Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

கூடுதலாக பணம் சம்பாதிக்க 5 எளிய பகுதிநேர வேலைகள் இதோ!

ஆர்வம் உள்ள விஷயங்களில் ஈடுபடுவதற்கான மற்றும் புதிய விஷயங்களை முயற்சிப்பதற்கான வாய்ப்பாகவும் அமைவதோடு, கூடுதல் பணம் ஈட்டவும் வழி செய்வதால் பகுதி நேர வேலை வாய்ப்பு விரும்பப்படுகிறது. இந்தியாவில் பிரபலமாக உள்ள பகுதிநேர வேலைவாய்ப்புகளின் பட்டியலை அளிக்கிறோம்.

கூடுதலாக பணம் சம்பாதிக்க 5 எளிய பகுதிநேர வேலைகள் இதோ!

Wednesday September 21, 2022 , 2 min Read

நீங்கள் பணி முடிந்த பிறகு என்ன செய்வீர்கள்? வீட்டிற்கு சென்று நெட்பிளிக்சில் படம் பார்ப்பது அல்லது நண்பர்களுடன் சேர்ந்து வெளியே செல்வதில் ஈடுபடுவதா?

நமது நேரத்தை எப்படி செலவிடுகிறோம் என்பது நம் கைகளில் தான் இருக்கிறது. பலரும் வேலைக்கு வெளியே தங்கள் ஆர்வத்தை தேட அல்லது கூடுதல் வருவாய் ஈட்ட பகுதிநேர வேலையை நாடுகின்றனர்.

பல்வேறு விஷயங்களில் ஈடுபட்டு, தங்கள் எல்லையை விரிவாக்கிக் கொள்ள வழி செய்வதால் பகுதிநேர வேலைவாய்ப்பு மிகவும் விரும்பப்படுகிறது. நீங்கள் சமூக சிந்தனை கொண்டவர் என்றால் உங்கள் எண்ணங்களை எழுத்து வடிவில் அளிக்கலாம். உற்சாகம் மிக்கவர் எனில், டிஸ்கோ ஜாக்கியாக செயல்படலாம். உடற்பயிற்சியில் ஆர்வம் உள்ளவர் எனில், பயிற்சியாளராக இருக்கலாம். ஆறுதல் கூறுவதில் வல்லவர் எனில் ஆலோசனை வழங்கலாம்.

இப்படி பல்வேறு பகுதிநேர வேலைவாய்ப்புகள் உள்ளன. இவற்றில் இருந்து உங்களுக்கு ஏற்றதை தேர்வு செய்ய வேண்டும்.

டெக்

இந்தியாவில் பிரபலமான பகுதிநேர வேலைவாய்ப்புகள்

வாடகை

உங்கள் வீட்டில் கூடுதல் அறை இருக்கிறதா? உங்கள் கேரேஜில் குப்பைகளை போட்டு வைத்திருக்கிறீர்களா அல்லது பயன்படுத்ததாக இடம் இருக்கிறதா? இவற்றை எல்லாம் நீங்கள் வாடகைக்கு விடலாம் என்பது தான் நல்ல செய்தி.

Airbnb, Booking.com, மற்றும் Nestaway போன்ற இணையதளங்களில் உங்கள் கூடுதல் அறையை பட்டியலிடலாம் அல்லது வர்த்தக நோக்கில் வாடகை விடலாம். இந்தியாவில் ரியல் எஸ்டேட்டிற்கு நல்ல தேவை இருப்பதால் வாடகை மூலம் நல்ல வருமானம் வரும் வாய்ப்பு உள்ளது.

சமூக ஊடகம்

இணையம் வலைப்பின்னல் தொடர்பு மற்றும் பணம் ஈட்டுவதற்கான நல்ல வழி. சமூக ஊடக செயல்பாடுகளில் உங்களுக்கு நல்ல பரிட்சியம் இருந்தால், சிறிய வர்த்தக நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்திற்காக சமூக ஊடகத்தை பயன்படுத்திக்கொள்ள உதவலாம்.

வர்த்தகங்களுக்கான சமூக ஊடக மேலாளராகலாம் அல்லது பிராண்ட்களின் சமூக பக்கங்களை நிர்வகிக்கலாம். இதற்கு திறனும், அர்பணிப்பும் தேவை என்றாலும், சீராக செயல்பட்டால் வருமானம் ஈட்டலாம். மற்ற வாடிக்கையாளர்களிடமும் பரிந்துரைக்கப்படலாம்.

வலைப்பதிவு

பகுதி நேர வேலைவாய்ப்பு இந்தியாவில் பிரபலமாவதற்கு முன்னரே எழுத்து மிக பழைய கலையாக இருந்து வருகிறது. பல முன்னணி ஆளுமைகள் பத்திரிகைகள், நாளிதழ்களுக்கு எழுதி வருகின்றனர். பிரிலான்சாக எழுதுபவர்களும் இருக்கின்றனர். வலைப்பதிவு எழுதுவதன் மூலமும் சம்பாதிக்கலாம். பிரபலமாக விரும்பினால் புத்தகம் எழுதி அமேசானில் விற்கலாம் அல்லது மற்றவர்களுக்கு எழுதி கொடுக்கலாம்.

பங்குச்சந்தை வர்த்தகம்

இது கொஞ்சம் சிக்கலானது. போதிய அறிவு இல்லாமல் பங்கு வர்த்தகத்தில் நுழைய முடியாது. திறன்கள் பெறுவதற்கு உழைக்க வேண்டும். இதற்காக பணமும் செலவிட வேண்டும். உங்களுக்கு எண்கள், சர்வதேச விவகாரங்கள் பிடித்திருந்தால் பங்கு வர்த்தகம் ஈர்க்கும். பங்கு வர்த்தகத்தை புரிந்து கொள்ள இணையத்தில் நிறைய வழிகள் இருக்கின்றன. Zerodha , UpStox போன்ற செயலிகளும் இருக்கின்றன. இவற்றின் மூலம் வர்த்தகம் செய்யலாம்.

ஆன்லைன் கல்வி

பல்வேறு வயதினருக்கு கற்றுத்தர மற்றும் பயிற்சி அளிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. உங்கள் அறிவை பகிர்ந்து கொள்ள விரும்பினால் ஆன்லைன் பயிற்சியாளராகலாம். tutor.com , flexjobs.com போன்ற தளங்களில் பதிவு செய்து கொள்லலாம். கலை ஆர்வம் உள்ளவர் என்றால் Behance தளத்தில் செயல்படலாம் அல்லது யூடியூப் மூலம் பயிற்றுவிக்கலாம்.

தமிழில் தொகுப்பு: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan