சிறுதொழில் நிறுவனங்களுக்கான பங்கு வெளியீடு நெறிமுறைகளை மேலும் தீவிரமாக்கிய செபி!
வலுவான செயல்பாடுகள் கொண்ட சிறு தொழில் நிறுவனங்கள் சந்தையில் நிதி திரட்ட வழி செய்யும் அதே நேரத்தில் முதலீட்டாளர்கள் நலனை காக்கும் வகையிலும் இந்த நடவடிக்கைகள் அமைகின்றன.
பங்குச்சந்தை கட்டுப்பாடு அமைப்பான செபி, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் நுழைந்து பொது பங்குகளை வெளியிடுவதற்கான நெறிமுறைகளை தீவிரமாக்கியுள்ளது. பொது பங்குகளை வெளியிடும் நிறுவனம் லாபம் ஈட்ட வேண்டும் மற்றும் ஆபர் பார் சேலில் 20 சதவீத வரம்பு ஆகிய அம்சங்களை செபி அறிமுகம் செய்துள்ளது.
வலுவான செயல்பாடுகள் கொண்ட சிறு தொழில் நிறுவனங்கள் சந்தையில் நிதி திரட்ட வழி செய்யும் அதே நேரத்தில் முதலீட்டாளர்கள் நலனை காக்கும் வகையிலும் இந்த நடவடிக்கைகள் அமைகின்றன.

சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எஸ்.எம்.இ) பொது பங்குகளை வெளியிடுவது அதிகரித்து, முதலீட்டாளர்கள் ஆர்வமும் அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
லாபத்திற்கான நிபந்தனையை பொருத்தவரை, பொது பங்கு வெளியிட தயாராகும் எஸ்.எம்.இ.,முந்தைய மூன்று நிதி ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச செயல்முறை லாபமாக ரூ.1 கோடி கொண்டிருக்க வேண்டும் என செபி தெரிவித்துள்ளது.- செயல்முறை லாபம், வட்டி, தேய்மானம், வரிக்கு முந்தைய வருமானத்தை குறிக்கும்.
மேலும், ஆபர் பார் சேல் அம்சம், மொத்த வெளியீட்டின் 20 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல, பங்குகளை விற்பனை செய்யும் பங்குதாரர்கள், தங்களுடைய 50 சதவீதத்திற்கு மேலான பங்களை விற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் மார்ச் 4ம் தேதி அறிவிக்கை தெரிவிக்கிறது.
புரமோட்டர்களுக்கான, குறைந்தபட்ட புரோமோட்டர் பங்களிப்பு, (MPC) படிப்படியான லாக் இன் காலம் கொண்டிருக்கும். உபரி ஹோல்டிங்கில் பாதி, ஒராண்டுக்கு பிறகு மற்றும் எஞ்சிய பகுதி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் விடுவிக்கப்பட வேண்டும்.
நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கான (NIIs) ஒதுக்கீடு வழக்கமான பொது வெளியீடுகளில் பின்பற்றப்பட்டு நடைமுறைக்கு ஏற்ப அமைந்திருக்கும்.
"மேலும், எஸ்.எம்.இ பங்கு வெளியீடுகளில் தேவையில்லாத ஊகத்தை தவிர்க்க, குறைந்தபட்ச விண்ணப்ப அளவை இரண்டு லாட்டாக செபி நிர்ணயித்துள்ளது. அதிகரிக்கும் பங்கு விலையை பார்த்து முதலீடு செய்யும் அப்பாவி முதலீட்டாளர் நலனை இது காக்கும்," என எம்.எம்.ஜே.சி அசோசியேட்ஸ் நிறுவனர் மற்றும் பாட்னர் மகர்ந்த் எம்.ஜோஷி கூறுகிறார்.
எஸ்.எம்.இ வெளியீடுகளில், பொது வர்த்தக நோக்கிலான (GCP) ஒதுக்கீடு தொகை, மொத்த வெளியீட்டில் 15 சதவீதம் அல்லது, ரூ.10 கோடி, எது குறைவோ அது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்கு வெளியீட்டு தொகையை, புரோமோட்டர்கள், புரோமோட்டர் குழுக்கள் அல்லது தொடர்புடைய நபர்கள் வாங்கிய கடனை அடைக்க நேரடியாக அல்லது மறைமுகமாகவோ பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது.
