புள்ளிகள் சற்றே உயர்ந்து காணப்படுகின்றன.
காரணம்:
அமெரிக்க டாலர் மதிப்பு கூடி வருகிறது. தங்கம் விலையும் 2 வாரத்தில் இல்லாத உயர்வை எட்டியது. அமெரிக்க பெடரல் ரிசர்வின் 3வது ரேட் கட் எதிர்நோக்கி முதலீட்டாளர்கள் காத்திருப்பதால் பங்குச் சந்தை முதலீடு குறைந்துள்ளது.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
அல்ட்ரா டெக் சிமெண்ட்
கிராசிம் இண்டஸ்ட்ரீஸ்
டாடா கன்ஸ்யூமர்
பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ்
நெஸ்லே
இறக்கம் கண்ட பங்குகள்:
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ்
ஐசிஐசிஐ வங்கி
ஹெச்.சி.எல். டெக்
விப்ரோ
டெக் மகீந்திரா
இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று சற்றே பின்னடைவு கண்டு டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.84.86ஆக உள்ளது.