Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

வர்த்தகக் கடன்களை முன் கூட்டியே அடைக்க அபராத கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி திட்டம்

மாறும் வட்டி விகித கடன்களுக்கு, முன்னதாக செலுத்தப்படும் தொகை அல்லது முன்கூட்டியே கடனை அடைப்பது தொடர்பாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டணத்தை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தேசித்துள்ளது.

வர்த்தகக் கடன்களை முன் கூட்டியே அடைக்க அபராத கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி திட்டம்

Saturday February 22, 2025 , 2 min Read

மாறும் வட்டி விகித கடன்களுக்கு, முன்னதாக செலுத்தப்படும் தொகை அல்லது முன்கூட்டியே கடனை அடைப்பது தொடர்பாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டணத்தை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தேசித்துள்ளது. தனிநபர்கள் மற்றும், குறும் – சிறு தொழில் நிறுவனங்கள் பெறும் வர்த்தக நோக்கிலான கடன்களுக்கும் இது பொருந்தும்.

நடைமுறையில் உள்ள நெறிமுறைகளின் படி, குறிப்பிட்ட பிரிவு வங்கிகள் (REs), தனிநபர்கள் வர்த்தகத்திற்கு அல்லாத காரணங்களுக்காக பெறும் மாறும் வட்டி விகித கடன்கள் மீது முன்னதாக செலுத்தப்படும் தொகை அல்லது முன்கூட்டியே கடனை அடைப்பது தொடர்பாக கட்டணம் விதிக்க அனுமதி இல்லை.

"முதல் அடுக்கு மற்றும் இரண்டாம் அடுக்கு முதன்மை (நகர்புற) கூட்டுறவு வங்கிகள் மற்றும் அடிப்படை வங்கிசாரா நிதி நிறுவனங்கள் அல்லாத பிற கட்டுப்பாட்டிற்கு உரிய வங்கிகள் (Res), வர்த்தக நோக்கத்திற்காக தனிநபர்கள் மற்றும் எம்.எஸ்.இ. நிறுவனங்கள் பெறும் மாறும் வட்டி விகித கடனுக்கான முன்னதாக செலுத்தப்படும் தொகை அல்லது முன்கூட்டியே கடனை அடைப்பது தொடர்பாக கட்டணம் வசூலிக்கக் கூடாது,” என்று ரிசர்வ் வங்கி வரைவு சுற்றறிக்கை தெரிவிக்கிறது.
RBI

இருப்பினும், எம்.எஸ்.இ. நிறுவனங்களை பொருத்தவரை, கடன் தாரருக்கு ரூ.7.50 கோடி அளவிலான மொத்த கடன் வரம்புக்கு இந்த நெறிமுறைகள் பொருந்தும், என்று முன்னதாக செலுத்தப்படும் தொகை அல்லது முன்கூட்டியே கடனை அடைப்பது- பொறுப்பான கடன் நடத்தை வரைவு அறிக்கை தெரிவிக்கிறது.

எம்.எஸ்.இ நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வர்த்தக கடன்களுக்கான  முன்னதாக செலுத்தப்படும் தொகை அல்லது முன்கூட்டியே கடனை அடைப்பதற்கான கட்டணம் தொடர்பாக மாறுபட்ட செயல்முறையை பின்பற்றி வருவது வாடிக்கையாளர் தரப்பில் இருந்து புகார்களுக்கு வழிவகுத்திருப்பதாக ரிசர்வ் வங்கி தனது கண்காணிப்பு குறிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும், சில வங்கிகளின் கடன் தாரர் மற்ற வங்கிகளுக்கு கடனை மாற்றாமல் இருக்கும் வகையில் கடன் ஒப்பந்தத்தில் கட்டுப்பாடுகளை விதிப்பதும் தெரிய வந்துள்ளது.

எந்த குறைந்தபட்ச லாக் இன் காலமும் இல்லாதமல், கடனை முன்கூட்டியே அடைக்க அல்லது முன்னதாக தொகை செலுத்த வங்கிகள் அனுப்ப வேண்டும் என சுற்றறிக்கை தெரிவிக்கிறது. இதற்கான கட்டணமும் வசூலிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரைவு அறிக்கை தொடர்பாக 2025 மார்ச் 21 க்குள் தொடர்புடையவர்களிடம் இருந்து ரிசர்வ் வங்கி கருத்துக்களை கோரியுள்ளது.

செய்தி- பிடிஐ


Edited by Induja Raghunathan