பங்கு வெளியீட்டின் நோக்கம், புரோமோட்டர் குழுக்கள் அல்லது தொடர்புடைய நபர்கள் வாங்கிய கடனை அடைப்பதை நேரடியாக அல்லது மறைமுகமாக நோக்கமாக கொண்டிருக்கக் கூடாது என செபி தெரிவித்துள்ளது. எஸ்.எம்.இ வெளியீட்டிற்கான வரைவு ரெட் ஹெரிங் பிராஸ்பக்டஸ் ஆவணம், பொதுமக்கள் கருத்துக்களுக்காக 21 நாட்கள் திறந்திருக்க வேண்டும்.
வெளியீடுகள், இது தொடர்பாக நாளிதழ்களில் அறிவிப்பு வெளியீடுவதோடு ஆவணத்தை எளிதாக அணுகும் கியூஆர் கோடு வசதியும் அளிக்க வேண்டும்.
எஸ்.எம்.இ வெள்யீடுகளில் இதுவரை பங்குச்சந்தையால் தெளிவாக்கப்பட்ட ரெட் ஹெரிங் ஆவணம், இனி பொதுமக்கள் பார்வைக்கு சந்தை, நிறுவனம் மற்றும் மெர்சண்ட் பேங்கர் இணையதளம் மூலம் அணுகும் படி இருக்கும், என்கிறார் ஜோஷி. பொதுமக்களுக்கு இது தொடர்பாக பொது விளம்பரம் வெளியிட வேண்டும்.
எஸ்.எம்.இ பிரிவில் பங்கு வெளியீட்டிற்கும் தயாராகும் நிறுவனங்கள் வெளியீடு தொடர்பான ரெட் ஹெரிங் ஆவணம் மீது மக்கள் கருத்து சொல்ல அல்லது புகார் செய்ய இது வாய்ப்பளிக்கும் என்கிறார் ஜோஷி.
பிரதான அமைப்புக்கு செல்லாமலே, எஸ்.எம்.இக்கள் மேலும் நிதி திரட்ட அனுமதிக்கப்படும். ஆனால் இதற்கு பிரதான சந்தைக்கான செபி நெறிமுறைகளுக்கு ஏற்ப அமைந்திருக்க வேண்டும்.
"உரிம வெளியீடு, முன்னுரிமை வெளியீடு, போனஸ் வெளியீடு உள்ளிட்ட வழிகளில், வெளியீட்டிற்கு பின் மேலும் நிதி திரட்ட முற்படும் போது, வெளியிடப்பட்ட சமபங்கு மூலதனம் ரூ.25 கோடிக்கு அதிகமாக இருக்குமானால், வெளியீட்டாளர், செபியின் பிரதான சந்தைக்கு பொருத்தமான 2015 LODR நெறிமுறைகளுக்கு ஏற்ப அமைந்திருந்தால், பிரதான சந்தைக்கு மாறாமலே மேலும் மூலதன வெளியீட்டை மேற்கொள்ளலாம்,” என செபி குறிப்பிட்டுள்ளது.
எம்.எஸ்.இ பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், பிரதான சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கான தொடர்புடைய தரப்பு பரிவர்த்தனை விதிகளுக்கு ஏற்ப அமைந்திருக்க வேண்டும்.
இது தொடர்பாக செபி ஐசிடிஆர் விதிகளை வெளியிட்டுள்ளது. இந்த பங்குச்சந்தையின் வலுவான செயல்பாடு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் எஸ்.எம்.இ பங்கு வெளியீடுகள் கணிசமாக அதிகரித்துள்ளன. 2024ல், 240 எஸ்.எம்.இ நிறுவனங்கள், ரூ.8700 கோடிக்கு நிதி திரட்டியதாகவும், 2013ல் இருந்த ரூ.4,686 கோடியை விட இது ஏறக்குறைய இரு மடங்கு என்றும் primedatabase.com தெரிவிக்கிறது.
செய்தி – பிடிஐ
Edited by Induja Raghunathan