ஏஐ சார்ந்த அணுகுமுறையோடு மறுபிராண்டிங் செய்துள்ளது 'Indium Software'
முன்னணி தனியார் சமபங்கு நிறுவனம் EQT ஆதரவு பெற்ற டிஜிட்டல் பொறியியல் நிறுவனம் இண்டியம் சாப்ட்பேர், தொழில்நுட்ப சேவை அளிக்கும் நிறுவனத்தில் இருந்து, ஏஐ மற்றும் புதுமையாக்கத்தை மையமாக கொண்ட முழு அளவிலான டிஜிட்டல் பொறியியல் ஆற்றல் பெற்ற நிறுவனமாக மாறுவதை பிரதிபலிக்கும் வகையில், இண்டியம் (“Indium”) என ம
முன்னணி தனியார் சமபங்கு நிறுவனம் EQT ஆதரவு பெற்ற டிஜிட்டல் பொறியியல் நிறுவனம் இண்டியம் சாப்ட்பேர், தொழில்நுட்ப சேவை அளிக்கும் நிறுவனத்தில் இருந்து, ஏஐ மற்றும் புதுமையாக்கத்தை மையமாக கொண்ட முழு அளவிலான டிஜிட்டல் பொறியியல் ஆற்றல் பெற்ற நிறுவனமாக மாறுவதை பிரதிபலிக்கும் வகையில், இண்டியம் (Indium) என மறுபிராண்ட் செய்யும் திட்டத்தை அறிவித்துள்ளது.
நிதிச்சேவை, சுகாதாரம், உற்பத்தி மற்றும் ரீடைல், கேமிங் உள்ளிட்ட துறைகளில் செயல்படும் நிறுவனங்களுக்கு டிஜிட்டல் பொறியியல் தீர்வுகளை வழங்கி வரும் நிலையில், நிறுவனத்தின் 25வது ஆண்டில் இந்த மறு பிராண்டிங் அமைகிறது.

இந்நிறுவனம், கடந்த ஐந்து ஆண்டுகளாக துறைக்கான முன்னணி வருவாய் வளர்ச்சியை கண்டு வருகிறது. 2025-26ல் ரூ.1,300 கோடி வருவாயை கடக்க திட்டமிட்டுள்ளது. 2020-21ல் இது ரூ130 கோடியாக இருந்தத நிலையில், 10 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது.
புதிய அடையாளத்தின் கீழ் Indium, வாடிக்கையாளர்களுக்கு ஏஐ சார்ந்த அணுகுமுறையில் மேம்பட்ட வர்த்தக மதிப்பை அளிக்க திட்டமிட்டுள்ளது. தனியான ஏஐ தீர்வுகள், ஒவ்வொரு பொறியியல் தீர்வுகள் அமசத்திலும் ஏஐ நுட்பத்தை ஒருங்கிணைப்பது, மற்றும் ஆக்கத்திறன் ஏஐ கொண்டு நிறுவன செயல்பாடுகளை மாற்றி அமைப்பது உள்ளிட்ட மூன்று முக்கிய உத்திகளை பின்பற்ற உள்ளது.
“இந்த மறுபிராண்டிங் எங்கள் எதிர்காலத்திற்கான தொலைநோக்காக அமைகிறது. 25 ஆண்டுகளாக புதுமையாக்கம் மற்றும் சிறப்பாக்கத்தில் முன்னிலையில் விளங்குகிறோம். நிஜ உலக பிரச்சனைகளுக்கு தீர்வு காண தொழில்நுட்ப தீர்வுகளை பயன்படுத்த நிறுவனங்களுக்கு உதவி வருகிறோம். இப்போது, மறுபிராண்ட் செய்த அடையாளத்தை அறிவிப்பதன் மூலம், வாடிக்கையாளர்களுக்காக தொழில்நுட்பம் செயலாற்றுவதற்கு எங்கள் ஈடுப்பாட்டை உறுதி செய்கிறோம்,” என்று இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ ராம் சுகுமார் கூறியுள்ளார்.
“ஏஐ எங்களுக்கு வெறும் கருவி அல்ல. அது எங்கள் மரபணுவில் கலந்திருக்கிறது. இன்று நாங்கள் செய்யும் எல்லாவற்றின் இயக்கு சக்தியாக இருக்கிறது. அதிக செயல்திறன் மற்றும் வளர்ச்சிக்கான எங்கள் இலக்கிற்கு ஏஐ மையமாக இருக்கும், என்றும் அவர் கூறினார்.
இண்டியம் நிறுவனத்தை தனித்து நிற்கசெய்யும் ஏஐ திறன் கொண்ட தீர்வுகள்:
· பிரத்யேக ஆக்கத்திறன் ஏஐ தீர்வுகள்: ஏஐ சார்ந்த பிரத்யேக சேவைகள், மேலும் செழுமையாக்கப்பட்ட மொழி மாதிரிகள் (LLMs), பல் ஊடக(RAG, ஏஐ ஏஜெண்ட்கள்.
· ஆக்கத்திறன் ஏஐ சார்ந்த பொருள் உருவாக்கம்: ஏஐ சார்ந்த புரோடைபிங் மூலம் வேகமான பொறியியலாக்கம். தானியங்கி கோடு உருவாக்கம், கோ- பைலட், கிளாட் மற்றும் டேபைன் சார்ந்த மேம்பட்ட செயல்பாடு மூலம் வளர்ச்சி சுழற்சி குறைப்பு.
· துறை சார்ந்த ஏஐ சேவைகள்: ஏஐ திறன் கொண்டு நிதிச்சேவைகளை மாற்றி அமைப்பது, சுகாதாரத்துறையில் சீரான தரவுகள் செயல்பாடு, ஸ்மார்ட்டான ரீடைல் செயல்பாடுகள்.
இவைத்தவிர தரம் சார்ந்த பொறியியல் மற்றும் செயல்பாட்டு சிறப்பிற்கும் ஏஐ சார்ந்த சேவைகள்.
"இந்த மறு பிராண்டிங் இண்டியம் பயணத்தில் புதிய அத்தியாயமாக அமைகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் நம்பகமான கியுஏ பங்குதாரர் என்பதில் இருந்து முழு அளவிலான டிஜிட்டல் பொறியியல் நிறுவனமாக உருவாகி இருப்பதன் அடையாளம்," என்று மார்கெட்டிங் மூத்த துணை தலைவர் அனுஷா யோமகேஷ் கூறியுள்ளார்.
Edited by Induja Raghunathan