சென்னையில் ‘ஐபோன் 15’ தயாரிப்பை தொடங்கிய ஆப்பிள் நிறுவனம்!
சீனாவில் தனது முதன்மை உற்பத்தி மையத்தைக் கொண்டுள்ள ஆப்பிள் நிறுவனம், முதல் முறையாக இதுவரை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படாத ஐபோன் மாடலை தயாரிக்கும் பணியை இந்தியாவில் தொடங்கியுள்ளது.
சீனாவில் தனது முதன்மை உற்பத்தி மையத்தைக் கொண்டுள்ள ஆப்பிள் நிறுவனம், முதல் முறையாக இதுவரை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படாத ஐபோன் மாடலை தயாரிக்கும் பணியை இந்தியாவில் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி குழுமத்தால் இயக்கப்படும் ஆலையில் ஐபோன் 15 தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஐபோன் தயாரிப்பு:
2023 ஆம் நிதியாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் சுமார் 5 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து சுமார் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் ஏற்றுமதி மதிப்பு 4 மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் இந்த வருடத்தின் இறுதியில் அறிமுகம் செய்ய உள்ள ஐபோன் 15 சீரிஸ் போன்களை தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி குழுமத்தால் இயக்கப்படும் தொழிற்சாலையில் தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளது.
தற்போது வெளியுள்ள தகவலின் படி, ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஐபோன் 15 ப்ளஸ் 70 சதவீதமும், ஐபோன் 15 புரோ 70 சதவீதமும், ஐபோன் 15 புரோ மேக்ஸ் 70 சதவீதமும் தயாரிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், ஆப்பிள் நிறுவனம் சீனாவில் மெல்ல, மெல்ல தயாரிப்புகளை குறைத்து, அடுத்தடுத்து இந்தியாவில் எண்ணிக்கையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா, அமெரிக்கா நட்பு:
ஆப்பிள் சீனாவிற்கு அப்பால் அதன் உற்பத்தியை விரிவுபடுத்தும் பல ஆண்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. வாஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான பதட்டங்கள் காரணமாக வர்த்தகத்தில் அதிகரித்து வரும் நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, அதன் முக்கியமான தயாரிப்புகளுக்கான விநியோகச் சங்கிலி பாதிப்புகளைக் குறைப்பதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்காவுடனான தனது உறவை வலுப்படுத்தி வருகிறது. இதனால் தங்களது வர்த்தகத்திற்கு மட்டுமின்றி உற்பத்திக்கும் ஏற்ற இடமாக இந்தியாவை ஆப்பிள் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
ப்ளூம்பெர்க் படி, இந்தியாவில் செயல்படும் கூடுதல் ஆப்பிள் சப்ளையர்கள், பெகாட்ரான் கார்ப் மற்றும் டாடா குழுமத்தால் கையகப்படுத்தப்படும் விஸ்ட்ரான் கார்ப் வசதி உட்பட, ஐபோன் 15 அசெம்பிளியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இட மாற்றத்திற்குக் காரணம் என்ன?
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மாறும் தன்மை தொடர்ந்து பதட்டமாக வளர்ந்து வருவதால் ஆப்பிள் அதன் விநியோகச் சங்கிலியை பல்வகைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மாறும் தன்மை தொடர்ந்து பதட்டமாக வளர்ந்து வருவதால் ஆப்பிள் அதன் விநியோகச் சங்கிலியை பல்வகைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டு வெள்ளை மாளிகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிறகு, ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் சந்தித்தது இதற்கான முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அந்நாட்டின் முன்னணி நிறுவனங்கள் சீனாவுடன் முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்களை மேற்கொள்வதை கட்டுப்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அதேபோல், அமெரிக்க செமிகண்டக்டர்களின் விற்பனைக்கு சீனாவும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இப்படி இருநாடுகளுக்கிடையே நிலவும் வர்த்தக பிரச்சனை காரணமாக, ஆப்பிள் சமீபத்தில் இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரித்தது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் கிட்டத்தட்ட 7 சதவீதத்தை இந்தியாவில் உற்பத்தி செய்துள்ளது. அதேசமயம், சீனாவில் ஐபோன் உற்பத்தி கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவிற்கு பின்னடைவை சந்தித்துள்ளது.
ஆப்பிள் பொதுவாக அதன் புதிய ஐபோன்களின் வரிசையை செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, இந்த ஆண்டு புதுப்பிப்பில் கேமரா மற்றும் புரோ மாடல்களில் மேம்படுத்தப்பட்ட செயலி ஆகிய அப்டேட்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா குழுமத்தால் கையகப்படுத்தப்படும் பெகாட்ரான் மற்றும் விஸ்ட்ரான் தொழிற்சாலையும் விரைவில் இந்தியாவில் ஐபோன் 15 அசெம்பிள் பணிகள் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.