பண்டிகைக் காலத்தில் 7.2 பில்லியன் பார்வையாளர்களை பதிவு செய்து Flipkart சாதனை!
பண்டிகை காலத்தில் ஃபிளிப்கார்ட், 282 மில்லியன் தனி பார்வையாளர்களை பெற்றுள்ளதாகவும், பிரிமியமாக்கல் மற்றும் தனிப்பட்ட தன்மை தேர்வு ஆகியவை இதற்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்கார்ட் இணையதளம், பண்டிகை காலத்தில் அதிகபட்சமாக 7.2 பில்லியன் பார்வையாளர் வருகையை எதிர்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பண்டிகைக் காலத்தில் நிறுவனம், 282 மில்லியன் தனி பார்வையாளர்களை பெற்றுள்ளதாகவும், பிரிமியமாக்கல் மற்றும் தனிப்பட்ட தன்மை தேர்வு ஆகியவை இதற்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இரண்டாம் அடுக்கு நகரங்களில் இது நிகழ்ந்துள்ளது.
“ஆண்டுதோறும் மாறிவரும் வாடிக்கையாளர்கள் தேவைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஃபிளிப்கார்ட் பண்டிகை காலத்தில் பல வகை சேவைகளை வழங்குகிறது. இந்த ஆண்டு எதிர்கொண்டுள்ள அபிரிமிதமான ஆதரவு இ-காமர்ஸ் மீதான எங்கள் ஈடுபாடு மற்றும் இந்தியாவின் கடைக்கோடி பகுதிகளிலும் அந்த வசதியை சாத்தியமாக்கும் விழைவை உறுதிப்படுத்துகிறது,” என ஃபிளிப்கார்ட் வளர்ச்சி பிரிவு தலைவர் ஹரீஷ் சவுத்ரி கூறியுள்ளார்.
"தொழில்நுட்ப ஆற்றல் பயன்பாடு மற்றும் எங்கள் வீச்சை விரிவாக்குவதன் மூலம், லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட ஆன்லைன் வர்த்தக அனுபவத்தை வழங்கி, எங்கள் விற்பனையாளர்களுக்கும் சிறந்த அனுபவம் அளித்துள்ளோம். பண்டிகை காலம், இந்தியாவின் ரீடைல் பரப்பில் முக்கிய அங்கம் வகிக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதோடு பொருளாதார வளர்ச்சிக்கும் உதவுகிறது,” என அவர் மேலும் கூறியுள்ளார்.
மேலும், ஒரு சில விற்பனையாளர்கள் பண்டிகை காலத்தில் ஆண்டு அடிப்படையில் 40 முதல் 50 சதவீத வளர்ச்சி காண்கின்றனர். ஒட்டுமொத்த நோக்கில், இந்த மேடையில் கடந்த ஆண்டைவிட விற்பனையை அதிகரிக்கும் வகையில் மேம்பட்ட பங்கேற்பை எதிர்கொண்டுள்ளனர்,” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபிளிப்கார்ட் பிரத்யேக விற்பனை நிகழ்வான சமரத் எட்டாம் பதிப்பையும் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனித்தன்மை வாய்ந்த பொருட்கள் இடம்பெற்றிருந்தன. நூற்றுக்கணக்கான கலைஞர்கள், நெசவாளர்கள், தொண்டு நிறுவனங்கள், LGBTQ+சமூகங்கள், கிராமப்புற தொழில்முனைவோர், பெண் தொழில்முனைவோர் இதில் பங்கேற்றனர்.
சமரத் விற்பனையாளர்கள் தங்கள் வளர்ச்சியில் 1.6X வளர்ச்சி மற்றும் 16 சதவீத விற்பனை உயர்வை எதிர்கொண்டனர். இந்த நிகழ்வு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமாக அமைந்து, 1.8 மில்லியன் பேரின் வாழ்க்கையிலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Induja Raghunathan