'இனி ஒரு வங்கிக் கணக்குக்கு 4 நாமினி' - மக்களவையில் நிறைவேறிய வங்கிப் திருத்த மசோதா!
வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2024 நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், புதிய விதிமுறைகளும் அதன் பயன்களும்.
வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2024 நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது, இது வங்கி விதிமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை முன்மொழிகிறது.
அதன் முக்கிய விதிகளில், தற்போதைய ஒற்றை-நாமினி முறையை மாற்றியமைத்து, வைப்பாளர்கள் தங்கள் வங்கிக் கணக்குகள் அல்லது நிலையான வைப்புத்தொகைகளுக்கு நான்கு நபர்களை பரிந்துரைக்கலாம். கோவிட்-19 தொற்றுநோய்களின் போது நிகழ்ந்த மரணங்கள் காரணமாக நிதி விநியோகத்தை எளிதாக்குவதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ஒரு வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் ஒரே நேரத்தில் நான்கு நாமினிகளை உருவாக்கவும் இந்த மசோதா அனுமதிக்கிறது, இதனால் வாரிசுகளோ அல்லது மற்ற உரிமைதாரரோ உண்மையான கணக்கு வைத்திருப்பவர் உயிரோடு இல்லாத நிலையில் நிலையான வைப்புத்தொகை உள்ள ஒருவர் நிதியை எடுக்க முடியும்.
- ஒரு கணக்கு வைத்திருப்பவர் ஒரே சமயத்தில் நாமினிகளையோ அல்லது ஒவ்வொரு நாமினிக்கும் இருக்கும் தொகையில் எவ்வளவு கொடுக்கப்பட வேண்டும் என்பதையும் தெரிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. அல்லது முன் வரையறுக்கப்பட்ட வரிசையில் நாமினிகள் மரபுரிமையாக பணத்தைப் பெற முடியும்.
உங்கள் வங்கிக் கணக்குகளுக்கு நாமினியை நியமிக்க எளிதான வழிகள்:
இப்போது நீங்கள் உங்கள் வங்கிக் கணக்குகளுக்கு 4 பேரை நாமினிக்களாக நியமிக்கலாம். இது தேவைப்பட்டால் உங்கள் நிதியை யார் நிர்வகிக்கலாம் என்பதற்கான வழிமுறைகளை உறுதி செய்கிறது.
நிதி விநியோகத்திற்கான இரண்டு வழிமுறைகள்:
1. அடுத்தடுத்த நாமினி நியமனங்கள்: (Successive Nomination)
- முதல் நாமினி பணத்தைப் பெறுவார்.
- அந்த முதல் நாமினி உயிருடன் இல்லை அல்லது வேறு காரணங்கலினால் அவர் இங்கு இல்லை என்னும் பட்சத்தில் இரண்டாவது நாமினி பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
- அந்த 2வது நாமினியும் இல்லையெனில் 3வது நாமினி மூலம் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியும்.
2. ஒரே நேரத்தில் நாமினிக்கள் நியனம்: (Simultaneous Nomination)
வங்கிக் கணக்கில் உள்ள தொகைக்கு அனைத்து நாமினிக்களும் எந்தவித முன் உத்தரவும் இன்றி சரிசமமாகவோ, அல்லது முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்ட அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டத் தொகைகளைப்பெறலாம்.
உதாரணம் ரூ.1 லட்சம் வங்கிக் கணக்கில் இருக்கிறது எனில், நாமினி ஏ-வுக்கு 40% தொகை; நாமினி பி-க்கு 30% தொகை; நாமினி ‘சி’க்கு 20% தொகை; நாமினி டி-க்கு 10% தொகை என்று முன் கூட்டியே தீர்மானிக்கும் விதங்களில் தொகையை எந்த வித முன் கூட்டிய உத்தரவின்றி பெறலாம்.
லாக்கர் ரூல்கள்:
லாக்கர்களுக்கு அடுத்தடுத்த நாமினி நியமனங்களுக்குத்தான் அனுமதி உண்டு. நாமினிக்கள் படிப்படியாக லாக்கர்களை அணுக அனுமதிக்கப்படுவார்கள்.
புதிய விதிமுறைகளின் பயன்கள் எனென்ன?
- குடும்ப சச்சரவுகள் ஏற்படாத வண்ணம் 4 நாமினிக்களை நியமிக்கலாம்.
- அறக்கட்டளைகள், நிறுவனங்கள், சங்கங்கள் நாமினிகளாக நியமிக்கப்படலாம்.
- உங்கள் வாழ்நாளில் எந்த நேரத்திலும் நாமினிக்களை மாற்றலாம்.