Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Motivational Quote | ‘மாற்றத்தின் தொடக்கம், நீங்களே!’ - காந்தியின் அற்புத சிந்தனை தரிசனம்!

‘உலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக நீங்களே இருங்கள்’ என்ற மகாத்மா காந்தியின் அற்புத மேற்கோளும், பின்பற்ற வேண்டிய 3 வழிகளும்.

Motivational Quote | ‘மாற்றத்தின் தொடக்கம், நீங்களே!’ - காந்தியின் அற்புத சிந்தனை தரிசனம்!

Friday July 21, 2023 , 2 min Read

உலகில் மாற்றம் என்பதே நிரந்தரம், மாற்றம் என்ற ஒன்றே மாறாதது என்ற சொற்றொடரின் உண்மையான அர்த்தத்தை மகாத்மா காந்தி மிகச் சரியாகவே அவதானித்துள்ளார்.

“Be the change that you wish to see in the world.”

உலகில் நாம் எதை மாற்ற வேண்டும், எது மாற வெண்டும் என்று கருதுகிறோமோ, விரும்புகிறோமோ அந்த மாற்றமாக முதலில் நாம் இருக்க வேண்டும் என்ற காந்தியின் ஞானச்சொல் இதுதான்:

“உலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக இருங்கள்!”
gandhi

இந்த மேற்கோள் நம் வாழ்விலும் சமூகத்திலும் நேர்மறையான மாற்றத்தை உருவாக்கும் திறன், நம் அனைவருக்கும் உள்ளது என்பதை ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டலாக நமக்கு எடுத்துரைக்கின்றது.

இந்த ஞானத்தின் ஆழமான அர்த்தத்தை இக்கட்டுரையில் ஆராய்வோம். மேலும், ஒரு சிறந்த உலகத்தை உருவாக்க, இது எவ்வாறு நம்மை ஊக்குவிக்கும் என்பதையும் பார்ப்போம்.

உலகிற்கு ஓர் எடுத்துக்காட்டாக வாழ்தல்

உலகில் நாம் காண விரும்பும் மதிப்புகள் மற்றும் கொள்கைகளை உள்ளடக்கியதாக காந்தியின் செய்தி நமக்கு அறிவுறுத்துகிறது. எதையும் மற்றவர்கள் செய்வார்கள், மாற்றங்களை பிறரே செய்ய வேண்டும், அவர்களே செய்வார்கள் என்று காத்திருப்பதற்குப் பதிலாக, நம்முடைய செயல்களுக்கு நாம் பொறுப்பேற்று முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

இந்தத் தத்துவம், நமது நம்பிக்கைகள் மற்றும் விழுமியங்களுடன் சீரமைந்து வாழ, செயலூக்கத்துடன் செயல்படவும், தன்னுணர்வுடன் கூடிய முயற்சியை மேற்கொள்ளவும் நம்மை ஊக்குவிக்கிறது. அவ்வாறு செய்வதன் மூலம், ஒரு சிறந்த உலகத்திற்கான நமது தேடலில் நம்முடன் சேர மற்றவர்களை ஊக்குவிக்க முடியும்.

‘மாற்றம்’ என்பதாக நீங்களே ஆவதற்கான 3 வழிகள்

1. சுய விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ளுதல்: நாமே மாற்றத்தின் உந்துவிசையாக, கிரியா ஊக்கியாக மாறுவது நம்மையும் நமது மதிப்புகளையும் புரிந்துகொள்வதில் தொடங்குகிறது. உங்கள் நம்பிக்கைகள், மதிப்புகள், உலகில் நீங்கள் ஏற்படுத்த விரும்பும் தாக்கம் போன்றவற்றை பிரதிபலிக்க நேரம் ஒதுக்குங்கள். உங்கள் வாழ்க்கையில் இந்த மதிப்புகளுடன் ஒத்துப்போகும் மாற்றங்களைச் செய்யக்கூடிய பகுதிகளைக் கண்டறியுங்கள். சுய விழிப்புணர்வை வளர்ப்பதன் மூலம், நாம் விரும்பும் மாற்றத்தை பிரதிபலிக்கும் வாழ்க்கையை உருவாக்க ஆரம்பிக்கலாம்.

2. கருணையையும் பரிவையும் பழகுங்கள்

மாற்றங்களைச் செயல்படுத்துவதற்கு, நம்மைப் பற்றியும் மற்றவர்களிடமும் இரக்கமும் அனுதாபமும் இருக்க வேண்டும். இதன் பொருள் மற்றவர்களின் சாதி, மத, வர்க்கப் பின்னணி அல்லது அவர்களின் சமயம் உள்ளிட்ட நம்பிக்கைகளைப் பொருட்படுத்தாமல், கருணை புரிதல் மற்றும் மரியாதையுடன் நடத்துவதன் மூலமும் பிறர் மீதான அனுதாபம் அல்லது பரிவு குணாம்சங்களை வளர்ப்பதன் மூலமும் நேர்மறையான அலைகளை பரப்புவதன் மூலம் மற்றவர்களையும் அவ்வாறு நடக்கச் செய்ய ஊக்குவிக்கும் ஒரு சிற்றலை விளைவை உருவாக்க முடியும்.

3. உங்கள் சமூகத்தில் நடவடிக்கை எடுங்கள்

மாற்றமாக இருப்பது என்பது நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை மேம்படுத்த உறுதியான நடவடிக்கை எடுப்பதாகும். உங்கள் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான ஈடுபாடு கொண்ட வாய்ப்புகளைத் தேடுங்கள். அது தன்னார்வத் தொண்டு, உள்ளூர் முன்முயற்சிகளை ஆதரித்தல் அல்லது உங்கள் மதிப்புகளுடன் ஒத்துப்போகும் சமூக காரணங்களுக்காக வாதிடுவது என்பதாக இருக்கலாம்.

சிறிய செயல்கள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இதன்மூலம் சிறுகச் சிறுக அனைவரும் ஒன்றாக, அர்த்தமுள்ள மாற்றத்தை உருவாக்க முடியும்.
Gandhi motivation

“உலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக இருங்கள்” என்ற மகாத்மா காந்தியின் பொன்மொழி, செயலுக்கான ஊக்கமளிக்கும் அழைப்பாக செயல்படுகிறது. இது நம் வாழ்க்கையை கட்டுப்படுத்தவும், நேர்மறையான மாற்றத்தின் காரணிகளாகவும் நாம் மாற உதவுகிறது.

சுய விழிப்புணர்வை வளர்ப்பதன் மூலமும், இரக்கம் மற்றும் அன்பு, பரிவு, அனுதாபம் ஆகியவற்றை கடைப்பிடிப்பதன் மூலமும், நமது சமூகங்களில் நடவடிக்கை எடுப்பதன் மூலமும், நாம் காண விரும்பும் மாற்றத்தை உருவாக்கி, இந்தப் பயணத்தில் மற்றவர்களை நம்முடன் சேர ஊக்குவிக்கலாம்.

ஒரு சிறந்த உலகத்தை உருவாக்கும் சக்தி நம் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்தப் பொறுப்பை ஏற்று முன்னுதாரணமாக வழிநடத்துவது நம் கையில்தான் உள்ளது.

மூலம்: Nucleus_AI | தமிழில்: ஜெய்


Edited by Induja Raghunathan