Stock News: சென்செக்ஸ் தொடர் சரிவு முகம்; இன்று 400+ புள்ளிகள் சரிவு!
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை நிலவரப்படி, 394 புள்ளிகள் குறைந்து 79,612 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 142 புள்ளிகள் குறைந்து 24,196.65 புள்ளிகளாகவும் உள்ளன.
இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் செவ்வாய்க்கிழமையான இன்று (29-10-2024) சரிவடைந்து வருகின்றன. சென்செக்ஸ் தொடக்கத்தில் சுமார் 400 +புள்ளிகள் பின்னடைவு கண்டது. தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 142 புள்ளிகள் சரிந்தது.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:10 மணி நிலவரப்படி 394 புள்ளிகள் குறைந்து 79,612 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 142 புள்ளிகள் குறைந்து 24,196.65 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் குறியீடு இன்று 195 புள்ளிகள் உயர்ந்து காணப்படுகின்றது. தேசியப் பங்குச் சந்தையின் ஐடி குறியீடு 291 புள்ளிகளும் பிஎஸ்இ ஸ்மால் கேப் 99 புள்ளிகளும் குறைந்துள்ளன.
காரணம்:
அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீட்டை வாபஸ் பெற்று வருகின்றனர். குறுகிய காலத்தில் அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்களும் அதிகம் பங்குகளை விற்று வருவதால் கடுமையாகச் சரிந்து வருகிறது பங்குச் சந்தை. மேலும் முக்கிய நிறுவனங்களின் காலாண்டு லாபங்கள் திருப்திகரமாக இல்லாததும் பங்குச் சந்தையை வீழ்ச்சிக்கு இட்டுச் சென்று வருகின்றன.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
வாரீ எனெர்ஜீஸ்
ஹெச்.டி.எஃப்.சி. வங்கி
பார்தி ஏர்டெல்
மாசகான் டாக்
ஐசிஐசிஐ வங்கி
என்.டி.பி.சி
இறக்கம் கண்ட பங்குகள்:
டாடா மோட்டார்ஸ்
ஸ்பந்தனா ஸ்பூர்ட்டி
ரஜ்னிஷ் வெல்னெஸ்
ஐடியா ஃபோர்ஜ் டெக்னாலஜி
இந்திய ரூபாயின் மதிப்பு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்றும் ரூ.84.08 ஆக உள்ளது.