“அன்று மனைவி நகையை அடகு வைத்து சம்பளம் தரும் நிலை...” - Pepul நிறுவனர் சுரேஷ் குமார் குணசேகரன் ஓபன் டாக்
நோக்கு நிலையிலிருந்து யதார்த்தம் வரை: தொழில்முனைவோர் பயணத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள்’ என்ற தலைமைப் பேச்சின்போது குணசேகரன் தனது நுட்பமான பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
தொழில்முனைவோர் மத்தியில் சமூக உணர்வை வளர்ப்பது சுற்றுச்சூழல் அமைப்புக்கு மட்டுமல்ல, பரந்துபட்ட சமூகத்திற்குமே நன்மை பயக்கும் என்று சமூக வலைப்பின்னல் தளமான பீபுல் (Pepul) நிறுவனர் சுரேஷ் குமார் குணசேகரன் தெரிவித்தார்.
பீபுல் சமூக வலைப்பின்னல் தளத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அவர் மேலும் கூறுகையில், “சமூகத்தின் உணர்வையும் தொழில்முனைவோர் மத்தியில் ஆதரவையும் வளர்ப்பது முக்கியம். இது சுற்றுச்சூழல் அமைப்பை பரந்துபட்ட அளவில் வளர்க்கும்” என்றார்.
யுவர்ஸ்டோரி தளத்தின் தமிழ்நாடு ஸ்டோரி மூன்றாவது நிகழ்வில் ‘நோக்கு நிலையிலிருந்து யதார்த்தம் வரை: தொழில்முனைவோர் பயணத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள்’ என்ற தலைமைப் பேச்சின்போது குணசேகரன் தனது நுட்பமான பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
“மற்றவர்களின் வளர்ச்சிக்கான ஆதரவாகவும் மகிழ்ச்சியாகவும் நான் இருக்க வேண்டும் என்பதை ஆரம்பத்திலேயே கற்றுக்கொண்டேன். மேலும் இப்படிச் செய்வதன் சக்தியை என் சொந்த வாழ்க்கையிலேயே நான் கண்டடைந்தேன்.
ஒரு இளம் தொழில்முனைவோர் எங்களிடம் வந்து அவரது செயலிக்கு எங்களுடைய நிதியுதவியை நாடி வந்தார். அவரது செயலியில் அவர் விரும்பிய பெரும்பாலான அம்சங்கள் எங்களிடம் இருந்தது. எனவே, ஏன் இவரது செயலியை நம்முடன் ஒருங்கிணைக்கக் கூடாது என்று முடிவெடுத்து ஒருங்கிணைத்தோம். இதன் மூலம் 20,000 வாடிக்கையாளர்கள் எங்களுடன் இணைந்தனர். இதன்மூலம் மாதம் ரூ.20 லட்சம் வருவாய் ஈட்டினோம்.
ஒரு காலத்தில் என் மனைவியின் நகைகளை அடகு வைத்து சம்பளம் கொடுக்க வேண்டிய நிலை இருந்தது. கழிப்பறையை சுத்தம் செய்வது முதல் அலுவலகத்தின் ஷட்டரை திறப்பது வரை அனைத்து வேலைகளையும் நான் செய்தேன்.
உங்கள் யோசனைக்கு முதல் முறையாக நிதி கிடைக்காமல் போகலாம். ஆனால் நீங்கள் தொடர்ந்து கடினமாக உழைத்தால், எங்களுக்குக் கிடைத்தது போல் உங்களுக்கும் கிடைக்கும்” என்றார்
Pepul ஒரு சமூக ஊடக தளமாக தனது பயணத்தைத் தொடங்கியது. இது பின்னர் குறிப்பாக தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கும் ஒரு தளமாக வளர்ச்சியடைந்தது. கடந்த மாதம் பீபுல் தனது முன் தொடர் A சுற்றில் $4 மில்லியன் நிதியுதவியைப் பெற்றது. இது அதன் Pepul, B2C தளம்; மற்றும் Workfast.ai, B2B SaaS இயங்குதளம் ஆகிய இரண்டு முக்கிய தயாரிப்புகளை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
முத்தாய்ப்பாக குணசேகரன் கூறும்போது, “உங்களை நம்புங்கள், உங்கள் திறமைகளையும் வளங்களையும் பகிர்ந்து கொள்ள எப்போதும் தயாராக இருங்கள். அது அனைத்தும் உங்களிடம் பல மடங்கு திரும்பிக் கிடைக்கும்” என்றார்.