Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

‘யாசகம் பெற்று நடனப் பயிற்சி' - பத்மஸ்ரீ விருது வென்ற திருநங்கை மஞ்சம்மாவின் கதை!

விருது விழாவில் ஜனாதிபதியை ஆசிர்வதித்த திருநங்கை மஞ்சம்மா!

‘யாசகம் பெற்று நடனப் பயிற்சி' - பத்மஸ்ரீ விருது வென்ற திருநங்கை மஞ்சம்மாவின் கதை!

Saturday November 13, 2021 , 2 min Read

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் பிறந்தவர் மஞ்சுநாத ஷெட்டி. பிறப்பால் ஆண் என்றாலும், தனது 15ம் வயதில் தன்னை ஒரு பெண்ணாக உணரத் தொடங்கினார். அந்த உணர்வால் உறவினர்கள் மத்தியில் கேலி கிண்டலை எதிர்கொண்டார்.


மஞ்சுநாத ஷெட்டியின் பெற்றோர்களும் அவரின் மாறுதல்களைக் கண்டு மனமுடைந்ததோடு ஒரு முடிவெடுத்தனர். அதன்படி, ஹூலிகேயம்மா என்ற கோயிலுக்கு மஞ்சுநாத ஷெட்டியை அழைத்துச் சென்ற அவரின் பெற்றோர், ஜோகப்பாதீட்சை என்ற சடங்கை செய்து அவரை தெய்வத்துக்கு திருமணம் செய்துவைத்தனர்.

மஞ்சம்மா

இந்த சடங்கால் மஞ்சுநாத ஷெட்டி மஞ்சம்மா ஆனார். சடங்கை முடித்துவிட்டு மஞ்சம்மாவை அந்த கோவிலேயே விட்டுவிட்டு பெற்றோர் வீடு திரும்பிவிட்டனர். பெற்றோர்கள் கைவிட கோயிலிலே காலத்தை கழித்து கொண்டிருந்தவருக்கு பாலியல் தொல்லை அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் வேறு வழியின்றி அங்கு இருந்து வெளியேறியவர் பெல்லாரி நகர சாலைகளில் யாசகம் பெற்று வாழ்க்கையை நடத்தி வந்தவருக்கு நாட்டுப்புற கலைஞர் காலவ்வா ஜோகதியின் பழக்கம் ஏற்படுகிறது. இந்த பழக்கம் காரணமாக, அவரின் குழுவுடன் இணைந்து ஜோகப்பா நிருத்யா என்ற நாட்டுப்புற நடனத்தை கற்க தொடங்கினார் மஞ்சம்மா.


கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் இந்த நடனத்தை கற்று தேர்ந்தார். அதேசமயம் காலவ்வா மரணமடைய நடனக் குழுவை ஏற்று நடத்தும் வாய்ப்பு மஞ்சம்மாவுக்கு வருகிறது. தனது தலைமையில் ஜோகப்பா நிருத்யா நாட்டுப்புற நடனத்தை பிரபலமாக்கினார் மஞ்சம்மா.


மேலும், நடனத்தில் புதுமைகளையும் புகுத்தினார். நாட்டுப்புற நடனத்தின் வாயிலாக கன்னட பக்தி பாடல்கள், பெண் தெய்வங்களின் பாசுரங்களுக்கு நடனம் அமைத்தார். மாவட்டங்கள் தோறும் தனது நடனத்தை அரங்கேற்றம் செய்து வந்தார். கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமடைந்தார்.

கலை வட்டாரத்தில் பிரபலமாக இருந்த அவரின் கலை சேவையை பாராட்டி கர்நாடக அரசு 'கர்நாடக நாட்டுப்புற அகாடமி விருதை' 2006ம் ஆண்டும், 2010-ல் 'கன்னட ராஜ்யோத்சவா விருது'ம் வழங்கி கௌரவப்படுத்தியது. விருதோடு நில்லாமல் கர்நாடக நாட்டுப்புற அகாடமியின் தலைவராகவும் 2019ம் ஆண்டு மஞ்சம்மாவை நியமித்தது கர்நாடக அரசு. கர்நாடக நாட்டுப்புற அகாடமியின் தலைவர் பதவியை வகித்த முதல் திருநங்கை மஞ்சம்மா ஜோகதி மட்டுமே.

மஞம்ம


இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பத்ம விருது விழாவில், ஜனாதிபதி கையால் பத்மஸ்ரீ விருதுபெற்றுள்ளார் மஞ்சம்மா ஜோகதி. விழாவில் மஞ்சம்மா பெயர் அழைக்கப்பட்டதும் விருதை பெறவந்தவர் முதலில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வணக்கம் தெரிவித்தார்.


பின்னர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தவர் திருநங்கைகளுக்கே உரிய தனித்தன்மையுடன் அவருக்கு ஆரத்தி எடுப்பது ஓல் ஆசிர்வதித்தார். மஞ்சம்மா வாழ்த்தியதைப் பார்த்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தும் மகிழ்ச்சி அடைந்தார்.