Stock News: குஷியில் முதலீட்டாளர்கள்; சென்செக்ஸ், நிஃப்டி கிடுகிடு உயர்வு!
இந்திய பங்குச்சந்தையானது இன்று தொடக்கம் முதலே நல்ல உயர்வுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய பங்குச்சந்தையானது இன்று தொடக்கம் முதலே நல்ல உயர்வுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பங்குச்சந்தை நிலவரம் (19/01/2024):
கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வந்தது. இந்நிலையில், வாரத்தின் கடைசி நாளான இன்று சென்செக்ஸ், நிஃப்டி புதிய உச்சத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 464.84 புள்ளிகள் உயர்ந்து 71,632 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 129.25 புள்ளிகள் உயர்ந்து 21,592 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
உயர்வுக்கான காரணம் என்ன?
இன்று, ரிலையன்ஸ், ஹெச்யுஎல் மற்றும் அல்ட்ராடெக்பேங்க், போன்ற முன்ணணி நிறுவனங்கள் டிசம்பர் மாத காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளதால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் கவனம் இந்திய பங்கு சந்தை பக்கம் திரும்பியுள்ளது.
ஏற்றம் கண்ட பங்குகள்:
- ஐசிஐசிஐ பேங்க் எச்டிஎப்சி பேங்க் இன்ஃபோசிஸ் டிசிஎஸ்
- ஆக்சிஸ் பேங்க்
- ஐடிசி
- எல்&டி
- ஏர்டெல்
- டைட்டன்
இறக்கம் கண்ட பங்குகள்:
- இன்டஸ்இன்ட் பேங்க்
இந்திய ரூபாயின் மதிப்பு: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ஒரு காசுகள் சரிந்து 83.15 ஆக உள்ளது.