Gold Rate Chennai: மீண்டும் ஏற்றப்பாதையில் தங்கம் - சவரன் விலை ரூ.58 ஆயிரத்தை எட்டுமா?
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.30 உயர்ந்து 7,145 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.33 உயர்ந்து 7,795 ரூபாயாகவும் உள்ளது.
வியாழக்கிழமையான இன்று (21.11.2024) சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் மீண்டும் உயர்ந்து வருகின்றன. ஆபரணத்தங்கம் விலை இன்று சவரனுக்கு மேலும் ரூ.240 அதிகரித்தது.
தங்கம் விலை நிலவரம்: வியாழக்கிழமை (21.11.2024):
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.30 உயர்ந்து 7,145 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.33 உயர்ந்து 7,795 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.57,160 ஆக விற்பனையாகி வருகின்றது.
சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.300 அதிகரித்து ரூ.71,450 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை ரூ.330 உயர்ந்து ரூ.77,950-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.264 உயர்ந்து ரூ.62,360 என்றும் விற்பனையாகின்றன.
வெள்ளி விலை மாறவில்லை:
வெள்ளி விலை வியாழக்கிழமையான இன்றும் (20-11-24) 1 கிராம் விலை ரூ.101 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.101,000 என்றும் நீடிக்கிறது.
காரணம்:
மத்தியக் கிழக்கு மற்றும் உக்ரைன் - ரஷ்யா போர்ப் பதற்றம் காரணமாக முதலீட்டுப் பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கத்தில் மீண்டும் முதலீடு அதிகரிக்க, விலைகள் உயர்ந்து வருகின்றன.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,145(மாற்றம்ரூ.30அதிகம்)
> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.57160(மாற்றம்ரூ240அதிகம்)
> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.7,795(மாற்றம்ரூ33அதிகம்)
> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.62,360(மாற்றம்ரூ264அதிகம்)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,145(மாற்றம்ரூ.30அதிகம்)
> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.57160(மாற்றம்ரூ240அதிகம்)
> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.7,795(மாற்றம்ரூ33அதிகம்)
> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.62,360(மாற்றம்ரூ264அதிகம்)