Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

வாரன் பஃபெட்டின் பெர்க்ஷயர் ஹாத்வே லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பீட்டை அடைந்தது எப்படி?

லட்சம் கோடி டாலர் எனும் சந்தை மதிப்பீட்டை நிறுவனம் அடைந்த பயணத்தை திரும்பிப் பார்க்கலாம்.

வாரன் பஃபெட்டின் பெர்க்ஷயர் ஹாத்வே லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பீட்டை அடைந்தது எப்படி?

Friday October 18, 2024 , 2 min Read

சாதனை முதலீட்டாளர் Warren Buffet வழிநடத்தும் பெர்க்‌ஷயர் ஹாத்வே, சந்தை மூலதன மதிப்பீட்டில் லட்சம் கோடி டாலர் எனும் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

ஆப்பிள், நிவிடியா, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களை பின்னுக்குத்தள்ளி, இந்த மைல்கல்லை அடையும் முதல் அமெரிக்க நிறுவனம் எனும் சிறப்பை பெர்க்‌ஷயர் ஹாத்வே பெற்றுள்ளது.

சர்வதேச அளவில் மதிப்புமிக்க நிறுவனம் எனும் பெருமையை நிலை நிறுத்துவதோடு, பொருளாதார சவால்களை மீறி சிறந்த செயல்பாட்டை கொண்டுள்ள நிறுவனத்தின் உறுதியான தன்மையையும் உணர்த்துகிறது. இந்த மைல்கல்லை நிறுவனம் அடைந்த பயணத்தை திரும்பி பார்க்கலாம்.

warren

பெர்க்‌ஷயரை வெற்றி நிறுவனமாக மாற்றியது எப்படி?

துவக்கத்தில் பெர்க்‌ஷயர் நிறுவனம், ஜவுளி நிறுவனமாக இருந்தது என்பது பலரும் அறியாதது. ரோட் ஐலாண்டில் நிறுவப்பட்ட நிறுவனம் நிதி நெருக்கடியால் தடுமாறிக்கொண்டிருந்தது. 1965ல் வாரென் மற்றும் அவரது முதலீட்டு நிறுவனம் பெர்க்‌ஷயர் நிறுவனத்தை கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு அதை முதலீட்டு நிறுவனமாக மாற்றியது.

1985ல் நெப்ரஸ்கா பர்னீச்சர் மார்ட் எனும் நிறுவனத்தை முதலில் கையக்கப்படுத்தியது. தொடர்ந்தும், காப்பீடு நிறுவனம் ஜெனரல் ரீ கார்ப்பரேஷனை 1988ல் கையகப்படுத்தியது. நிறுவனத்தை ஜவுளி துறையில் இருந்து விலக்கி, வளர்ச்சி வாய்ப்புகளை எதிர்நோக்கியபடி, அடுத்து வந்த ஆண்டுகளில் அதன் முதலீடுகளை விரிவாக்கினார்.

இன்று நிறுவனம் ஒரு லட்சம் கோடி டாலர் சந்தை மூலதன மதிப்பீடு கொண்டதாக வளர்ந்துள்ளது. நிறுவனத்தின் உறுதியான வளர்ச்சி மற்றும் நிறுவனத்தின் மீதான சந்தையின் நம்பிக்கை அடையாளமாக இது அமைகிறது.

காப்பீடு, பயன்பாடு, உற்பத்தி என பல்வேறு பிரிவுகளில் பல துறைகளில் முதலீடு கொண்டுள்ள நிறுவனம் சந்தையில் தனித்தன்மையான நிலையில் உள்ளது. நிறுவனத்தின் செயல்பாடுகளின் வலிமை மற்றும் பங்குதாரர்களுக்கு நீண்ட கால பலனை அளிக்கும் ஆற்றலை இந்த மைல்கல் உணர்த்துகிறது.

இந்த சாதனையை பெர்க்‌ஷயர் அடைந்தது எப்படி?

பெர்க்‌ஷயரின் வெற்றிக்கு முக்கியக் காரணம், வாரென் பப்பேவின் முதலீட்டு கொள்கை. ஒமாஹாவின் தீர்கதரிசி என அறியப்படுபவர், ஆகச்சிறந்த முதலீட்டாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார். அடிப்படை ஆய்வு, நீண்ட கால அணுகுமுறை, தரமான வர்த்தகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவரது முதலீடு கொள்ஐ அமைந்துள்ளது.

Warren Buffett, Berkshire Hathaway

நிறுவனம் துணிச்சலான, வியூகம் நிறைந்த கையகப்படுத்தலுக்காக அறியப்படுகிறது. 2009ல் மேற்கொள்ளப்பட்ட பர்லிங்டன் நார்த்தன் சாண்டா பே ரெயிலே கையகப்படுத்தல் மற்றும் 2016ல் மேற்கொள்ளப்பட்ட பிரசிஷன் கேஸ்ட்பார்ட்ஸ் கார்ப் கையகப்படுத்தல் இதற்கு உதாரணம். இந்த கையகப்படுத்தல் முக்கிய துறைகளில் நிறுவனத்தின் இருப்பை வலுவாக்கியதோடு, நிதி செயல்பாடுகளுக்கும் வலு சேர்த்தது.

அடிப்படை வலுவாகக் கொண்ட, குறைவாக மதிப்பிடப்படும் நிறுவனங்களை கையகபப்டுத்தும் மதிப்பு சார்ந்த முதலீட்டு அணுகுமுறை நிறுவன வெற்றிக்கு அடிப்படையாக அமைகிறது. மேலும், நிறுவனத்தின் மையமில்லா நிர்வாக முறை அதன் துணை நிறுவனங்கள் சுயேட்சையாக செயல்பட உதவுகிறது.இதன் மூலம் அவை குழுமத்தின் அனுபவம், வளங்களை பயன்படுத்திக்கொண்டு வளரலாம்.

அடுத்து என்ன ?

பெர்க்‌ஷயர் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் முன்னேறுகிறது. வாரென் வழிகாட்டுதலில் திறமை வாய்ந்த குழுவால் நிர்வகிக்கப்படும் பெர்க்‌ஷயர், வெற்றி மற்றும் வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்ளும் நிலையில் உள்ளது.

உலக பொருளாதாரம் சவால்களில் இருந்து மீளும் நிலையில், பெர்க்‌ஷயரின் பரவலான முதலீடு தொகுப்பு, நிலையான நிதி நிலை புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு, இடர்களை எதிர்கொள்ளும் ஆற்றலை அளிக்கின்றன.

ஆஸ்மா கான்


Edited by Induja Raghunathan