Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

11 வயதில் பெற்றோரை இழந்த அமன் ஷெராவத்; இளம் வயதில் ஒலிம்பிக் பதக்க சாதனையை படைக்க உழைத்த கதை!

அமன், தனது 11வது வயதில் தாய் தந்தையரை இழந்து ஆதரவற்றோர் பள்ளியில் வளர்ந்தவர். முன்னாள் மல்யுத்த சாம்பியன் சுஷில் குமாரைப் பார்த்து உத்வேகம் பெற் அமன், மல்யுத்தம் பயின்றார். மல்யுத்த வீரர் சாகர் இவருக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.

11 வயதில் பெற்றோரை இழந்த அமன் ஷெராவத்; இளம் வயதில் ஒலிம்பிக் பதக்க சாதனையை படைக்க உழைத்த கதை!

Saturday August 10, 2024 , 3 min Read

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் மல்யுத்தப் பிரிவில் இந்திய அணிக்காகச் சென்றவர் ஹரியானாவைச் சேர்ந்த அமன் ஷெராவத் மட்டுமே. ஆனால், இன்று அவர் இளம் வயதில், தன் 21வது வயதிலே ஒலிம்பிக் பதக்கம் வென்று சாதனை புரிந்ததன் பின்னணியில் கடினமான பாதையைக் கடந்து வந்துள்ளார் அமன்.

57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமன் ஷெராவத் போர்ட்டோ ரிக்கோ வீரர் டேரியன் டாய் க்ரூஸை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தார் அமன். வெங்கல பதக்கம் வென்றவுடன் அமன் பேசுகையில்,

“என் தாய் தந்தைக்கு ஒலிம்பிக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாது. இந்த வெற்றியை என் பெற்றோருக்கும் இந்திய நாட்டுக்கும் அர்ப்பணிக்கிறேன்...” என்ற அமன் ஷெராவத் பகிர்ந்தார்.

அமன், தனது 11வது வயதில் தாய் தந்தையரை இழந்து ஆதரவற்றோர் பள்ளியில் வளர்ந்தவர். முன்னாள் மல்யுத்த சாம்பியன் சுஷில் குமாரைப் பார்த்து உத்வேகம் பெற் அமன், மல்யுத்தம் பயின்றார். மல்யுத்த வீரர் சாகர் இவருக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.

Aman

உடல் எடை சவால்: 10 மணி நேரத்தில் 4.5 கிலோ குறைத்த அசாத்தியம்!

57 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்ட அமன் ஷெராவத், அரையிறுதிப் போட்டி முடிந்தவுடன் அவரின்ன் உடல் எடை 61.5 கிலோவாக இருந்தது, அதாவது, கூடுதலாக 4.5 கிலோ எடை இருந்தார்.

ஆனால், அடுத்த 10 மணி நேரம் அவர் கடும் பயிற்சிகளில் ஈடுபட்டார், ட்ரெட் மில், ஜாக்கிங், ஓட்டம், சானா குளியல், வெந்நீர்க் குளியல் உள்ளிட்ட பல பயிற்சிகளுடன் இடையிடையே வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சைச் சாறு மற்றும் தேனைப்பிழிந்து குடித்துக் கொண்டே இருந்தார். காலை 4:30 மணிக்கு அவர் உடல் எடை 56.9 கிலோவாகக் குறைந்திருந்தது. அதன் பிறகு தூங்க முடியவில்லை மேலும் பல மல்யுத்தப் போட்டிகளின் வீடியோக்களையும் அவர் இரவு முழுதும் பார்த்தார்.

