Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

சுத்தமான கேன், தண்ணீர்; மறுசுழற்சிக்கு உத்திரவாதம் - சென்னை ஸ்டார்ட் அப் 'Book Water' தரும் 3 இன் 1 தீர்வு!

சென்னை மக்களின் அத்தியாவசியமான bubble top கேன் தண்ணீர் சுத்தமாகவும், கேன்களுக்கான காலாவதி காலம் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை ஸ்கேன் முறையில் கண்டறிந்து பயன்படுத்தும் Book Water, பயன்பாட்டிற்கு பிறகு கேன்களை ஆடைகளாகவும், கலை பொருட்களாகவும் மறுசுழற்சி செய்கிறது.

சுத்தமான கேன், தண்ணீர்; மறுசுழற்சிக்கு உத்திரவாதம் - சென்னை ஸ்டார்ட் அப் 'Book Water' தரும் 3 இன் 1 தீர்வு!

Monday August 12, 2024 , 2 min Read

நகரம் தொடங்கி கிராமங்கள் வரை சுத்தமான குடிநீருக்கு 20 லிட்டர் பபிள் டாப் கேன் தண்ணீரை சார்ந்து இருக்கின்றனர் மக்கள். பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் இவ்வகை கேன்கள் சுகாதாரமானதா? அவற்றில் நிரப்பப்படும் தண்ணீர் சுத்தமானதா? என்று பல கேள்விகள் உள்ளன.

வெளித்தோற்றத்திற்கு சுத்தமானதாக தோன்றும் கேன்கள் மீது சூரிய ஒளியின் புறஊதாக் கதிர்கள் படும்போது அவற்றில் பூஞ்சைகள் வளர வாய்ப்பு இருக்கிறது. மற்றொருபுறம் மாதக்கணக்கில் ஒரு கேனை பயன்படுத்துவதால் அதில் கண்ணுக்கே தெரியாத மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் தண்ணீருடன் கலக்கிறது. இந்த பிளாஸ்டிக் துகள்களுடன் கலந்த நீரைப் பருகும் போது உடலில் தேவையற்ற நோய்கள் உருவாகவும் வாய்ப்பு இருக்கிறது.

சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களுக்கும் தீங்கு ஏற்படுத்தாமல் குடிநீர் மற்றும் கேனின் தரத்தை உறுதி செய்யும் பணியை சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான 'புக்வாட்டர்' செய்து வருகிறது. இந்த இரண்டு முக்கியமான பிரச்னைகளுக்கு தனித்துவமான தீர்வைத் தந்துள்ளனர் இதன் இயக்குனர்கள் மற்றும் நிறுவனர்களான பாலச்சந்தர் மற்றும் சமீர் பரத் ராம். புக்வாட்டரின் நோக்கமே C-O-N-N-E-C-T-E-D CAN என்பதாகும், அதாவது, உங்களுடைய தண்ணீரை மட்டுமல்ல கேனின் சுகாதாரத்தையும் நீங்கள் தெரிந்து கொள்ள இது உதவுகிறது.

bookwater nambi narayanan

புக்வாட்டரின் வெளிப்படைத்தன்மை வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கான விடையைத் தருகிறது. புக்வாட்டர் தண்ணீர் கேனை வாங்கும்போது, ​​நீரின் தரம், நிரப்பும் தேதி மற்றும் பயன்பாட்டு வரலாறு பற்றிய முக்கியமான தகவல்கள் அதில் இடம்பெறுகின்றன. கேனில் உள்ள QR குறியீட்டினை ஸ்கேன் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் எளிதில் இந்தத் தகவல்களைப் பெறலாம்.

