Gold Rate Chennai: உச்சம் தொட்ட பின் ‘சைலன்ட்’ மோடில் தங்கம் விலை - இதுவே தங்கம் வாங்க சரியான டைம்!
ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்ட நிலையில், தற்போது எந்த மாற்றமும் இன்றி சைலன்ட் மோடுக்குச் சென்றுள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்ட நிலையில், தற்போது எந்த மாற்றமும் இன்றி சைலன்ட் மோடுக்குச் சென்றுள்ளது. தங்கம் விலை இனி மென்மேலும் உயரும் சாத்தியமே அதிகம் என்பதால், இயன்றவர்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சென்னையில் வெள்ளிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.30 உயர்ந்து ரூ.7,555 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.240 உயர்ந்து ரூ.60,440 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.33 உயர்ந்து ரூ.8,242 ஆகவும், சவரன் விலை ரூ.262 உயர்ந்து ரூ.65,936 ஆகவும் இருந்தது.
தங்கம் விலை நிலவரம் - சனிக்கிழமை (25.1.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.7,555 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.60,440 ஆகவும் நீடிக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.8,242 ஆகவும், சவரன் விலை ரூ.65,936 ஆகவும் மாற்றமின்றி தொடர்கிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (25.1.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.105 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,05,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை உயர்ந்து வருவது, ஆபரணத் தங்கத்தின் விலை குறையாததற்கு காரணம்.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், பொருளாதார கொள்கைகள் சார்ந்து பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதனால், பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்கத் தொடங்கியதும் முக்கியக் காரணம். இந்த விலை உயர்வு போக்கு மேலும் நீடிக்கலாம் என வர்த்தகர்கள் கணித்துள்ளனர்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,555 (மாற்றம் இல்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.60,440 (மாற்றம் இல்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,242 (மாற்றம் இல்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.65,936 (மாற்றம் இல்லை)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,555 (மாற்றம் இல்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.60,440 (மாற்றம் இல்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,242 (மாற்றம் இல்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.65,936 (மாற்றம் இல்லை)
Edited by Induja Raghunathan