கடினப்பாடுகளைக் களைந்து முன்னேறுவது என்பது ஷெராவத்திற்கு ஒரு விஷயமாக இருந்ததில்லை, 11 வயதிலேயே தாய் தந்தையரை இழந்து அதரவற்றோர் பள்ளியில் வளர்ந்தார். டெல்லி சத்ரசால் அகாடமி பல மல்யுத்த வீரர்களின் பிறப்பிடமாகும், இவருக்கு அங்கிருந்து அழைப்பு வந்தது. சத்ரசால் அகாடமியிலிருந்து சுஷில் குமார், யோகேஷ்வர் தத், பஜ்ரங் புனியா மற்றும் ரவி தாஹியா போன்ற ஒலிம்பிக் பதக்க வீரர்கள் உருவாகியுள்ளனர்.

இந்த சத்ரசால் ஸ்டேடியம்தான் அமன் ஷெராவத்தின் இரண்டாவது வீடாகவே மாறிவிட்டது. எடுத்த எடுப்பிலேயே தன் அசாத்திய திறமைகளைப் பறைசாற்றினார் அமன். 2018 -ல் உலக கேடட் சாம்பியன்ஷிப் வெண்கலத்தை வென்றார். ஆண்டுகளுக்குப் பிறகு, சீனியர் சர்க்யூட்டில் தன் வரவை அறிவித்தார். ஆசிய U-20 சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றார். ஆசிய யு-23 போட்டித் தொடரில் தங்கம் வென்று அசத்தினார் அமன். 2008- சுஷில் குமார் ஒலிம்பிக் பதக்கத்தை மல்யுத்தத்திற்காக வென்றதிலிருந்து இந்திய அணியின் பதக்க வாய்ப்புகள் மல்யுத்தத்தில் அதிகரித்துள்ளது. சுஷில் குமாரைப் பார்த்து உத்வேகம் அடைந்தவர்தான் இந்த அமன் ஷெராவத்.

wrestling academy

கடுமையாக பயிற்சி செய்த அமன்

தண்டால், பஸ்கி உள்ளிட்ட பயிற்சிகளை 19 வயதிலேயே பயிற்சியாளர்கள் நிர்ணயித்துள்ள எண்ணிக்கையையும் தாண்டி அதிவேகமாகச் செய்தார் அமன். சத்ரசால் ஸ்டேடியத்தில் தன் சிறிய அறையில் அவர் ஒட்டி வைத்திருந்த ஒரு வாசகம் இவருக்குப் பெரிய தூண்டுகோலாக இருந்துள்ளது. அதில், “தங்கம் வெல்வது சுலபமாக இருந்தால் அனைவராலுமே செய்து விட முடியுமே” என்ற வாசகம்தான் அது.

“எனக்கு இந்த வாசகம் பெரிய உத்வேகம் அளித்தது. மல்யுத்தம் என்பது சுலபமல்ல. சில சமயங்களில் காலை பயிற்சிக்குச் செல்லாமல் தூங்கிக் கொண்டிருக்கலாம் என்றே தோன்றும். அப்போது இந்த வாசகம் தான் என் கண்ணில் படும். உடனே வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்து பயிற்சிக்குச் செல்வேன். வியர்வை சிந்தாத நாள் எனக்கு தூக்கமற்ற நாளாகவே இருக்கும். ஏதோ ஒன்றை இழந்தது போலவே இருக்கும்," என்பார்.
Aman Sehrawat

இவரது பயிற்சியாளர் பிரவீன், கடந்த ஆண்டு மே மாதம் ஒன்றைக் கூறினார், அதுதான் இன்று வெண்கலமாக அமனுக்கு மாறியுள்ளது,

“அமன் தொடர்ந்து கடினமாக உழைத்து முன்னேற்றப்பாதையில் செல்வார். காயங்கள் அடையாமல், கட்டுக்கோப்புடன் இருந்தால் அமனின் புகைப்படம் சத்ரசால் ஸ்டேடியத்தில் பிற ஒலிம்பிக் பதக்க வீரர்களுடன் இருக்கும்...” என்றார்.

இன்று அமன் ஷெராவத்தின் படம் சத்ரசால் ஸ்டேடிய பதக்க அறையை நிச்சயம் அலங்கரித்திருக்கும்.