புக்வாட்டர் வழங்கும் மற்றொரு முக்கிய நன்மை விலை. 20 லிட்டர் தண்ணீர் கேன், ஜிஎஸ்டி உட்பட ₹55 விலையில் வழங்குகிறது. இந்தியாவின் வளர்ந்து வரும் சந்தையாக இருக்கும் குடிநீர் விநியோகத் தொழிலில், ஆண்டுக்கு 25 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டப்படுகிறது. இருப்பினும், இப்போது வரை, நுகர்வோர் தண்ணீர் வாங்குவதற்கான ரசீதுகளை அரிதாகவே பெறுகின்றனர், இது கணிசமான வருவாய் இழப்புகளுக்கு வழிவகுத்தது.

புக்வாட்டர், வரி வருவாயை உறுதி செய்யும் அதே வேளையில் சுத்தமான குடிநீரை வழங்குவதன் மூலம் இதை சரிசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 20 லிட்டர் bubbletop நீல நிற கேன்களை உருவாக்க நம்பகமான பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களிடமிருந்து மட்டுமே PET-கள் வாங்கப்படுகின்றன. ஒவ்வொரு கேனையும் கண்காணிக்கும் விதமாக ஒரு தனிப்பட்ட QR குறியீடு அதில் இடம்பெற்றுள்ளது. மேலும், இந்த கேன்கள் அனைத்தும ஐஎஸ்ஐ தரச் சான்றிதழையும் பெற்றிருக்கின்றன.

கேன்களில் fungi, algae போன்றவை உருவாவதைத் தடுக்கப்படுகிறது. சூரிய ஒளியில் வெளிப்படும் வழக்கமான கேன்களில் இருக்கும் பொதுவான பிரச்சினையை கருத்தில் கொண்டு, புக்வாட்டரின் வடிவமைப்பில் கேன்களில் சிறு பிளவுகள் கூட உருவாகாமல் இருப்பதை உறுதி செய்கிறது. அதன் பின்னர் அவை நீர்நிரப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

book water
உங்கள் வீட்டிற்கு கேன் வாட்டர் வந்ததும், அதில் உள்ள தண்ணீரின் தரம், நிரப்பப்பட்ட தேதி, கேன் காலாவதியாகும் காலம் போன்றவற்றை QR குறியீட்டை ஸ்கேன் செய்து அறிந்து கொள்ளும் அதிகாரம் வாடிக்கையாளர்களுக்கு உள்ளது. புக்வாட்டரில் QR குறியீடு இல்லை என்றால் அவற்றை வாங்கிப் பயன்படுத்த வேண்டாம் என்றும் இதன் நிறுவனர்கள் கூறுகின்றனர்.

மேலும், புக்வாட்டர் நிலைத்தன்மையையும் உறுதிசெய்கிறது. வீணாகும் கேன்களை அப்படியே குவித்து வைத்தால் அவை மக்கிப் போக பல ஆண்டுகள் ஆகும். அதனால் ஒரு கேனை 30 முறை பயன்படுத்திய பிறகு, டி-ஷர்ட்கள் போன்ற ஆடைகளாக வடிவமைக்கும் ஆலைகளுக்கு மறுபயன்பாட்டிற்காக அனுப்பப்படுகிறது.

இதன் அடுத்தகட்டமாக கேன்களை ஓவியக் கலைஞர்களுடன் இணைந்து கலைநயமிக்க பொருட்களாக மாற்றும் திட்டத்தையும் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது புக்வாட்டார். தொடர்புகொள்ளவும், விழிப்புணர்வை பரவலாக்கவும் கலை ஒரு சிறந்த ஊடகம் என்பதால் புக்வாட்டரின் வாடிக்கையாளரும் பத்மஸ்ரீ விருது வென்ற கலை நிபுணருமான தோட்டா தரணியும் கை கோர்த்து புதிய செயல்திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.
bookwater

தோட்டாதரணியின் ‘Force’ water series ஓவியங்களாக கேன்களை மாற்றுவதன் மூலம் சுற்றுச்சூழலை ஆரோக்கியமானதாக மாற்றுவதோடு ஒரு நிலைத்தன்மையையும் கட்டமைக்க முடியும் என்று இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது புக்வாட்டர்.